இதயத்தசைநோய் என்றால் என்ன?
இதயத்தசைநோய் என்பது இருதய தசைகளிலிருந்து உடலில் இருக்கும் பிற பாகங்களுக்கு இரத்த இறைத்தல் மிகவும் கடினமாகும்போது ஏற்படும் ஒரு நிலை ஆகும். இதயத்தசைநோய் நோயாளிகளுக்கு முறையான பராமரிப்பு மற்றும் கவனிப்பு இருந்தால் சாதாரண வாழ்க்கையை நடத்தலாம், ஆனால், சில சந்தர்ப்பங்களில் இதய செயலிழப்பு ஏற்படலாம்.இதையத்தசை நோய்க்கான பராமரிப்பு, பிரச்சனையின் வகையை அதாவது, விரிவுபடுத்தப்பட்டதா, மிகை வளர்ச்சி உடையதா, கட்டுப்படுத்தப்பட்டதா என்பதைச் சார்ந்தது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஆரம்ப கட்டங்களில் இதன் அறிகுறிகளை கவனிப்பது கடினமாக இருக்கலாம், ஆனால், காலப்போக்கில், சில அறிகுறிகள் தோன்றக்கூடும்.அவை பின்வருமாறு:
- கணுக்கால் மற்றும் கால்களை சுற்றி வீக்கம் (மேலும் வாசிக்க: பாதங்களில் வீக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள்).
- கடுமையாக உழைக்காத போதிலும் சோர்வாக காணப்படுதல்.
- தொடர்ந்து வயிறு உப்பசமாக இருத்தல்.
- படபடப்பு அல்லது வேகமான இதயத்துடிப்பு.
- மார்பகக்குறுக்கம்.
- தலைசுற்றல் அல்லது தலை கறக்கமுடன் காணப்படுகிறது.
- மூச்சுவிட இயலாமை.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இந்த நிலை ஏற்படுவதற்கான முக்கிய காரணத்தை அறிந்து கொள்ள முடியவில்லை, சில சந்தர்ப்பங்களில், பரம்பரையாக இருக்கலாம்.இதற்கு பங்களிக்கக்கூடிய காரணங்கள்:
- இரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள்.
- நெஞ்சு வலியினால் ஏற்பட்ட சேதம்.
- இதய துடிப்பு சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் அடைப்பான்களில் கோளாறு (இதய இலயமின்மை மற்றும் அடைப்பான் குறைபாடுகள்).
- மது மற்றும் போதைப்பொருட்களின் தவறான பயன்பாடு.
- இதய நோய்த்தொற்றுகள் (இதய உள்ளுறையழற்சி).
- இதயத்தில் ஏற்படும் அழற்சி (இதய வெளியுறை அழற்சி).
- புரத படிவுகள்.
- திசு கோளாறுகள்.
- கீமோதெரபி (வேதிச்சிகிச்சை).
- கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்கள்.
- ஊட்டச்சத்து குறைபாடு.
- நீரிழிவு நோய், தைராய்டு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
குடும்பத்தின் நோய் சார்ந்த வரலாறு மற்றும் முன்பு ஏற்பட்டிருந்த நோய்களின் பதிவுகளை ஆராய்வதுடன், உடல் பரிசோதனை மேற்கொள்வதுமே, இதற்கான முதன்மை கணடறிதல் ஆகும்.இவ்வாறு காரணங்கள் கண்டறிந்த பிறகு, மருத்துவர்கள் பின்வருவனவற்றை பரிந்துரை செய்யக்கூடும்:
- எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை.
- இதயத்துடிப்பு மற்றும் அடைப்பான்களை சரிபார்க்க. எலக்ட்ரோகார்டியோகிராஃபி (ஈ.சி.ஜி).
- அறிகுறிகளை சோதிக்க ட்ரெட்மில்லில் மன அழுத்த சோதனை.
- இரத்த நாளங்களை பரிசோதிக்க வடிகுழாய் சோதனை.
- அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டை கவனிக்க இரத்த பரிசோத.னை
- மரபணு சோதனை.
சிகிச்சை என்பது இதயத்தசைநோயின் தன்மையை சார்ந்துள்ளது.
- குறைந்த இரத்த அழுத்தம், அதிகரித்த இரத்த ஓட்டம், குறைந்த இதய துடிப்பு மற்றும் இரத்த உறைவு உருவாவதை தடுக்க மருந்துகள் கொடுக்கப்படலாம்.
பொருத்தப்படும் சாதனங்கள்:
- இதயத் தடிப்பு சீராக உள்ளதா என்பதை மதிப்பீடு செய்ய ஐ.சி.டி என்ற வேகக்கட்டுப்பாடு, கார்டியோவெர்ஷன் அல்லது உதறல் நீக்கல் போன்றவைகளால் சிகிச்சையளித்தல்.
- இரத்தச் சுற்றோட்டத்திற்கு உதவ வி.எ.டி அல்லது இதயக்கீழறை சார்த்த உதவி சாதனம் (வென்ட்ரிகுலர் அசிஸ்ட் டிவைஸ்).
- இதய இலயமின்மையை கட்டுப்படுத்தக்கூடிய இதயமுடுக்கி.
- இதயத்தின் சுவரை மெலியவைத்து இரத்த ஓட்டத்தை எளிதாக்க அல்லது இதய இலயமின்மையை ஏற்படுத்தும் சேதமடைந்த பகுதிகளை குறைக்க உதவும் வெப்பநீக்கம்.
- சில இதய தசைகளை அகற்றி இரத்த ஓட்டத்தை மேம்படுத்த அல்லது தீவிர நிலையில், இதய மாற்றங்கள் செய்ய திறந்த இதய அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சை நடைமுறைகள்.
- எடை இழப்பு, உடற்பயிற்சி, மேம்படுத்தப்பட்ட உணவு முறைகள், புகைபிடிப்பதை நிறுத்துதல், மது அருந்துவதை குறைத்தல், மன அழுத்தம் மற்றும் தூக்கத்தை நிர்வகித்தல் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள்.