மார்பக பிரச்சனைகள் என்றால் என்ன?
மார்பக புற்றுநோயை தவிர, மார்பக பிரச்சனைகள் என்பது மார்பகங்களை பாதிக்கும் நிலைமைகளின் தொகுப்பாகும் எனவே இது மிகவும் தீங்கற்றது. மார்பக பிரச்சனைகள் எந்த வயதிலும் ஏற்படலாம். சில மார்பக பிரச்சனைகள் பருவமடையும்போது ஏற்படுகிறது, மற்றும் சில கர்பகாலத்திலோ அல்லது பாலூட்டுதல் காரணமாகவோ அல்லது வயது முதிர்தல் காரணமாகவோ ஏற்படலாம். மார்பக பிரச்சனைகள் பொதுவாக ஆபத்தில்லாத நோயாக கூறப்பட்டது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
மாறுபடும் தன்மை மற்றும் காயங்களின் பல்வேறு வடிவம் ஆகியவை மார்பக பிரச்சனைகளின் அறிகுறிகள் மற்றும் தாக்கங்கள் ஆகும். உங்களுக்கு மார்பக பிரச்சனைகள் இருந்தால், பின்வருவனவற்றில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் ஏற்படலாம்:
- மார்பில் வலி
- நார்த்திசு வளர்ச்சி அல்லது அதிக கொழுப்பின் காரணமாக மார்பில் கட்டிகள் ஏற்படலாம்.
- மார்பில் நீர் கட்டிகளின் வளர்ச்சி.
- முலைக்காம்புகளின் பின் இழுப்பு.
- முலைக்காம்புகளில் இருந்து கசிவு.
- முலைக்காம்புகளில் கீறல் மற்றும் புண்கள் ஏற்படுதல்.
- கூடுதல் முலைக்காம்புகள் ஏற்படுதல்.
- மார்பக தோலின் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுதல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மார்பக பிரச்சனைகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவை:
- அசாதாரணமான மார்பக வளர்ச்சி
- வீக்கம்
- ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள்.
- பால் சுரக்கும்போது மார்பக குழாய்களில் சீழ்க்கட்டிகள் அல்லது சீழ்பிடிப்பு ஏற்படுத்தும் தொற்றுகள்.
- பால் தேக்கநிலை.
- மார்பகங்களை பெரிதாக்க சிலிக்கான் அல்லது பாரபின் போன்ற வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துவது.
- விபத்து அல்லது அறுவை சிகிச்சையினால் மார்பில் ஏற்படும் காயம்.
- மார்பக காசநோய் என்பது மிகவும் அரிதானதே ஆனால் மார்பு சிதைவுக்கு இது ஒரு சாத்தியமான காரணமாகும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
தீங்கு ஏற்படாமல் தடுக்க, மார்பக தோற்றம் மற்றும் செயல்பாட்டில் எந்த விதமான மாற்றம் ஏற்பட்டாலும் உடனடி கவனம் மற்றும் சரியான மருந்துகள் தேவை.
மார்பகத்தில் சுய பரிசோதனை செய்வது மார்பக பிரச்சனைகளை கண்டுபிடிக்க சிறந்த மற்றும் எளிய வழி ஆகும். ஏதேனும் ஒரு கட்டி இருப்பதாக உணர்ந்தால், புற்றுநோயின் சாத்தியக்கூறுகளை தெரிந்துகொள்ள தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டியது மிகவும் முக்கியம்.கீழ்காணும் பரிசோதனை முறைகள் நோயை கண்டறிய உதவுகிறது:
- அல்ட்ராசவுண்ட்.
- முலை ஊடுகதிர்ப்படச் சோதனை (மேமோகிராபி).
- முக்கிய ஊசி திசு பரிசோதனை.
- திசு பரிசோதனை.
- நோய் பற்றியறிதல்
நோயறிதலின் சோதனை அறிக்கையின் அடிப்படையில் சிகிச்சையின் வரிசை தீர்மானிக்கபடுகிறது. சில சிகிச்சை முறைகள்:
- மென்மையான கிரீம்கள் முலைக்காம்பில் ஏற்பட்ட புண்களை சரிசெய்ய உதவுகிறது.
- முறையான பாலூட்டல் அட்டவணை மற்றும் நுட்பம், பாலூட்டும் போது ஏற்படும் மார்பக பிரச்சனைகளை தீர்க்கிறது.
- மார்பக நார்த்திசுக்கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கலாம்.
- ஊசி மூலம் நீர்க்கட்டிகளில் உள்ள நீரை உறுஞ்சிநீக்குதல்.
- நீர்க்கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுதல்.
- அரிதாக, மார்பகங்களை நீக்குவது (ஆபத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தால் மார்பகங்களை நீக்க ஆலோசனை வழங்கப்படுகிறது).
- ஹார்மோன் ஏற்றதாழ்வுகள் மார்பக பிரச்சனைகளுக்கு காரணம் என்றால் சமநிலைக்கு திரும்புவதற்கான ஹார்மோன் மாத்திரைகள் பரிந்துரைக்கபடலாம்.