கிளாஸ்டிரீயம் நச்சேற்றம் (பொட்டுலிஸம்) என்றால் என்ன?
பொட்டுலிஸம் என்பது கிளாஸ்டிரீயம் பொட்டுலினம் எனும் பாக்டீரியாவால் உருவாகும் போட்டுலினம் நஞ்சினால் ஏற்படும் ஒரு உடல்நல குறைபாடு ஆகும். கிளாஸ்டிரீயம் பொட்டுலினம் என்பது ஒரு மண் பாக்டீரியம் ஆகும், இது எங்கும் பரவக்கூடியது மற்றும் இதை கொல்வது கடினமானது. இது ஆக்சிஜன் இல்லாமல் வளரும் பாக்டீரியம் என்பதால், அடைக்கப்பட்ட உணவுகளில் இவ்வகை பாக்டீரியா ஒரு வலிமையான இனப்பெருக்கத் தளத்தை உருவாக்குகிறது. பொட்டுலிஸம் பாக்டீரியா ஒருவரை தொற்றும் போது, அது பொட்டுலினம் நஞ்சை வெளியிடுகிறது; அந்த நஞ்சினால் முகத்தில் ஆரம்பித்து பிற முக்கிய உறுப்புகளில் பக்கவாதம் ஏற்படுகிறது. இந்த நஞ்சு சுவாச தசைகளை பாதிக்கும்போது, சுவாசப்பாதை செயலிழக்கிறது. பொட்டுலிஸம் பக்கவாதத்திற்கு வழிவகுப்பதால், அவசர சிகிச்சை தேவைப்படும்.
பொட்டுலிஸம் வகைகள் பின்வருமாறு:
- உணவினால் உருவாகும் பொட்டுலிஸம் - பொட்டுலினம் நஞ்சினால் பாதிக்கப்பட்ட உணவு உட்கொள்ளுவதால் ஏற்படும்.
- காயத்தினால் உருவாகும் பொட்டுலிஸம் ஆனது, ஒரு திறந்த காயம் மூலம் தொடர்பு கொண்டு, அதன் நச்சுத்தன்மையை வெளியிடுகையில் ஏற்படுகிறது.
- ஒரு சிசு பாக்டீரியாவால் மாசுபட்ட உணவை உட்கொள்வதால் குழந்தைகளில் உருவாகும் பொட்டுலிஸம் ஏற்படலாம். பாக்டீரியா மற்றும் அதன் நச்சுத்தன்மை மலத்திலும் கூட இருக்கலாம்.
- பெரியவர்களுக்கு ஏற்படும் குடல்சார் குடியேற்றம் - பாக்டீரியல் செரிமானபாதைக்கு பரவுவதால் ஏற்படும் நோய் ஆகும். இது மிகவும் அரிதாகவே ஏற்படும்.
- மருத்துவச்செனிம பொட்டுலிஸம் - இது சிகிச்சைக்கு பிறகு அல்லது அளவுக்கு அதிகமாக கொடுக்கப்படும் பொட்டுலினம் நஞ்சினால் ஏற்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
தொற்று ஏற்பட்ட 6 மணி நேரத்திலிருந்து 10 நாட்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும். குழந்தைகளிடம் மற்றும் உணவினாலும் ஏற்படும் தொற்றின் அறிகுறிகள் 12 மணிநேரம் முதல் 36 மணிநேரத்திற்குள் வெளிப்படும்.
உணவினால் உருவாகும் பொட்டுலிஸம் அறிகுறிகள்:
- குமட்டல்.
- வாந்தி.
- மலச்சிக்கல்-ஐ தொடர்ந்து வயிறு கோளாறு.
- விழுங்குவதில் சிரமம்/பேசுவதில் சிரமம்.
- வாய் உலர்தல்.
- முகத்தின் இருபுறமும் வலுக்குறைவு.
- மங்கலான அல்லது இரட்டை பார்வை.
- தொங்கிய கண் இமைகள்.
- மூச்சுத்திணறல்.
- உடல் முழுவதும் உள்ள பல்வேறு தசைகளில் முடக்கம்.
உணவு, காயம், பெரியவர்கள், மற்றும் மருத்துவச்செனிமம் காரணமாக ஏற்படும் பொட்டுலிஸம் ஆகியவற்றின் அறிகுறிகள் ஒத்திருக்கும்போது, காயத்தினால் ஏற்படும் பொட்டுலிஸத்தின் அறிகுறிகள் 4 நாட்கள் முதல் 2 வாரங்களுக்குள் வெளிப்படும். காயத்தினால் ஏற்படும் பொட்டுலிஸத்தில் மூளையிலிருந்து முதுகெலும்புடன் இணைக்கும் நரம்புகளில் முதலில் அறிகுறிகள் தோன்றி பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுகின்றன.
குழந்தைகளில் உருவாகும் பொட்டுலிஸத்தில், குழந்தைகளுக்கு மலச்சிக்கல், உணவூட்டுவதில் சிரமம், சோர்வு, எரிச்சல், உமிழ்நீர் ஊறுதல், தளர்ந்த கண் இமைகள், பலவீனமான அழுகை, தலையில் கட்டுப்பாட்டு இழப்பு மற்றும் தசை வலுக்குறைபாடு ஏற்படுத்தும் சீரற்ற அசைவுகள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பொட்டுலினம் பாக்டீரியாவைக் கொண்டிருக்கும் உணவை உட்கொள்ளும்போது அல்லது பொட்டுலினம் பாக்டீரிவால் மாசுபட்ட மண்ணுடன் தொடர்பு கொள்ளும்போது பொட்டுலிஸம் நோய் தாக்குகிறது. பொட்டுலிஸம் வித்துகள் குடலுக்குள் வளர்ந்து பொட்டுலிஸம் நச்சுத்தன்மையை வெளிப்படுத்துகிறது. வீட்டிலோ அல்லது வணிகத்திற்காகவோ சரியாக பதப்படுத்தப்படாத தகர அடைப்புகளில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இந்த பாக்டீரியாவிற்கான முக்கியமான உணவு ஆதாரங்கள் ஆகும். பீட்ரூட், கீரை, காளான் மற்றும் பீன்ஸ் போன்ற குறைந்த அமிலம் கொண்ட பாதுகாக்கப்பட்ட காய்கறிகளிலும் நச்சுத்தன்மை இருக்கலாம். தகர அடைப்புகளில் பாதுகாக்கப்பட்ட சூரைமீன், நொதிக்கவைக்கப்பட்ட, புகையூட்டப்பட்ட மற்றும் உப்பு மீன், பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் இறைச்சி குழலப்பம் போன்ற இறைச்சி பொருட்களிலும் நச்சுத்தன்மை இருக்கலாம்.
ஒரு திறந்த காயத்தில் பொட்டுலினம் வித்துகள் இருந்தால் காயத்தினால் உருவாகும் பொட்டுலிஸம் ஏற்படும். ஊசி மூலமாக கொக்கெயின் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை உட்கொள்வது ஒரு பொதுவான காரணமாக உள்ளது; ஏனென்றால் மேற்கொடுக்கப்பட்ட போதைப்பொருட்களில் பொட்டுலினம் வித்துகளை பொதுவாக காணப்படுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
நோயைக் கண்டறிய, கடந்த சில நாட்களில் நீங்கள் உட்கொண்ட உணவைப் பற்றியும், திறந்த காயத்தின் மூலமாக பாக்டீரியா தொற்றக்கூடிய பொருட்களை தொடர்புக்கொண்டீர்களா என்றும் உங்கள் மருத்துவர் கேள்விகளைக் கேட்பார். பலவீனமான குரல், தசை பலவீனம், தளர்ந்த கண் இமைகள் அல்லது பக்கவாதம் ஆகியவற்றைப் பரிசோதிக்கலாம். குழந்தைகளுக்கு தேன் கொடுக்கப்பட்டதா, அல்லது மலச்சிக்கல் மற்றும் மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதா என்று மருத்துவர் கேட்கலாம்.
பின்னர் நச்சுத்தன்மையை உறுதிப்படுத்த இரத்தம், மலம் அல்லது வாந்தியின் ஆய்வக பரிசோதனைகளை கேட்கலாம். இந்த சோதனையின் முடிவுகளைப் பெறுவதற்கு சில நாட்கள் ஆகலாம், எனவே உங்கள் மருத்துவர் பொட்டுலிஸம் இருப்பதாக சந்தேகித்தால், உங்களுக்கு உடனடியாக சிகிச்சையை ஆரம்பிக்கலாம். சில சந்தர்ப்பங்களில், மருத்துவர் சில சிறப்பு பரிசோதனைகள் செய்யலாம்:
- மூளை ஸ்கேன்.
- முதுகு தண்டு திரவ பரிசோதனை.
- நரம்பு மற்றும் தசை செயல்பாடு சோதனைகள்.
பொட்டுலிஸம் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்து நச்சுமுறிப்பான் (ஆன்டி டாக்ஸின்) என்று அழைக்கப்படுகிறது. நரம்புகளுக்கு மேலும் தீங்கு விளைவிப்பதில் இருந்து நஞ்சுமுறிப்பான் தடுக்கிறது. இருப்பினும், நச்சுமுறிப்பான் ஏற்கனவே ஏற்பட்ட சேதத்தை குணப்படுத்துவதில்லை. பல முறை, உணவினால் உருவாகும் பொட்டுலிஸத்தில், மருத்துவர் வாந்தி அல்லது குடல் சுருக்கத்தை தூண்டுவதற்க்கு மருந்துகளை கொடுக்கலாம். காயத்தினால் உருவாகும் போட்டுலிஸத்தில், மருத்துவர் அறுவைசிகிச்சை முறையில் திசுவை நீக்கலாம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கலாம்.
சுவாசப்பாதை தசைகளில் ஏற்பட்ட முடக்கத்தினால் சுவாச திணறல் ஏற்பட்டால், நஞ்சின் தாக்கம் குறைந்து இயல்புநிலைக்கு நீங்கள் திரும்பும் வரை மருத்துவர் உங்களை செயற்கை உயிர்ப்பு அமைப்பில் வைத்திருக்கலாம். பேச்சு, விழுங்குதல் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட பிற செயல்பாடுகளை மேம்படுத்த சிகிச்சை தேவைப்படலாம். 5 முதல் 10% மக்களில், மரணம் ஏற்படகூடும்.