நாண் உரைப்பையழற்சி - Bursitis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 29, 2018

March 06, 2020

நாண் உரைப்பையழற்சி
நாண் உரைப்பையழற்சி

நாண் உரைப்பையழற்சி என்றால் என்ன?

நாண் உரைப்பையழற்சி என்பது உராய்பு தடுப்பதற்குரிய பசைநீர் சரக்கும் பை போன்ற அமைப்பான மரகுநீர்ச் சுரப்பியில் (பர்சா) ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது, இது மூட்டுகளில் இருக்கும் எலும்பு மற்றும் தசைக்கு இடையில் ஒரு குஷனை உருவாக்குகிறது. உராய்வுத் தடுப்புப் பசைநீர்ச் சுரப்பிகள் தோள்பட்டை, முழங்கை, இடுப்பு, மற்றும் முழங்கால் மூட்டுகள், மற்றும் குதிங்காலில் உள்ள குதிங்கால் தசைநார் ஆகியவைகளில் ஏற்படும் உராய்வை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இதனால், மேற்கூறியவற்றின் இயக்கம் மிகவும் இளகுவாக நடக்கிறது. நாண் உரைப்பையழற்சி தற்காலிக வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியது, ஆனால் இதனால் எந்த நிரந்தர குறைபாடும் ஏற்படாது.

உராய்வுத் தடுப்புப் பசைநீர்ச் சுரப்பிகளில் ஏற்படும் அழற்சியை பொறுத்து நாண் உரைப்பையழற்சி வகைப்படுத்தப்பட்டுள்ளது, அந்த வகைகள் பின்வருமாறு:

  • குதிகால் தசைநாண் உரைப்பையழற்சி.
  • இடுப்பு நாண் உரைப்பையழற்சி.
  • முழங்கால் நாண் உரைப்பையழற்சி.
  • முழங்கால் சில்லு நாண் உரைப்பையழற்சி.
  • குதிகாலின் பின்புற தசைநாண் உரைப்பையழற்சி
  • முழங்கை நாண் உரைப்பையழற்சி.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

நாண் உரைப்பையழற்சியின் பொதுவான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • வலி - இதுவே நாண் உரைப்பையழற்சியின் மிக பொதுவான அறிகுறியாகும். உராய்வுத் தடுப்புப் பசைநீர்ச் சுரப்பிகளில் கால்சியம் படிவுகள் இருந்தால் இந்நிலையை மேலும் மோசமடையச்செய்யும்.
  • பாதிக்கப்பட்ட மூட்டுகளில் குறிப்பிட்ட இயக்கத்தை மட்டுமே செய்யமுடியும் அதாவது உறைந்திருக்கும் தோல்பட்டை போன்றது.
  • பாதிக்கப்பட்ட மூட்டுகள் மென்மையாக இருப்பது போன்ற உணர்வு.
  • நாள்பட்ட நாண் உரைப்பையழற்சி மல இயக்கத்தின் சீர்கேடுக்கு வழிவகுக்கும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

அதிர்ச்சியினால் மூட்டுகளில் ஏற்படும் காயம் நாண் உரைப்பையழற்சிக்கு வழிவகுக்கிறது. மூட்டுகளின் அதிக பயன்பாடு அழற்சி ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

நீரிழிவு நோய், முடக்கு வாதம், கீல்வாதம், மண்டலிய செம்முருடு (எஸ்எல்இ), நோயெதிர்ப்பு குறைபாடு மற்றும் நெளிமுதுகு (ஸ்கோலியோசிஸ்) போன்றவைகள் பெரும்பாலும் நாண் உரைப்பையழற்சியுடன் தொடர்புடையது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

விரிவான மருத்துவ வரலாறு மற்றும் முழுமையான உடல் பரிசோதனையை மேற்கொண்டபின், உங்கள் மருத்துவர் கீழ்கண்ட சில சோதனைகள்ளை பார்த்துரைக்கலாம்-

  • எக்ஸ்-ரே.
  • எம்.ஆர்.ஐ.
  • சிடி ஸ்கேன்.
  • (மீயொலி) அல்ட்ராசவுண்ட்
  • கல்ச்சர் மற்றும் பகுப்பாய்வுக்காக உராய்வுத் தடுப்புப் பசைநீர்ச் சுரப்பிகளில் இருக்கும் திரவத்தை தூண்டுதல்.
  • முழு இரத்த அணுக்களின் எண்ணிக்கை, சி-வினைபுரிப்புரதம், யூரிக் அமிலம் போன்ற இரத்த பரிசோதனைகள்.

மூட்டுகளில் இருக்கும் அழுத்தம் குறைக்கப்படாவிட்டால், நாண் உரைப்பையழற்சி தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். எனினும், நாண் உரைப்பையழற்சிக்கான சிகிச்சை வழிகள் பின்வருமாரு –

  • வலி-நிவாரண மருந்துகள்.
  • உடல் ஓய்வு.
  • அழற்சி ஏற்பட்ட மூட்டில் அணைவரிக்கட்டை வைத்தல்.
  • வலி மற்றும் அழற்சியை குறைக்க உராய்வுத் தடுப்புப் பசைநீர்ச் சுரப்பிகளிற்குள் இயக்க ஊக்கி மருந்துகளை உட்செலுத்துவது.
  • நோய்தொற்றுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளலாம்.
  • அறுவை சிகிச்சை வடிகால் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட உராய்வுத் தடுப்புப் பசைநீர்ச் சுரப்பிகளை அகற்றுதல்.

நீங்கள் வழக்கமான உடற்பயிற்சிகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும், பிறகு மெதுவாக மேலும் நாண் உரைப்பையழற்சியைத் தடுக்கக்கூடிய அளவிற்கு உங்கள் வலிமையை அதிகரிக்க வேண்டும். அதிக அளவிலான உடற்பயிர்ச்சியில் ஈடுபடக்கூடாது, குறிப்பாக பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வலியை உணர்ந்தால் உடனடியாக நிறுத்திவிடவேண்டும். பாதிக்கப்பட்ட பகுதியில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வலி மற்றும் வீக்கத்தை  கட்டுப்படுத்தலாம். உடலியக்க மருத்துவம் பாதிக்கப்பட்ட மூட்டுகளின் இயக்கத்தை அதிகரிக்க வித்திடுகிறது. நாண் உரைப்பையழற்சியின் சிகிச்சைக்கு குறிப்பிட்ட காலஅவகாசம் என்பது கிடையாது.



மேற்கோள்கள்

  1. University of Rochester Medical Center. Bursitis. Rochester, New York. [internet].
  2. Stanford Health Care [Internet]. Stanford Medicine, Stanford University; What is bursitis?
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Bursitis
  4. National institute of aging. [internet]: US Department of Health and Human Services; Bursitis
  5. Healthdirect Australia. Bursitis. Australian government: Department of Health