மூச்சுக் குழாய் அழற்சி என்றால் என்ன?
மூச்சுக் குழாய் அழற்சி என்பது மூச்சுக்குழாயின் குடூச்சில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சியை குறிக்கும் ஒரு பொதுவான நுரையீரல் நோய். இந்த குழாய்கள் நுரையீரலில் இருந்து காற்றை உள்ளே மற்றும் வெளியே எடுத்து செல்லும் பணியை செய்கின்றன, மற்றும் காற்று பாதைகள் குருகுவதால் வீக்கம் ஏற்பட்டு சுவாசத்தில் சிரமம் ஏற்படுகிறது. மூச்சுக் குழாய் அழற்சியின் காரணமாக ஏற்படும் இருமல் தடிமனான சளியை ஏற்படுத்துகிறது. மூச்சுக் குழாய் அழற்சி மிக கடுமையாக மற்றும் நீண்ட காலத்திற்கு இருக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
மூச்சுக் குழாய் அழற்சியின் அறிகுறிகள் அதன் நிலைமையின் அடிப்படையில் வேறுபடுகின்றன. கடுமையான மற்றும் நீண்ட கால மூச்சுக்குழாய் அழற்சியில் சில அறிகுறிகள் பொதுவாக இருந்தாலும் நீண்ட கால மூச்சுக்குழாய் அழற்சியில் சில குறிப்பிட்ட அறிகுறிகள் காணப்படலாம்.
பொதுவான அறிகுறிகள்:
- மார்பு இறுக்கம் மற்றும் மூச்சு திணறல்.
- இலேசான காய்ச்சல் மற்றும் குளிர்.
- இருமலால் வரும் சளி தெளிவாகவோ, பச்சை அல்லது வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கலாம் மற்றும் சில நேரங்களில் இரத்தத்தின் கோடுகள் கலந்து வரலாம்.
கடுமையான மூச்சு குழாய் அழற்சி:
பெரும்பாலான அறிகுறிகள் பொதுவாக ஒரு வாரத்திற்குள் அதிகமாகின்றன என்றாலும் இருமல் நீடிக்கும்.
நீண்ட கால மூச்சுக்குழாய் அழற்சி:
- மீண்டும் மீண்டும் இருமல் வருவது.
- இருமல் லேசாக இருக்கலாம் அல்லது மிக மோசமாக இருக்கலாம்.
- குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் போன்ற சளி மற்றும் சளிக்காய்ச்ல் ஏற்படுத்தும் பொதுவான வைரஸ்கள், மூச்சு குழாய் அழற்சிக்கு காரணமாகும். எனினும், இரைப்பைக் கோளாறுகள், வீட்டிலோ அல்லது பணியிடத்திலோ நுரையீரலுக்கு எரிச்சலூட்டும் வேதியியல் வெளிப்பாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் அல்லது சிகரெட் புகைத்தல் காரணமாக நாள்பட்ட மூச்சு குழாய் அழற்சிகள் ஏற்படலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மூச்சுக் குழாய் அழற்சியை ஒரு பொதுவான சளியிலிருந்து வேறுபடுத்தி காட்டுவது கடினமாக இருக்கலாம், குறிப்பாக ஆரம்ப காலகட்டத்தில்.மருத்துவர்கள் வழக்கமாக நோயை கண்டறிய கீழ்கண்ட சோதனைகளை உபயோகிக்கின்றனர்:
- ஒவ்வாமை அல்லது பிற நோய்களின் அறிகுறிகளை தெரிந்துகொள்ள சளியை பரிசோதித்தல்.
- மார்பின் எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை மூலம் நிமோனியா மற்றும் மற்ற பிரச்சனைகளை கண்டறியலாம், குறிப்பாக புகை பிடிப்பவர்களின் உண்டாகும் இருமலை கண்டறியலாம்.
- நுரையீரல் செயல்பாடு சோதனை நுரையீரலின் திறனை மதிப்பீடு செய்யவும் எம்பிஸிமா (அகவூதை) மற்றும் ஆஸ்துமா (ஈழை நோய்) ஆகியவற்றை சோதிக்கவும் பயன்படுகிறது.
மூச்சுக் குழாய் அழற்சிகளில் பெரும்பாலான தீவிர வழக்குகள் வைரஸ்களால் ஏற்படுகிறது என்பதால் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இதற்கு பரிந்துரைக்கப்படவில்லை. பெரும்பாலும் நோய்கள் தாமாகவே ஓரிரு நாட்களில் குணமடைகின்றன. எனினும், மருத்துவர் நல்ல தூக்கத்திற்கு இருமல் மருந்தை பரிந்துரைக்கலாம் மற்றும் வீக்கங்களை குறைக்கவும், காற்று குழாய்களை விரிவாக்கவும், மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. ஆஸ்துமா அல்லது பிற நுரையீரல் நோய்களுக்கு மருந்து கொடுக்கப்படலாம். சுவாச பயிற்சிகள், பிராணவாயு சிகிச்சை, புகைபிடிப்பதை நிறுத்துதல், திரவங்களை அதிகம் எடுத்துக்கொள்ளுவது மற்றும் நீராவி பிடித்தல் ஆகியன அறிகுறிகளை நிவர்த்தி செய்ய உதவும் முக்கியமான நடவடிக்கை ஆகும். இதற்க்கு எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்வருமாறு:
- வெளியில் இருக்கும் போது முகமூடியை அணிந்து கொள்ளுவது.
- வீட்டுக்குள் இருக்கும் போது ஈரப்பதமூட்டியை பயன்படுத்துவது.
- மாசுபாடு மற்றும் எரிச்சலூட்டும் விஷயங்களிலிருந்து தள்ளி இருப்பது.
- மீண்டும் காய்ச்சல் தாக்காமல் இருக்க தடுப்புஊசிகளை போட்டுக்கொள்வது நல்லது.