சிறுநீரக செயலிழப்பு - Chronic Kidney Disease (CKD) in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

December 10, 2018

September 11, 2020

சிறுநீரக செயலிழப்பு
சிறுநீரக செயலிழப்பு

சுருக்கம்

நாள்பட்ட சிறுநீரக நோய் (சிகேடி) (சிறுநீரக நோய்) என்பது ஒரு சிறுநீரக நோயாகும், இது சிறுநீரகத்தின் செயல்பாட்டை படிப்படியாக குறைக்க கூடியது. இந்த நோயின் வளர்ச்சியானது, சிறுநீரகத்தின் வழக்கமாக செய்கின்ற இரத்த சுத்திக்கரிப்பை படிப்படியாக குறைத்துவிடும். நாள்பட்ட சிறுநீரக நோய் உருவாவத்திற்கு இரண்டு பொதுவான காரணங்கள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகும்.  சிறுநீரக நோயின் ஆரம்ப கட்டத்தில், பொதுவாக எந்தவொரு குறிப்பிடத்தக்க அறிகுறிகளையும் காட்டாது. எனவே, இதை வழக்கமான உடல்நல பரிசோதனையின் போது, இரத்த மற்றும் சிறுநீர் சோதனைகளின் மூலம் கண்டறியப்படுகிறது. எனினும், சிறுநீரக செயல்பாடானது சிகிச்சையின் போது மோசமாகிவிட்டாலோ அல்லது ஆரம்பகாலத்திலே சிறுநீரக நோய் கண்டறியப்படவில்லை என்றாலோ, கணுக்கால் வீக்கம், சிறுநீரில் ரத்தம், தசைப்பிடிப்பின் அதிகரிப்பால் தொடர்ச்சியான சிறுநீர வெளியேற்றம் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கலாம். சிறுநீரக நோயின் சிகிச்சையானது அதன் காரணங்களை பொறுத்தது. மருந்துகளுடன் சேர்ந்த வாழ்க்கை முறை மாற்றங்களே சிறுநீரக கட்டுப்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுநீரக செயல்பாடுகள் மோசமடைந்து கொண்டு வந்தால், இறுதியில் சிறுநீரக செயலிழப்பினால் (ஏஸர்டி/ சிறுநீரக செயலிழப்பு / சிறுநீரக செயலிழப்பு) பாதிக்கப்படலாம், இந்நிலையில் சிறுநீரக தூய்மிப்பு அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சைகளும் தேவைப்படலாம். 50 பேரில் 1வருக்கு நாள்பட்ட சிறுநீரக நோயுடன் கூடிய சிறுநீரக செயலிழப்பும் இருப்பதாக பதிவாகியுள்ளது. ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சைகளின் மூலம் சிறுநீரக செயலிழப்பைத் தடுக்கலாம்.

சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் என்ன - Symptoms of Chronic Kidney Disease in Tamil

சி.கே.டி இன் அறிகுறிகள் பின்வருமாறு:

ஆரம்ப கட்ட அறிகுறிகள்

பொதுவாக, சிறுநீரகத்தின் செயல்பாடட்டில் ஒரு குறிப்பிடத்தக்க குறைபாடு இருக்கும் போது கூட மனித உடலால் வெற்றிகரமாக செயல்பட முடியும். எனவே, பொதுவாக ஆரம்ப கட்டங்களில் சி.கே.டி எந்த குறிப்பிடத்தக்க அறிகுறிகளையும் காட்டாது. சி.கே.டி இன் ஆரம்ப அறிகுறிகள் பொதுவாக தெளிவற்றவையாக இருக்கும். இந்த அறிகுறிகள் பின்வருமாறு:

ஆரம்ப கட்டத்திலேயே வழக்கமான இரத்தம் அல்லது சிறுநீர் பரிசோதனைகளில் எந்த வகை சிக்கல்கள் இருப்பது தெரியவந்தால், அதை சி.கே.டி-என எடுத்துக்கொள்ளலாம். சி.கே.டி ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டு அதற்கான தக்க சிகிச்சை அளிக்கப்பட்டால், இந்த நோயை மேலும் முற்றிவிடாமல் திறம்பட தடுக்க முடியும்.

தாமதமாக வரும் அறிகுறிகள்

சிறுநீரக நோய்கள் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்படாமலோ அல்லது அதற்க்கு சிகிச்சை அளிக்கப்படாமலோ இருந்தால் நோய் மோசமாகி, பின்வரும் அறிகுறிகள் உருவாகலாம்:

  • சிறுநீரக சேதம் ஏற்பட்டு அதன் காரணமாக இரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவுகளில் ஏற்றத்தாழ்வு உண்டாகி அதனால் வரும் எலும்பு வலி.
  • நீர் கோர்த்துக்கொள்வதன் காரணமாக கைகள், கால்கள் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் உணர்வின்மை அல்லது வீக்கம்.
  • உடலில் கழிவுப்பொருட்கள் தேங்குவதான் காரணமாக அம்மோனியா மணம் அல்லது மீன் கவுச்சி போன்ற கெட்ட சுவாசம்.
  • பசியின்மை மற்றும் எடை இழப்பு.
  • வாந்தி.
  • அடிக்கடி விக்கல்.
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறிப்பாக இரவில்.
  • மூச்சு திணறல்.
  • சோர்வு.
  • சிறுநீர் அல்லது மலத்தில் இரத்தம்.
  • சிந்திப்பதில் அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம்.
  • தசைப்பிடிப்பு / முதுகெலும்பு வலி.
  • எளிதில் சிராய்ப்பு ஏற்படுதல்.
  • அடிக்கடி தண்ணீர் குடிக்க தேவைப்படுதல்.
  • மாதவிடாய் வராமலிருத்தல் (அமினோரியா).
  • தூக்கமின்மை (இன்சோம்னியா).
  • தோல் வெளிறியோ அல்லது கறுப்பாகவோ மாறுதல்.
  • பாலியல் செயலிழப்பு.

சி.கே.டி இன் கடைசி கட்டம் சிறுநீரக செயலிழப்பு அல்லது இறுதி-நிலை சிறுநீரக நோய் (ESRD-எண்டு ஸ்டேஜ் ரீனல் டிசீஸ்) என்று அழைக்கப்படுகிறது. இறுதி கட்டமாக இதற்க்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

சிறுநீரக செயலிழப்பு சிகிச்சை - Treatment of Chronic Kidney Disease in Tamil

நாள்பட்ட சிறுநீரக நோயை குணப்படுத்த முடியாது ஆனால் சிகிச்சையின் மூலம் அதன் மோசமான நிலைமயை தடுக்க இயலும். நோய் எவ்வளவு கடுமையாக இருக்கிறதோ அதற்கேற்ப சிகிச்சைகள் வேறுபடுகிறது.

சிகிச்சையின் முக்கிய கூறுகள்:

  • வாழ்க்கை முறை மாற்றங்கள்
    உகந்த சுகாதாரத்திற்கு இந்த மாற்றங்கள் அனைத்தும் பரிந்துரைக்கப்படுகிறது. பின்வரும் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்தலாம்:
    • புகைப்பழக்கத்தை நிறுத்தவும்.
    • சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
    • நீங்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவானது நாள் ஒன்றுக்கு 6 கிராமாக குறைக்கப்பட வேண்டும்
    • குறைந்தபட்சம் தினசரி 30 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு ஐந்து நாட்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
    • மது அருந்தும் அளவை ஒரு வாரத்திற்கு 14 ஆல்கஹால் அலகுகளாக குறைக்கவும்.
    • உடல் எடையை குறைக்கவும் மற்றும் உங்கள் உயரத்திற்கும் வயதுக்கும் சரியான ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்.
    • சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளாதீர்கள்.
  • மருந்துகள்
    நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் கொழுப்பு போன்ற பிற நோய்களை கட்டுப்படுத்த மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
    • நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவுகளை உட்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்தல் மற்றும் தொடர்ச்சியான இரத்த பரிசோதனைகளின் மூலம் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை கண்காணித்துக் கொள்ளவும்.
    • உயர் இரத்த அழுத்ததை கட்டுப்படுத்த ஆஜியோடென்சின்-என்ஸைம் (ஏசிஇ) என்கிற தடுப்பான்களை மருத்துவர் பரிந்துரைக்கலாம். பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால், ஆஞ்சியோடென்சின்-இரண்டாம் ஏற்பிகளை (ஆற்B) மருத்துவர் பரிந்துரைப்பார். இரத்த அழுத்தமானது 140/90 மிமீ / எச்.ஜி.க்கு கீழே இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
    • கொலுப்பின் அளவுகளை குறைக்க ஸ்டேடின்ஸ் போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.
    • கணுக்கால்களில் அல்லது கைகளில் வீக்கம் ஏற்படுவதை கட்டுப்படுத்த, டையூரிடிக் மருந்துகள், உப்பின் அளவுகள் மற்றும் திரவ உட்கொள்ளல் ஆகியவற்றை பரிந்துரைக்கப்படுகிறது.
    • நீண்டகால சிறுநீரக நோயானது இரத்த சோகைக்கு காரணமாக இருப்பதால், இரும்புச் சத்துக்கள் பரிந்துரைக்கப்படலாம் அல்லது சிவப்பணுக்கள் தூண்டும் சுரப்புநீர் மூலம் ஹார்மோன்களை அதிகரிக்க உதவுகிறது.
    • மேம்பட்ட சிறுநீரக நோய் உடையவர்களுக்கு டயாலிசிஸ் தேவைப்படலாம்.
    • மேம்பட்ட சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக செயலிழப்புகளினால், விரிவான சிறுநீரக சேதத்தை ஏற்படுத்தும் ஆதலால் அவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம்.
  • மாற்று (நோய்த்தடுப்பு / பழமை) சிகிச்சை
    சிறுநீரக செயலிழப்புக்கான இடமாற்றம் செய்தல் போன்றவை உங்களுக்கு ஏற்றதாக இல்லை என்றால் அதை செய்ய முயற்சிக்காதீர்கள், பின்பு உங்கள் உடல்நலப் பாதுகாப்பு ஆலோசக்கரிடம் மாற்று சிகிச்சைக்கான உதவியை பெறவேண்டும். மாற்று சிகிச்சையின் குறிக்கோளானது நோயிலிருந்து விடுப்படவும்,சிறுநீரக நோயின் அறிகுறிகளை கட்டுப்பத்தவும் மற்றும் உளவியல் நிவாரணங்கள், மருத்துவ மற்றும் நடைமுறை கவனிப்புகளை உள்ளடக்கியதாகும்.

வாழ்க்கை மேலாண்மைகள்
சில எளிமையான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சிறுநீரக செயல்பாட்டினை நன்றாக வைத்திருக்க முடியும். இவை பின்வருமாறு:

  • குறைந்த சோடியம் உள்ள உணவுகளை உட்கொள்ளவும் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.
  • ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுவும். நீச்சல் மற்றும் சுறுசுறுப்பான நடைபயிற்சினால் உடலில் சுறுசுறுப்பை ஏற்படுத்தும். இருப்பினும், நீங்கள் உடல் ரீதியான செயலில் சுறுசுறுப்பு இல்லாதிருந்தால், உங்கள் உடல்நலப் பாதுகாப்புக் குழுவிடம் எந்த பயிற்சிகள் உங்களுக்கு சரியானவை என்று தெரிந்துக்கொள்ளவும்.
  • புதிய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பீன்ஸ், தோல் அகற்றிய கோழி இறைச்சி, ஆடு இறைச்சி, மீன் மற்றும் குறைந்த கொழுப்பு உள்ள பால் அல்லது பால்கடிகள் போன்ற ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை தேர்ந்தெடுக்கவும்.சர்க்கரை-இனிப்பு கலந்த பானங்களை தவிர்க்கவும். குறைந்த கலோரி உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டவும், உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை உண்பதை தவிர்க்கவும்.
  • ஆரோக்கியமான உடல் எடையுடன் இருப்பது அவசியமாகும். உடல் பருமன் காரணத்தினால் சிறுநீரகங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. உங்கள் உடல் எடையை பராமரிக்க ஒரு பயிற்சி பெற்ற நிபுணர் மற்றும் ஒரு உணவியல் வல்லுநர் ஆகியோரிடம் உதவிப்பெறலாம்.
  • ஒவ்வொரு இரவும் 7 முதல் 8 மணிநேர தூக்கம் அவசியமாகும். போதுமான அளவு தூக்கத்தினால் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பெற்று, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திற்கு உதவும்.
  • புகைபிடிப்பதை தவிர்ப்பதின் மூலம் சிறுநீரக சேதத்தையும், உயர் இரத்த அழுத்தத்தையும் தவிர்க்கலாம்.
  • நீண்ட நாள் மன மற்றும் அழுத்தத்தின் காரணத்தினால் உங்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஆழ்ந்த இசை கேட்பது, அமைதியான விஷயங்களை அல்லது செயல்களில் கவனம் செலுத்துவது, அல்லது தியானம் போன்ற செயல்களினால் மன அழுத்தத்தை சமாளிக்க முடியும்.
  • மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளவும்.


மேற்கோள்கள்

  1. National Kidney Foundation [Internet] New York; About Chronic Kidney Disease
  2. National Health Service [Internet]. UK; Chronic kidney disease.
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Chronic kidney disease
  4. Lameire N, Van Biesen W. The initiation of renal-replacement therapy--just-in-time delivery. N Engl J Med. 2010 Aug 12. 363(7):678-80. PMID: 20581421
  5. Jha. V., Garcia-Garcia. G., Iseki. K., et. al. Chronic kidney disease: Global dimension and perspectives. Lancet. Jul 20, 2013;382(9888):260-272. https://www.ncbi.nlm.nih.gov/pubmed/23727169. PMID: 23727169
  6. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Chronic Kidney Disease (CKD).
  7. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Glomerular filtration rate
  8. Song E-Y, McClellan WM, McClellan A, et al. Effect of Community Characteristics on Familial Clustering of End-Stage Renal Disease. American Journal of Nephrology. 2009;30(6):499-504. doi:10.1159/000243716. PMID: 19797894
  9. National Health Service [Internet]. UK; Diabetes.
  10. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Managing Diabetes.

சிறுநீரக செயலிழப்பு டாக்டர்கள்

Dr. Anvesh Parmar Dr. Anvesh Parmar Nephrology
12 Years of Experience
DR. SUDHA C P DR. SUDHA C P Nephrology
36 Years of Experience
Dr. Mohammed A Rafey Dr. Mohammed A Rafey Nephrology
25 Years of Experience
Dr. Soundararajan Periyasamy Dr. Soundararajan Periyasamy Nephrology
30 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

சிறுநீரக செயலிழப்பு க்கான மருந்துகள்

Medicines listed below are available for சிறுநீரக செயலிழப்பு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.