கேம்பிலோபேக்டர் நோய்த்தொற்று என்றால் என்ன?
கேம்பிலோபேக்டர் நோய்த்தொற்று என்பது ஓர் வகை உணவு நச்சேற்றம் ஆகும். இது பெரும்பாலும் லேசானதாக இருக்கும் ஆனால் இது குழந்தைகள், முதியோர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் இல்லாதவர்களுக்கு இறக்கும் அபாயம் உண்டாக்குகிறது. இந்த நோய்த்தொற்று எந்த வயதினரையும் தாக்கலாம். இந்த நோயின் நிகழ்வு மற்றும் நோய்த்தாக்கம் கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுதும் அதிகரித்துள்ளது. ஆனாலும் இந்த நோய் இந்தியாவில் மிகவும் குறைவாக உள்ளதாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
இதன் பொதுவான அறிகுறிகள் பாக்டீரியாவுக்கு வெளிப்பட்ட 2 -4 நாட்களுக்குள் ஏற்படும். அவை பின்வருமாறு:
- வயிற்று வலி மற்றும் பிடிப்புகள்.
- காய்ச்சல்.
- குமட்டல் மற்றும் வாந்தி.
- தளர்வான மலம், அரிதாக இரத்தத்துடன்.
சில பேருக்கு எந்த வித அறிகுறியும் ஏற்படாது. பக்டீரேமியா (இரத்தத்தில் பாக்டீரியா இருத்தல்), கல்லீரல் வீக்கம் மற்றும் கணையம் வீக்கம் ஆகியவை இதில் ஏற்படும் சிக்கல்கள்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
இந்த நோய்த்தொற்று பெரும்பாலும் கேம்பிலோபேக்டர் வகையால் ஏற்படுகிறது. இது மென்மையான குடல் புறணியை தாக்கும். அதற்க்கு பிறகு மற்ற உடல் பகுதிகளைத் இது தாக்கும். வேகவைத்த இறைச்சி அல்லது கோழி, அசுத்தமான உணவு, தண்ணீர், பதப்படுத்தப்படாத பாலை அருந்துவது மற்றும் தொற்று உடைய மிருகங்களுடன் தொடர்பு ஆகியவை இதன் மூலக் காரணங்கள் ஆகும். குடல் நோய்த்தொற்று அல்லது பயணிகள் வயிற்றுபோக்கு போன்றவற்றிற்கு இதுவும் ஓர் காரணம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
உங்கள் மருத்துவர் பின்வரும் சோதனைகளைப் பரிந்துரைக்கலாம்:
- முழு இரத்த எண்ணிக்கை சோதனை.
- வெள்ளை இரத்த அணுக்கள் உள்ளதா என்று அறிய மலம் சோதனை.
- கேம்பிலோபேக்டர் இனம் உள்ளதா என்று அறிய மலம் வளர்ச்சி ஊடகம்.
பெரும்பாலும் இந்தநோய்த்தொற்று தானாகவே குணமடைந்துவிடும், அனால் பாதிக்கப்பட்ட சிலருக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம். இந்த சிகிச்சையின் முக்கிய இலக்கு உடல் வறட்சி (நீர்ப்போக்கு) அடையாமல் பார்த்துக்கொள்ளுதல் மற்றும் வாழ்கை முறையை மேம்படுத்துதல் ஆகும். ஒருவர் மிகவும் மோசமாக இருந்தால் அவருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சை அளிக்கப்படும். மருந்துகளை விட சுய உதவி தான் முதல் தேவை. அறுவை சிகிச்சை மேற்கொண்ட நபர்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்படலாம்.
சுய உதவி அறிவுரைகள்:
- 8 - 10 குவளை தண்ணீர் அருந்த வேண்டும்.
- தளர்வான மலம் ஏற்படும்பொழுது ஏதேனும் திரவம் அருந்த வேண்டும்.
- புதிதாக மற்றும் முறையாக சமைத்த உணவு மற்றும் சூடான உணவு உன்ன வேண்டும், அவை பாக்டீரியாவை அழிக்கும்.
- வெளி இடங்களில் தண்ணீர் அருந்த வேண்டாம்.
- கை கழுவியபிறகே உணவு அருந்த வேண்டும்.
இந்த நோய்த்தொற்று பொதுவாக லேசானது ஆனால் கவனிக்காமல் விட்டால் பயங்கர விளைவுகளை உண்டாக்கலாம். கேம்பிலோபேக்டர் நோய் தொற்று சரியான பராமரிப்புடனும் முறையான சுகாதாரத்துடனும் இருந்தால் குணப்படுத்தமுடியும்.