கேண்டிடல் தொற்று (வெண்புண்) என்றால் என்ன?
கேண்டிடல் தொற்று (வெண்புண்) என்பது மிக பொதுவாக ஏற்படும் ஒரு பூஞ்சை தொற்றுநோயாகும். இது உடலில் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சில சூழ்நிலைகளில், கேண்டிடா அமைப்பு (முழு உடல் உட்பட) ரீதியான தொற்றை ஏற்படுத்துகிறது. இது நோயின் தீவிரமான நிலைக்கு வழிவகுக்கிறது. கேண்டிடல் தொற்று நோயின் மூன்று முக்கிய வகைகள் பின்வருமாறு:
- உணவுக்குழாய், தொண்டை மற்றும் வாய் ஆகியவற்றில் ஏற்படும் தொற்று.
- இனப்பெருக்க உறுப்பு சார்ந்த கேண்டிடல் தொற்று நோய் (மேலும் வாசிக்க: யோனியில் ஏற்படும் பூஞ்சை தொற்றுக்கான சிகிச்சை).
- இன்வேஸிவ் கேண்டிடல் தொற்று. கேண்டிடா அல்பிகன்சுடன் 20க்கும் மேற்பட்ட கேண்டிடா இனங்கள் நோய்தொற்றுகளின் மிக பொதுவான காரணியாக இருக்கிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
கேண்டிடல் தொற்றின் அறிகுறிகள் உடலில் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளை பொறுத்து மாறுபடுகிறது. அனைத்து வகை கேண்டிடியாசிஸில் பெரும்பாலும் காணப்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- முகப்பருவைப் போல் தோன்றும் மயிர்க்கால்களின் தொற்று நோய்.
- சிவப்பாகவும் அரிப்புத் தன்மை உடைய தோல் தடிப்பு.
- எந்த பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறதோ அதை பொறுத்து பிறப்புறுப்பு பகுதி, வாய், மார்பகங்களின் கீழ், தோல் மடிப்புகள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் ஏற்படும் தடிப்பு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
தோலில் ஏற்படும் கேண்டிடல் தொற்று பரவலானது மற்றும் உடலின் எல்லா பகுதியிலும் ஏற்படக்கூடியது, ஆனால் பெரும்பாலும் ஈரபதமான மற்றும் தோல் மடிப்புகள் இருக்கும் பகுதிகளையே இது பாதிக்கிறது. தோலில் ஏற்படும் தொற்றுக்கான காரணங்கள் பின்வருமாறு:
- நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன்.
- ஸ்டீராய்டு சிகிச்சை, கீமோதெரபி, மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள்.
கேண்டிடா பொதுவாக தோலின் ஈரப்பதமான இடங்களான அக்குள் மற்றும் கவட்டி போன்ற இடங்களை பாதிக்கிறது என்றாலும் இது உங்களது நகம் மற்றும் வாயின் மூலையிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். யோனி மற்றும் வாய்வழி கேண்டிடியாஸிஸ் பொதுவாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வதன் காரணமாக ஏற்படுகிறது. இது ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களைப் போல குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ள நபர்களிடமும் காணப்படுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
கேண்டிடா தொற்று வழக்கமாக பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கும் தோலினை கொண்டு கண்டறியப்படுகிறது. அவற்றில் ஏதேனும் நுண்ணுயிர் இருக்கிறதா என்று சோதனை செய்யப்படுகிறது. கேண்டிடியாஸிஸ் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த நபரின் இரத்த சர்க்கரை அளவை சோதனை செய்ய வேண்டும். இரத்த சர்க்கரையின் அதிக அளவு பூஞ்சைக்கு உணவாக இருந்து அது மென்மேலும் வளர உதவுகிறது.
கேண்டிடல் தொற்றுக்கான சிகிச்சை பின்வருமாறு:
- சிகிச்சைக்கான முதன்மைக்குரிய விஷயம் சரியான உடல்நிலை மற்றும் சுகாதாரத்தை பேணிக்காப்பதே.
- ஈரமான பகுதிகளில் உறிஞ்சும் தன்மையுள்ள பொடியை பயன்படுத்துவதால் கேண்டிடியாசிஸை தடுக்கவும் மற்றும் அதற்கான சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது.
- உங்கள் தோலை சூரிய ஒளியின் வெளிப்பாட்டிலேயே வைத்திருக்கவும்.
- எப்போதுமே உங்கள் இரத்த சர்க்கரை அளவை சரியான வரம்பில் இருக்குமாறு பராமரிக்கவும்.
- உங்கள் மருத்துவர் உடலில் பூசிக்கிக்கொள்ள பூஞ்சை எதிர்ப்பு கிரீம்கள் மற்றும் மேற்பூச்சு மருந்துகளை பரிந்துரைக்கலாம். இது இந்த நிலையை குணப்படுத்த உதவுகிறது.
- கடுமையான கேண்டிடியாஸ் இருக்கும் நிலைமையில், வாய்வழி பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சை மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகின்றது.