நாள் பட்ட சாற்றனைய இரத்தப் புற்று நோய் (சிஎம்எல்) என்றால் என்ன?
நாள்பட்ட சாற்றனைய இரத்தப் புற்றுநோய் (சிஎம்எல்) என்பது நாள்பட்ட மைலாய்ட் லுகேமியா என்றும் அழைக்கப்படுகிறது, இது இரத்த அணுக்கள் மற்றும் எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் ஒரு புற்றுநோய் ஆகும். எலும்பு மஜ்ஜை என்பது இரத்த அணுக்களை உற்பத்தி செய்யுக்கூடிய எலும்புகளின் மென்மையான பகுதியாகும். சிஎம்எல் என்பது வெள்ளை இரத்த அணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியைக் கொண்டுள்ள இரத்த புற்று நோயின் ஒரு வகையாகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- சி.எம்.எல் இருக்கும் நோயாளிகள், நோயின் நாள்பட்ட கட்டத்தில் இருக்கும் போது எந்த வித அறிகுறிகளும் காட்டமாட்டார்கள்.
- அடுத்த கட்டமான, நோய் துரிதமடைகின்ற கட்டத்தில், இரவு நேரங்களில் அதிகமாக வியர்த்தல், சோர்வு, எடை இழப்பு மற்றும் தொடர் காய்ச்சல் ஆகிய பொதுவான அறிகுறிகள் காணப்படும்.
- நோயாளியிடத்தில்,நோய் வெடிக்கும் அடுத்த கட்டத்தில், தீவிரமான அறிகுறிகள் காணப்படும். இது வலிப்பு, நோய்த்தொற்றுகள் மற்றும் எதிர்பாராத இரத்தக்கசிவு ஆகியவை அடங்கும்.
- வெள்ளை இரத்தக் அணுக்களின் எண்ணிக்கை மற்றும் கட்டமைப்பில் தோன்றும் அசாதாரணத்தினால், மண்ணீரலும் பாதிக்கப்படுகின்றது. மண்ணீரல் விரிவாக்கத்தினால் நோயாளிக்கு மேல் வயிற்றில் வலி போன்றவை ஏற்படலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
- துரதிருஷ்டவசமாக, சிஎம்எல்ளுக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
- அதிக அளவிலான கதிர்வீச்சு வெளிப்பாடு இதன் முதன்மையான ஆபத்து காரணியாகும்.
- இந்த புற்றுநோயானது மனித குரோமோசோம் 22-இன் குறைபாடுடன் தொடர்புடையது, இதுவே சிஎம்எல் நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களிடம் பொதுவாக காணப்படுகிறது. இந்த குரோமோசோம், பிலடெல்பியா குரோமோசோம் என அழைக்கப்படுகிறது.
- நடுத்தர-வயது தனிநபர்களிடம் இந்த நிலை மிகவும் பொதுவானது, மேலும் பெண்களை விட ஆண்களே இந்த நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
- உங்கள் மருத்துவருக்கு இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் நாடி போன்ற முக்கியக்கூறுகளை கணிப்பதற்கு ஒரு அடிப்படை உடல் பரிசோதனை உதவும். மேலும் நிணநீர் முனையிலோ அல்லது மண்ணீரலிலோ ஏதேனும் வீக்கம் இருக்கிறதா என்பதும் சரிபார்க்கப்படுகிறது.
- இரத்த பரிசோதனைகள் இரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் வடிவத்தில் ஏற்படும் அசாதாரணத்தை வெளிப்படுத்துகின்றன.
- பிலடெல்பியா குரோமோசோமை பரிசோதிக்க பாலிமரேசு தொடர் வினை சோதனை போன்ற சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
- எலும்பு மஜ்ஜையில் எடுக்கப்படும் திசுப் பரிசோதனை கூட புற்றுநோயை கண்டறிய உதவுகிறது.
- குறைபாடுள்ள மரபணுவைக் கொண்டிருக்கும் அனைத்து செல்களையும் அகற்றுவது கடினம், ஆனால் சிகிச்சைமுறை இந்த செல்களை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கீமோதெரபி தவிர, சிஎம்எல் நோயாளிகளுக்கான இலக்கு மருந்துகள் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட சில மருந்துகள் உள்ளன. ஒரு நபருக்கு ஒரு இலக்கு மருந்து ஒத்துக்கொள்ளவில்லை எனில், மாற்று மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.
- ஒரு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையே ஒரு நோயாளிக்கான முழுமையான சிகிச்சைக்கு அதிக வாய்ப்பளிக்கிறது. கொடையாளி செல்கள் எலும்பு மஜ்ஜையிலில் புதிய ஆரோக்கியமான செல்களின் உருவாக்கத்தை தூண்டுகிறது.
- குறிப்பாக சிஎம்எல் தடுக்கும் சிகிச்சைக்காக, சிறந்த சிகிச்சை தேர்வை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாலும், அதே நேரத்தில் இந்நிலை தொடர்ந்து மோசமாகும் என்ற முன்கணிப்பு உள்ள.