பிறப்பு இதய நோய் (குறைபாடு) என்றால் என்ன?
பிறப்பு இதய நோய்கள் அல்லது பிறப்பு இதய குறைபாடுகள் என்பது இதயம் அல்லது அதன் இரத்த நாளங்களின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட பொதுவான கட்டமைப்பு குறைபாடுகளே ஆகும். இதய அறைகளுக்கு இடையே ஏற்படும் ஓட்டை(இடைச்சுவரில் /செப்டல் சுவரில் உண்டாகும் குறைபாடு), இதயத்தின் பிரதான இரத்தக் குழாய் குறுகுதல் (பெருநாடி/பெருந்தமனி) மற்றும் நுரையீரல் நரம்பின் குறுக்கம் (நுரையீரலில் உள்ள நரம்பு குறுகுதல்) போன்றவை சில பொதுவான பிறப்பு இதய நோய்களாகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பெரியவர்களுக்கு, சிகிச்சையளிக்காமல் விட்டுவிடுகையில் மேலும் நோய் தொடர்ந்து இருந்தால், பின்வரும் சில அறிகுறிகள் காணப்படலாம்:
- சுவாசிப்பதில் ஏற்படும் இடர்பாடு (டிஸ்ப்நோயி).
- களைப்பு மற்றும் உடற்பயிற்சி சகிப்புத்தன்மையின்மை.
பல சந்தர்ப்பங்களில், நோயாளிகளிடம் இந்த நோய் மிகக் குறைந்த அளவிலான அறிகுறிகளையோ அல்லது அறிகுறிகள் மற்றும் அடையாளங்களின் வெளிப்பாடுகளே இல்லாமலும் கூடயிருக்கின்றன.
கடுமையான சந்தர்ப்பங்களில் காணப்படும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:
- வேகமாக மூச்சு விடுதல்.
- அதிகமாக வியர்த்தல்.
- நெஞ்சு வலி.
- நீலம்பாய்தல் - சருமம், உதடுகள் மற்றும் விரல்கள் நீல நிறத்தில் தோன்றும்.
- களைப்பு/சோர்வு.
- அசாதாரண இரத்த ஓட்டம்.
- விருத்தியடைவதில் தோல்வி .
- மூச்சுத்திணறல்/டிஸ்ப்நோயி காரணமாக குழந்தைகள் சரியாக உணவு உட்கொள்ளாதிருத்தல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
தாயின் கருப்பையில் உள்ள கருவின் ஆரம்பகால வளர்ச்சியின் போது உள்புறசூழலில் ஏற்படும் இடையூறுகளே மிகவும் பொதுவான காரணமாக அமைகிறது. காரணிகள் பின்வருமாறு:
- தொற்றுநோய்கள்.
- தீங்கு விளைவிக்கும் மருந்துகளால் கர்ப்பிணித் தாய்களுக்கு ஏற்படும் வெளிப்பாடு.
- கர்ப்பிணித் தாய் புகை பிடித்தல் அல்லது மது அருந்துதல்.
- சுற்றுசூழல் காரணிகள் மற்றும் சமூகத்தின்-மக்கள் தொகை.
பிற காரணங்கள் பின்வருமாறு:
- தவறான மரபணுக்கள் மற்றும் குரோமோசோம்கள்.
- பிறப்பு இதய குறைபாடுகள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருக்கும் பட்சத்தில் குடும்ப வரலாறு.
- பெற்றோர்களிடம் இருக்கும் நோய்கள் குழந்தைகளுக்கும் பிறப்பு இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை விளைவிக்கும்.
இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
o அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள் கருவின் பிறப்பு இதய நோய் குறைபாடுகளை கண்டறிய உதவக்கூடும். சில சந்தர்ப்பங்களில், இது ஆரம்பகாலத்திலேயே அதாவது 20 வாரங்களிலேயே கண்டறியப்படலாம். (மேலும் வாசிக்க: கர்ப்ப கால அல்ட்ராசவுண்ட்சோதனைகள்).
o பிறப்புறுப்பு (கரு) எக்கோகார்டியோகிராஃபி என்பது கருவின் பிறப்பு இதய நோய் குறைபாடுகளை கண்டறிய உதவும்.
- குழந்தை பருவத்தில்:
முறையான நோய் கண்டறிதலுக்கு நோயாளியின் முழுமையான மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனைகளோடு பின் வரும் சோதனைகளும் தேவைப்படுகிறது:
- எலக்ட்ரோகார்டியோகிராம் (இ.சி.ஜி).
- மார்பு எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை.
- எக்கோகார்டியோகிராம்.
- ஸ்கிரீனிங்காக பல்ஸ் ஆக்ஸிமெட்ரி சோதனை.
- முதிர்ந்த காலத்தில்:
உடலியல் பரிசோதனையுடன் பல நோய்கண்டறிதல் சோதனைகள் பெரியவர்களில் காணப்படும் பிறப்பு இதய நோய் குறைபாடுகளை கண்டறிய மருத்துவருக்கு உதவுகின்றன.அவை பின்வருமாறு:
- எக்கோகார்டியோகிராம்.
- டிரான்செஸ்டேஜியல் எகோகார்டுயோகிராம்.
- ஊடுருவும் அல்ட்ராசவுண்ட்(ஐ.வி.யூ.எஸ்).
- கார்டியாக் வடிகுழாய்.
- மார்பு எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை.
- எலக்ட்ரோகார்டியோகிராஃபி.
- மக்னடிக் ரிசொனன்ஸ் இம்மேஜிங்(எம்.ஆர்.ஐ).
- பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி (பி.இ.டி) ஸ்கேன்.
குறைபாடுகளின் தீவிரத்தை பொறுத்து நோயாளிகளுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது.அவை பின்வருமாறு:
- எந்த சிகிச்சையும் இல்லை.
- குறிப்பிட்ட இடைவேளையில் இதயநோய் நிபுணரிடம் உடல்நிலையை பரிசோதித்து கொள்தல்.
- எண்டோபார்டிடிஸ் ப்ரோபிலாக்ஸிஸ்க்கான மருந்துகளையும் உட்கொள்தல்.
- குறைபாடுகளை சரி செய்யவோ அல்லது அதை முழுதாக மூடுதலுக்கோ துளையிட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சை.