கோஸ்டோகோண்ட்ரிடிஸ் (விலாக் குருத்தெலும்பு வீக்கம்) என்றால் என்ன?
மார்பகப் எலும்புடன் இணைக்கப்பட்டிருக்கும் குருத்தெலும்பில் அழற்சியே கோஸ்டோகோண்ட்ரிடிஸ் என பண்பிடப்படுகிறது . கடைசி இரண்டு விலா எலும்புகளைத் தவிர, மற்ற அனைத்து விலா எலும்புகளும் மார்பக எலும்புடன் இணைந்துள்ளன. இந்த சுய-கட்டுப்பாட்டு அழற்சி மார்பக வலியினை ஏற்படுத்துகிறது, இது கோஸ்டோகோண்ட்ரிடிஸின் ஒரு பொதுவான அறிகுறியே ஆகும்.
கோஸ்டோகோண்ட்ரிடிஸ் பின்வரும் பெயர்களாலும் அறியப்படுகிறது:
- கோஸ்டா-ஸ்டெர்னல் நோய்க்குறி.
- பிரசந்தல் கொன்ட்ரோட்னியா.
- முன்புற மார்பு சுவர் நோய்க்குறி.
அதன் முக்கிய அறிகுறிகள் மற்றும் நோய்க்குறிகள் யாவை?
கோஸ்டோகோண்ட்ரிடிஸின் முக்கிய அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் வலியுடன் பின்வரும் பண்புகளையும் உட்கொண்டிருக்கும்:
- இடது மார்பக எலும்பில் அடிக்கடி வலி ஏற்படுதல்.
- கூர்மையான மற்றும் வலுமிகுந்த வலியை உணர்தல்.
- நோயாளி அழுத்தம்-ஏற்படுவது போன்ற உணர்வுடன் கூடிய வலியை அனுபவிப்பது.
- ஆழ்ந்த மூச்சு, இருமல், கடினஉழைப்பு மற்றும் மேல் உடல் இயக்கம் ஆகியவை வலியை அதிகப்படுத்துகின்றன.
- ஒன்றுக்கு மேற்பட்ட விலா எலும்பு பாதிப்படைந்திருப்பது
கோஸ்டோகோண்ட்ரிடிஸின் முக்கிய காரணங்கள் என்ன?
கோஸ்டோகோண்ட்ரிடிஸே முன்புற மார்புச் சுவர் வலிக்கான மிகப் பொதுவான காரணம் ஆகும். வழக்கமாக, இதற்கு குறிப்பிடும் அளவிற்கு எந்த அடிப்படை காரணமும் இருப்பதில்லை. மார்பக எலும்பை விழா எலும்புடன் இணைக்கும் குருத்தெலும்பில் உண்டாகும் அழற்சியே கோஸ்டோகோண்ட்ரிடிஸ்க்கு வழிவகுக்கிறது.
அடிக்கடி ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- மார்பகத்தில் காயம் அல்லது அடி.
- அதிகபடியான-உடற்பயிற்சி அல்லது நாள்பட்ட கடுமையான இருமலின் நிகழ்வுகள்.
- கீல்வாதம் தொடர்பான சிகிச்சைகள்(மேலும் வாசிக்க: கீல்வாதத்திற்கான சிகிச்சை)
- விலா எலும்பின் மூட்டில் பாதிபேற்படுத்தும் சில தொற்றுக்கள், உதாரணத்திற்கு காசநோய் மற்றும் சிபிலிஸ்.
- நுரையீரல், மார்பகம் அல்லது தைராய்டு புற்றுநோய் ஆகியவை நெஞ்சு பகுதிகக்கு பரவுதல்.
கோஸ்டோகோண்ட்ரிடிஸ் என்பது டைடெஸ்'ஸ் சிண்ட்ரோமுடன் தொடர்புடையது, இது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வலிமிகுந்ததாகவும், வீக்கத்துடன் இருக்கும்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே கோஸ்டோகோண்ட்ரிடிஸின் அதிக ஆபத்து உள்ளது. இது ஆண்களை விட பெண்களிலேயே அதிகமாக இருக்கின்றது.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
கோஸ்டோகோண்ட்ரிடிஸின் நோய் கண்டறிதல் விலா எலும்பு பகுதியின் மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனையை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் மருத்துவர் கடுமையான இருமலோ இருத்தலோ அல்லது கடுனமான உடற்பயிற்சியை பற்றிய வரலாற்றை கேட்கலாம். கீழ்வரும் அடிப்படை காரணங்களை கண்டறிய முன்புற மார்பக எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ்-ரே) தேவைப்படலாம்.
- தோல் பட்டை மற்றும் மார்பக பகுதி மூட்டுகளில் ஏற்படும் கீல்வாதம்.
- நோய்த்தொற்று அல்லது நியோப்லாசமினால் விலாக் குருத்தெலும்பில் ஏற்படும் அழிவு.
- ஃபைப்ரோமியால்ஜியா.
- மார்பக கூட்டிற்குள் ஏற்படும் ஹெர்பெஸ் சோஸ்டர்.
கோஸ்டோகோண்ட்ரிடிஸின் சிகிச்சை முறைகள் கீழ்கண்டவாறு:
- வலிநீக்கிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள்.
- கடுமையான சந்தர்ப்பங்களில் தேவைப்பட்டால் குறிப்பிட்டப்பகுதிக்கான மயக்க மருந்து அல்லது ஸ்டீராய்டு ஊசகள் பயன்படுத்தப்படலாம்.
- டாக்டர் அறிவுறுத்தலின்படி மென்மையான ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சிகள்.
சுய பராமரிப்பு:
- சூடான அல்லது குளிர் ஒத்தடங்கள்.
- கடுமையான உடல்ரீதியான நடவடிக்கைகள் அல்லது மன அழுத்தத்தைத் தவிர்த்தல்.
(மேலும் படிக்க: அழற்சி நோய் சிகிச்சைகள் ).