மூளையின் தமனி அனியூரிஸம் என்றால் என்ன?
மூளை தமனி அனியூரிஸம் என்பது மூளையின் பலவீனமான இடத்தில் உள்ள தமனியின் சுவரில் ஏற்படும் வீக்கம் அல்லது பலூன்-போன்று தோற்றம் கொண்ட நிலையாகும். தமனிகள் என்பது இதயத்திலிருந்து இரத்தத்தை உடலில் உள்ள பிற பகுதிகளுக்கு எடுத்து செல்லக்கூடியது. அனியூரிஸம் மூளையினுள் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படக்கூடியது, குறிப்பாக இரத்தக் குழாய்கள் பிரியும் இடத்தில் தோன்றக்கூடியது. இரத்தம் கொண்ட குமிழி அல்லது கொப்புளம் சிதைவுற்று, இரத்தக் கசிவினை ஏற்படுத்துகிறது. சிதைந்த அனியூரிஸம் உடல் நலத்திற்கு மிகவும் ஆபத்துவிளைவிப்பதோடு மரணத்திற்கு வழிவகுக்கக்கூடியது.
இந்திய மக்கள் தொகையில்,மூளை தமனி அனியூரிஸம் நோய் பொதுவாக 35லிருந்து - 60வயது வரையுள்ள மக்களிடத்திலேயே காணப்படுகிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
சிதைவுப் பெறாத அனியூரிஸம் பெரிய கொப்பளமாக இருக்கும் போது மூளையின் அருகில் உள்ள நரம்புகள் அல்லது திசுக்களுக்கு ஏற்படும் அழுத்தத்தினால் அறிகுறிகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.தோன்றக்கூடிய அறிகுறிகள் பின்வருமாறு:
- இரட்டைப் பார்வை அல்லது பார்வை இழப்பு.
- கண்களில் ஏற்படும் வலி.
- தலை வலி.
- முகத்தில் வலி.
- பலவீனம்.
- உணர்வின்மை.
- பேசுவதில் அல்லது கவனம் கொள்வதில் ஏற்படும் பிரச்சனை.
- சமநிலையின்மை.
பல சமயங்களில் அனியூரிஸம் சிதைவு பெரும் வரை எந்த ஒரு அறிகுறியையும் ஏற்படுவதில்லை. சில சமயம் சிறிதளவு இரத்தம் சிதைவு பெறாத அனியூரிஸம் வழியாக வலிந்து தலைவலியை உண்டாக்கும்.
சிதைவுற்ற அனியூரிஸம் விளைவிக்கும் அறிகுறிகள் பின்வருமாறு:
- கடுமையான தலைவலி.
- கழுத்தில் விறைப்பு.
- குமட்டல் மற்றும் வாந்தி.
- ஒளிக்கான உணர்திறன்.
- சுயநினைவை இழத்தல்.
- குழப்பம்.
- வலிப்பு.
- உடம்பின் ஒரு பகுதியில் பக்கவாதம்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
தசை நார்களின் பற்றாக்குறை அல்லது இழப்பின் காரணத்தினாலேயே தமனி சுவரில் பலவீனமான பகுதிகள் உண்டாகின்றன. தெளிவான காரணம் இன்னும் அறியப்படவில்லை, உங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் காரணிகள் பின்வருமாறு:
- 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
- மூளை தமனி அனியூரிஸத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்ப வரலாற்றினை கொண்டவர்கள்.
- புகைப்பிடித்தல்.
- உயர்ந்த இரத்த அழுத்தம்.
- பிறப்பிலேயே பலவீனமான தமனி சுவர்கள் இருத்தல்.
- பல நீர்க்கட்டிகளுடன் கூடிய சிறுநீரக கோளாறு.
- பிறப்பு இதய நோய்.
- போதைப்பொருட்களின் தவறான பயன்பாடு.
- மூளையில் ஏற்பட்டிருக்கும் காயம்.
- தமணி சுவரில் ஏற்படும் நோய்த்தொற்று.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
திடீர் மற்றும் பொறுக்கமுடியாத தலைவலியே நீங்கள் உணரக்கூடிய முதல் அறிகுறி, மருத்துவர் இதற்கான மருத்துவ வரலாற்றை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதோடு உடலியல் பரிசோதனையை மேற்கொள்வார். உடையாத அனியூரிஸத்தின் இருப்பை உறுதிசெய்வதோடு முளையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை அறியவும் இமேஜிங் சோதனைகளான எம்ஆர்ஐ மற்றும் சி.டி ஸ்கேன் போன்றவைகள் மேற்கொள்ளப்படும். உடைந்த அனியூரிஸத்தின் அறிகுறிகள் உடையவர்களுக்கு சி.டி ஸ்கேன் ஆய்வுகள் நெகட்டிவாக அமைந்தால், இடுப்பு துளைத்தல் செயல்முறை மூலம் சோதனை செய்யப்படுகிறது (செரிப்ரோஸ்பைனல் திரவம் மாதிரி ஆய்வுக்கு எடுத்து அதில் இரத்தம் உள்ளதா என்று சோதனை செய்யப்படுகிறது). டிஜிட்டல் கழித்தல் ஆஞ்சியியல் (டிஎஸ்ஏ) கூட இரத்த குழாய்களில் உள்ள பிரச்சனைகளை கண்டறிய மேற்கொள்ளப்படுகிறது.
அளவு, இடம்,அறிகுறிகள் மற்றும் தீவிரத்தை பொறுத்து அனியூரிஸத்திற்கான சிகிச்சை வேறுபடுகிறது. எல்லோருமே மருந்து உட்கொள்ளவேண்டிய அவசியமில்லாமலும் இருக்கலாம். அனியூரிஸம் சிதைவு பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தால், நோயாளிகள் வழக்கமான சோதனை மூலம் கவனமாக கண்காணிக்கப்படவேண்டும். புகைப்புடிக்கும் பழக்கத்தை கைவிடுதல் மற்றும் உயர் இரத்த அழுத்தத்துக்கான சிகிச்சை போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் அனியூரிஸம் சிதைவு பெரும் அபாயத்தை குறைக்கஅறிவுறுத்தப்படுகிறது. மருந்துகள் பொதுவாக சிதைவுபெறாத குமிழிக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அனியூரிஸம் சிதைவு பெறுவதை தடுக்கவும் மற்றும் சிதைவுப்பெற்ற அனியூரிஸத்துக்கான சிகிச்சைக்கும் அறுவை சிகிச்சை உதவுகிறது. அறுவை சிகிச்சையில் அனியூரிஸம் உடையாமல் பார்த்துக்கொள்ள ஸ்ப்ரிங் போன்ற வலைக்கண் அனியூரிஸத்தின் மேல் பொருத்தப்படுதல் அல்லது வெப்ப சக்தியை பயன்படுத்துவதால் அனியூரிஸத்தை முழுமையாக நீக்கிவிடுதல் மற்றும் அதை சுற்றி உள்ள இரத்தக்குழாய்களை மீண்டும் இணைப்பது போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.