கேன்க்ராய்ட் (கிராந்திப்புண் கட்டி) என்றால் என்ன?
கேன்க்ராய்ட் (கிராந்திப்புண் கட்டி) என்பது பிறப்புறுப்புகளில் புண்களை ஏற்படுத்தக்கூடிய தொற்றுநோய் ஆகும். ஹீமோபிலிஸ் துக்ரேயி என்ற பாக்டீரியம் தான் கேன்க்ராய்ட் (கிராந்திப்புண் கட்டி) ஏற்படுவதற்கான காரணமாகும். இது பாலியல் அல்லது பாலியல் அல்லாத தொடர்பு மூலம் பரவுகிறது. இது பொதுவாக விருத்தசேதனம் செய்யப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடத்தில் அல்லாமல் விருத்தசேதனம் செய்யப்படாத ஆண்கள் மற்றும் பெண்களிடத்தில் காணப்படுகிறது. இது பொதுவாக வளரும் நாடுகளில் குறிப்பாக பாலியல் தொழிலாளர்களிடையே காணப்படுகிறது. மனித ஏமக்குறைப்பு நச்சுயிரி (ஹெச்.ஐ.வி) வைரஸ் பரவுவதற்கான ஆபத்து காரணிகளில் ஒன்று கேன்க்ராய்ட் (கிராந்திப்புண் கட்டி) ஆகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
கிராந்திப்புண் கட்டிக்கான (கேன்க்ராய்ட்) அறிகுறிகள் நான்கு நாட்களுக்குள் தோன்றும், ஆனால் அரிதாக பாக்டீரியா வெளிப்பாட்டின் மூன்று நாட்களுக்கு முன்பே தோன்றும். தொற்று ஏற்பட்டிருக்கும் இடத்தில் அதாவது பிறப்புறுப்பு பகுதியில் அல்லது ஆசன வாயில், சிவப்பான சீழ் படிந்த கட்டி காணப்படுகிறது. பின்னர் அந்த கட்டி, அகற்றப்பட்ட விளிம்புகளுடன் திறந்த புண்ணாக மாறுகிறது, மற்றும் இந்த புண் மென்மையாகிறது. இந்த புண் பெண்களில் அடிக்கடி அறிகுறியில்லாததாக இருக்கிறது, ஆனால் ஆண்களில் மிகவும் வேதனை தருவதாக இருக்கலாம். ஆண்களுக்கு பொதுவாக ஒரு புறத்தில் அல்லது இரு புறத்திலும் உள்ள இடுப்பைச் சுற்றியுள்ள நிணநீர் முனைகளில் வீக்கம் மற்றும் வலி தோன்றலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கேன்க்ராய்ட் (கிராந்திப்புண் கட்டி) ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- கிராந்திப்புண் கட்டியின் திறந்த புண்களின் நேரடியான சருமத் தொடர்பு.
- கிராந்திப்புண் கட்டியின் சீழுடனனான நேரடித் தொடர்பு.
- வணிக ரீதியான பாலியல் தொழிலாளர்கள் போன்ற அதிக ஆபத்தான நபர்களுடனனான பாலியல் தொடர்பு.
- பலருடன் பாலியல் தொடர்பு கொள்ளுதல்.
- கிராந்திப்புண் கட்டி உள்ள நபருடன் யோனி, ஆசன வாய், அல்லது வாய்வழியிலான பாலியல் தொடர்பு.
இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
கேன்க்ராய்ட் (கிராந்திப்புண் கட்டி) பொதுவாக புண்ணுள்ள பகுதியில் இருந்து மாதிரிகள் மற்றும் இரத்த மாதிரிகள் சேகரிப்பதன் மூலம் கண்டறியப்படுகிறது. சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பின்னர் கிராந்திப்புண் கட்டி ஏற்படுத்தும் பாக்டீரியம் இருக்கின்றதா என்று சோதிக்கப்படுகின்றன. இந்த மருத்துவம் சார்ந்த கண்டறிதலில் உட்பட்ட நடவடிக்கைகள் பின்வருமாறு:
- பிறப்புறுப்பில் ஏற்படும் புண்ணை கண்டறியும் உடல் பரிசோதனை.
- பொதுவாக கிராந்திப்புண் கட்டி ஏற்படும் போது காணப்படும், நிணநீர் முனையங்களின் வீக்கம்.
- கிரந்தி/சிபிலிஸ் இன்மை.
- ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் பாலிமரேசு தொடர்வினை (ஹெச்.எஸ்.வி.பி.சி.ஆர்) சோதனை எதிர்மறையாக இருத்தல்.
ஒரு வெற்றிகரமான சிகிச்சையானது அறிகுறிகளில் இருந்து மீட்டு, நோய் பரவுதலை தடுக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சை நோய் தொற்றை முழுவதுமாக போக்குகிறது. மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறை முழுவதுமாக மேற்கொள்ளப்பட வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் சிகிச்சை தேவைப்படலாம். முழுமையான சிகிச்சை மற்றும் புண் குணப்படுத்துவதற்கான நேரம், புண்களின் அளவை பொறுத்து மாறுபடும். விருத்தசேதனம் செய்யப்படாத அல்லது எச்.ஐ.வி-நேர்மறை உள்ள ஆண்களை விட இந்த சிகிச்சையானது விருத்தசேதனம் செய்யப்பட்ட அல்லது எச்.ஐ.வி-எதிர்மறை உள்ள ஆண்களில் சிறந்த விளைவை ஏற்படுத்தலாம்.