புலிமியா நெர்வோசா - Bulimia Nervosa in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 03, 2018

March 06, 2020

புலிமியா நெர்வோசா
புலிமியா நெர்வோசா

புலிமியா நெர்வோசா என்றால் என்ன?

புலிமியா நெர்வோசா, அல்லது அதிகமாக உணவு உண்ணும் நோய் என்பது அளவுக்கு அதிகமாக உண்ணுதல் மற்றும் வெளியேற்றலை தொடர்ச்சியாக செய்யும் ஒரு மனநல நோய் ஆகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் ஒரு பொதுவான நோய் ஆனால் பதின்பருவ பெண்களில் இது அதிகமாக காணப்படுகிறது. உணவு மீது கட்டுப்பாட்டை இழந்த உணர்வுடன் ஒரு நபர் எந்த நேரத்திலும் மிதமிஞ்சி சாப்பிட வேண்டும் என எண்ணலாம் (ஒரு குறுகிய காலத்திற்குள்ளாக மிகப்பெரிய அளவு உணவு உண்ணுதல்), அதனை தொடர்ந்து மிகவும் வெட்க கேடாக உணரலாம்; எனவே , அந்த நபர் அதை ஈடுகட்ட சுயமாக தூண்டப்பட்டு வாந்தி எடுத்தல், எடை குறைப்பு மாத்திரையை எடுத்து கொள்ளல், மலமிளக்கி மற்றும் சிறுநீரிளக்கி ஆகியவற்றை எடுத்துகொள்ளல், அளவுக்கு அதிகமான உடற்பயிற்சிகள் மற்றும் திட்ட உணவு கடைபிடித்தல் போன்ற வெளியேற்றல் முறைகளை செய்வார். எப்போதாவது, இந்த நிலை உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • கட்டுப்பாடற்ற உணவு, பொது இடங்களில் சாப்பிட விரும்பாதது.
  • உடலின் வடிவம் மற்றும் எடையை பற்றிய ஆபத்து.
  • அலைபாயும் மனம், பதட்டம் மற்றும் மன அழுத்தம்.
  • சாப்பிட்ட பிறகு அடிக்கடி கழிவறைக்கு செல்வது
  • வாந்தி நெடி.
  • அதிகப்படியான உடற்பயிற்சி.
  • மலமிளக்கி, சிறுநீரிளக்கி மற்றும் எடை குறைப்பு மாத்திரைகளை உட்கொள்வது.
  • எடையின் ஏற்ற இறக்கங்கள், ஆனால் பொதுவாக சராசரி எடையை பராமரிப்பர். பெரும்பாலும் மருத்துவர்கள் மற்றும் சிலர் புலிமியா உள்ள நபர்கள் எடை குறைந்தவர்கள் என கருதுகின்றனர், மற்றும் இதனால் புலிமியா கண்டறியப்படாமல் அல்லது நீண்ட காலத்திற்கு தவறவிடபட்டு இருக்கலாம்.
  • கை மற்றும் கால்களில் வீக்கம்.
  • கணுக்கால்களின் மீது வடுக்கள் அல்லது புண்கள்.
  • பற்களில் நிற மாற்றம் மற்றும் ஈறுகளில் சேதம்.
  • உணவின் மேல் தயக்கம் மற்றும் கடுமையான உணவு கட்டுப்பாடு.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

புலிமியாவிற்கான சரியான காரணம் தெரியவில்லை. மரபணு, பரம்பரை வரலாறு, உடல் எடை மற்றும் வடிவம் குறித்த கவலைகள், குறைந்த சுயமரியாதை, ஆளுமை மனோபாவம் அல்லது கச்சிதமான கதாபாத்திரம், கவலை மற்றும் மன அழுத்தம் ஆகியன சில காரணங்களாகும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மேலே கூறப்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில், ஒரு மருத்துவரால் புலிமியாவை கண்டறிய முடியும்:

  • உணவு பழக்கங்கள், எடை இழப்பு முறைகள் மற்றும் உடல் சார்ந்த அறிகுறிகளை பற்றி கேள்வி கேட்பது.
  • இரத்தம், சிறுநீர் உட்பட முதன்மை பரிசோதனைகள் மற்றும் இதய செயல்பாட்டை சோதனை செய்ய இதயத்துடிப்பலைப்பதிவு.
  • நோய் கண்டறிதல் மற்றும் புள்ளி விவர மாதிரி- 5 (டி.எஸ்.எம் -5) போன்ற நோயறிதலை உறுதிப்படுத்தும் கருவி.

ஒரு மனநல மருத்துவர், மருத்துவர் மற்றும் உணவுமுறை வல்லுநர் உள்பட ஒரு தொழில்முறை வல்லுநர்கள் குழு ஆகியோர் புலிமியா சிகிச்சைக்கு தேவைப்படுகிறார்கள். சிகிச்சைகள் உளவியல் ஆலோசனைகளுடன் ஆரம்பிக்கலாம், ஆனால் அறிகுறிகளின் தீவிரத்தை பொறுத்து மனஅழுத்தம் எதிர்ப்பி போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படும். ஃப்ளுவாக்ஸ்டைன் ஒரு மன அழுத்த எதிர்ப்பி மருந்தாகும், இது எப்.டி.ஏ வால் அங்கீகரிக்கப்பட்டது. மன நலத்துடன் கூட உளவியல் நடத்தை சிகிச்சை, குடும்ப அடிப்படையிலான சிகிச்சை, இருவருக்கிடையே மட்டும் உள்ள உளவியல் ஆலோசனை, ஊட்டச்சத்து கல்வி, மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுத்தல் போன்றவை சிகிச்சையின் பிற வடிவங்களாகும்.

தொடர்ந்து உணவு உட்கொள்ளல் மற்றும் உணவில் கட்டுப்பாடு இல்லாதிருத்தல் போன்றவை புலிமியாவை வெற்றிகொள்ள மிக முக்கியமாகும். புலிமியாவிற்கு உதவ சில குழுக்கள் உள்ளன, நோயாளிகளின் விருப்பப்படி இதில் இணைந்திருக்க முடியும். சிகிச்சை சில காலம் எடுத்துக்கொண்டாலும், புலிமியா முழுமையாக குணப்படுத்தப்படும்.



மேற்கோள்கள்

  1. National Eating Disorders Association. Bulimia Nervosa. New York, United States. [internet].
  2. Help Guide international. Bulimia Nervosa. Santa Monica, California. [internet].
  3. National Health Service [Internet]. UK; Bulimia
  4. American Academy of Family Physicians [Internet]. Leawood (KS); Assessment and Treatment of Bulimia Nervosa
  5. American Academy of Family Physicians [Internet]. Leawood (KS); Treatment of Bulimia Nervosa

புலிமியா நெர்வோசா க்கான மருந்துகள்

Medicines listed below are available for புலிமியா நெர்வோசா. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.