அன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி என்றால் என்ன?
அன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களில் 15% முதல் 20% வரையிலான மக்களை பாதிக்கும் ஒரு தோல் சார்ந்த பிரச்சனையாகும். இது உடல் முழுவதும் அல்லது சில பகுதிகளில் உண்டாகும் தடிப்பு மற்றும் கடுமையான அரிப்புகளை கொண்டு பண்பிடப்படுகின்றது. மக்களின் தொழில் முறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் சுற்றியுள்ள சூழல்நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில், அன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சியின் நிகழ்வு நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. இது ஒவ்வாமை அல்லது எரிச்சலூட்டிகளின் காரணமாகவும் ஏற்படலாம். எரிச்சலூட்டும் தொடர்பு தோலழற்சியே இவ்விரண்டிலும் மிக பொதுவான வேறுபாடுகளை உடையது (80%).
நோயின் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
அன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி பொதுவாக ஒவ்வாமையூக்கிகள் அல்லது எரிச்சலூட்டிகள் வெளிப்பாடு ஏற்படும் பகுதிகளிலேயே ஏற்படுகின்றது. அறிகுறிகள் வெளிப்படுவதற்கு சில நிமிடங்களில் இருந்து பல மணிநேரம் கூட ஆவதோடு இது இரண்டு முதல் 4 வாரங்கள் வரை நீடித்திருக்கக் கூடியது. ஒவ்வாமை-வகை அன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி நோயில் காணப்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
எரிச்சலூட்டிகள்-வகையில் காணப்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- கொட்டுதல் மற்றும் எரிச்சல் உணர்வு.
- எரிதியேமா.
- வீக்கம் அல்லது தோல் உரிதல்.
தொடர்பு யூரிடிக்ரியா, ஹீவ்ஸ் எனவும் அறியப்படும், இது பொதுவாக குறைந்த அளவில் காணப்படும் வடிவம்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
தினசரி செயல்முறைகளின் காரணமாக சருமத்தின் மீது ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் தோலழற்சியை ஏற்படுத்தலாம். பிற காரணங்கள் பின்வருமாறு:
- சோப்புகள், சலவைப் பொருட்கள், அமிலங்கள் அல்லது காரங்களினால் ஏற்படும் தொடர்பு எரிச்சலூட்டும் தோலழற்சி நோயை மோசமடையச்செய்கிறது.
- ஒவ்வாமை-வகை தோலழற்சி மரபணு ரீதியாக இணைக்கப்பட்டதினாலோ அல்லது முந்தைய ஒவ்வாமையின் வெளிப்பாடு காரணமாகவோ ஏற்படலாம். இதன் முக்கிய தூண்டுதல்களில் அழகு பொருட்கள், மருந்துகள், சில துணி வகைகள், உணவு, செடிகள், ரப்பர் மற்றும் விஷ படர்க்கொடி ஆகியவை அடங்கும்.
- உலோகங்கள், வாசனை திரவியங்கள், ஆண்டி பாக்டீரியல் களிம்புகள் மற்றும் பார்மால்டிஹைடு, கோகமிடோப்ரோப்பயில் பேட்டைநே, பாரா-பெனிலைனேயமின் போன்ற சில ரசாயனங்களின் வெளிப்பாடு ஆகியவை அன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி ஏற்படுவதற்கான சாத்தியமுள்ள காரணங்களாகும்.
இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
கண்டறிதல் பின்வரும் முறைகளில் செய்யப்படுகிறது:
- மருத்துவ வரலாறு: வெளிப்பாட்டின் நேரம் மற்றும் காலத்தை உள்ளடக்கியவை.
- உடல் பரிசோதனை: அறிகுறிகள் மற்றும் தடிப்பின் வடிவங்களை பொதுவாக மதிப்பீடு செய்தல்.
- ஆய்வக சோதனைகள்: தொற்றுநோய்களை சோதிக்க மேற்கொள்ளப்படுவது.
- உணர்திறனை மதிப்பீடு செய்ய பேட்ச் சோதனைகள் செய்யப்படுகின்றன.
சிகிச்சை முறைகளுள் அடங்குபவை பின்வருமாறு:
- மேற்பூச்சு ஸ்டீராய்டுகள்- அழற்சி மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்த பயன்படுகிறது.
- ஆண்டிஹிச்டமின்கள்- அரிப்பை கட்டுப்படுத்த பயன்படுகிறது.
- மேற்பூச்சு தடுப்பாற்றலிகள்- நோயெதிர்ப்பு எதிர்வினையை கட்டுப்படுத்த பயன்படுகிறது.
- மேற்பூச்சு நுண்ணுயிர் எதிர்ப்பிகள்.
- திட்டமிடுதலின்படி கொடுக்கப்படும் ஸ்டீராய்டுகள்- குறிப்பிட்ட பகுதியில் கொடுக்கப்படும் ஸ்டீராய்டுகள் வேலை செய்யாதபோது, வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுகின்றன.
- போட்டோதெரபி அதாவது, ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தின் வெளிச்சத்தை சருமத்தில் வெளிப்படுத்துதலின் மூலம், பாதிக்கப்பட்ட பகுதியின் வீக்கத்தை குறைக்கலாம்.
சுய-பராமரிப்பு குறிப்புகள் பின்வருமாறு:
- கடுமையான அறிகுறிகளுக்கு, குளிர்ந்த ஒத்தடம் கொடுத்தல் நமைச்சலில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
- ஈரப்பதத்தை தக்கவைக்கக்கூடிய லோஷன்கள் அல்லது கிரீமகளின் பயன்பாடு இதற்கு உதவலாம்.
- அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்படுத்தும் காரணிகளை தவிர்த்தல் வேண்டும்.
- சொறிதலைத் தவிர்த்தல் நன்று.
- குளிர்ந்த நீரில் நனைந்து குளித்தல் அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்க உதவுகிறது.
- பாதுகாக்கக்கூடிய கையுறைகள் மற்றும் எரிச்சல் ஏற்படுத்தாத துணி வகைகளை அணிதல்.
- நிறமாற்றம் அல்லது மற்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் அணிகலன்களை அணிதலை தவிர்த்தல்.
வாழ்க்கைமுறையில் செய்யக் கூடிய மாற்றங்கள் பயனுள்ளதாயிருப்பதோடு விரைவான நிவாரணமளிக்கவும் உதவுகிறது:
- தியானம்.
- யோகா.
- பொழுதுபோக்கு உத்திகள்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றம் மருந்துகளுடன் சேர்ந்து சப்ளிமெண்ட்டுகளாக உதவுவதால் அவற்றை பின்பற்றுவதன் மூலம் அன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி நோயை தடுக்கலாம்.
(மேலும் வாசிக்க: தோல் நோய்களுக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை)