குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சி - Croup in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 30, 2018

March 06, 2020

குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சி
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சி

குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சி என்றால் என்ன?

குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சி என்பது ஒரு சுவாச நோயாகும், இது பொதுவாக ஆறு மாதம் முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளை பாதிக்கிறது. இது குரல்வளை, சுவாசக் குழாய் மற்றும் மூச்சுக்குழாயின் வீக்கத்தினால் மேல் சுவாசவழியில் ஏற்படும் ஒரு நிலையாகும். இந்த வீக்கம் இறுதியில் காற்றுப்பாதையில் அடைப்பு ஏற்படுத்தி சத்தமான இருமலுக்கு வழிவகுக்கிறது.

குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சியின் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சியின் அறிகுறிகள் பொதுவாக இரவிலேயே மோசமாகயிருக்கும். இவை குழந்தை அமைதியாக இருக்கும்போதோ அல்லது எரிச்சலடையும்போதோ அவற்றிற்கு தகுந்தாற்போல் வேகமாக மாறுபடும்.

  • தாமதமான அறிகுறிகள்:
    • கரகரப்பான குரல்.
    • கடுமையான, 'குரைக்கும்' இருமல் (நீர் நாய் குறைத்தல் என அறியப்படுகிறது).
    • சுவாசித்தலின் போது உயர்த்தொனியில் ஏற்படும் சத்தம் (பெருமூச்சு விடுதல்).
    • வேகமாகவோ அல்லது சிரமப்பட்டோ சுவாசித்தல்.
  • கடுமையான சந்தர்ப்பங்களில் நிகழும் அறிகுறிகள்:
    • குழப்பம் மற்றும் சோம்பலான நடவடிக்கை.
    • உணவு உண்ணுதலிலும் மற்றும் நீர் அருந்துதலிலும் உருவாகும் சிக்கல்கள்.
    • பேசும் போது சிரமம்.
    • நெஞ்சு உள்ளிழுக்கப்படுதல் (சுவாசிக்கும் போது மார்பின் கீழ் சுவர் பகுதி உள்ளே செல்வது).
    • வாயை சுற்றி நீல நிற இளஞ்சாயமாக இருத்தல்.

அதன் முக்கிய காரணங்கள் யாவை?

குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சி என்பது பாராஇன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மூலமாக உண்டாகும் மிகவும் பொதுவான ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதோ அல்லது தும்மும்போதோ காற்றில் பரவுகின்ற இருமல் நீர்த்துளிகள் வழியாகவே முதன்மையாக பரவுகிறது.

சுவாசக்குழாய் தடத்தில் ஏற்படும் தொற்று காரணமாக எடிமா மற்றும் மேல் காற்றுப்பாதை அழற்சி மற்றும் லாரென்ஜியல் சளி ஆகியவைகளின் விளைவினால் நுரையீரலுக்கு காற்று செல்லும் பாதையில் சுருக்கம் ஏற்படுகிறது. இது சுவாசப்பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது.

இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

மருத்துவ வரலாறு மற்றும் ஆய்வு சோதனைகளின் உதவி மூலம் குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சியை  கண்டறியலாம்.

உங்கள் மருத்துவர் விசாரணைக்காக சில சோதனைகளை பரிந்துரைக்கலாம், அவை பின்வருமாறு:

  • மார்பு மற்றும் கழுத்து ஏக்ஸ்-கதிர்கள் (எக்ஸ்ரே).
  • நோய்தொற்றை கண்டறிவதற்கும் மற்றும் உறுதிப்படுத்துவதற்கும் இரத்த பரிசோதனை மேற்கொள்தல்.

நோயாளியின் வயது, சுகாதாரம் மற்றும் வரலாறு ஆகியவற்றைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிகிச்சைகள் பின்வருமாறு:

  • சுவாச சிரமங்களை நிவர்த்தி செய்ய உள்ளிழுக்கும்/இன்ஹேல்ட் மருந்துகள்.
  • ஸ்டீராய்டுகள் (ஊசி அல்லது வாய்வழியாக செலுத்தப்படுபவை).
  • ஒவ்வாமை அல்லது ரெஃப்ளக்ஸ்கான மருந்துகள்.

சுய-பாதுகாப்பு:

  • இது உங்கள் குழந்தையை அமைதிப்படுத்த உதவுகிறது. அமைதியில்லாமல் இருந்தால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம்.
  • குழந்தைக்கு ஏராளமான திரவங்களை கொடுக்கலாம், ஆனால் சிறிய அளவுகளில் கொடுக்கவேண்டும்.
  • குழந்தையை நேராக உட்காந்திருத்தல் வேண்டும் அல்லது சுவாசத்தை எளிதாக்குவதற்கு படுக்கையில் தலையணையுடன் சாய்த்து படுக்கவைக்கலாம்.
  • வீட்டில் புகைப்பிடிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். புகைபிடித்தல் இந்த அழற்சியின் அறிகுறிகளை மேலும் மோசமடையச்செய்யும்.



மேற்கோள்கள்

  1. St. Louis Children's Hospital. [Internet]. Washington University, St. Louis, Missouri. Croup
  2. Dustin K. Smith. et.al. Croup: Diagnosis and Management. American Academy of Family Physicians. [Internet]
  3. Candice L. Bjornson. Croup in children. CMAJ. 2013 Oct 15;185(15):1317-23. PMID: 23939212
  4. Batra P. An evidence-based approach to evaluation and management of the febrile child in Indian emergency department. Int J Crit Illn Inj Sci. 2018 Apr-Jun; 8(2): 63–72. PMID: 29963408
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Croup