எலும்பு துருத்த வளர்ச்சி - Bone Spur in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

November 28, 2018

March 06, 2020

எலும்பு துருத்த வளர்ச்சி
எலும்பு துருத்த வளர்ச்சி

எலும்பு துருத்த வளர்ச்சி என்றால் என்ன?

எலும்பு துருத்த வளர்ச்சி என்பது எலும்பு முனைகள், முக்கியமாக இரண்டு எலும்புகள் சந்திக்கும் மூட்டுகளில் வளரும் ஒரு சிறிய எலும்புப் புடைப்பு ஆகும். எலும்புப் புடைப்பு முதுகெலும்பிலும் வளரலாம். இதன் வளர்ச்சி முதுகெலும்பு அல்லது பாதிக்கப்பட்ட மூட்டின் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது.

வழக்கமாக, எலும்புப் புடைப்பு குருத்தெலும்பு அல்லது தசைநார்கள் அருகில் உள்ள வீக்கம் அல்லது காயம் உள்ள பகுதியில் வளரும். எலும்புப் புடைப்பு ஏற்படக்கூடிய பொதுவான இடங்கள்:

  • கால் குதிகாலின் உள்ளங்கால் எலும்பு - இது குதிகால் எலும்புப் புடைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது வழக்கமாக மிகவும் வலியுள்ளதாக இருக்கும்.
  • கைகள்- விரல் மூட்டுகளில் எலும்புப் புடைப்பு ஏற்படுவதால் கை இயக்கம் முடங்கிவிடலாம்.
  • தோள்பட்டை - எலும்புப் புடைப்பு தோள்பட்டையின் சுழற்சியின்போது தசையுடனும் தசைநாருடனும் உரசுவதால், தசைநார்களில் வீக்கம் (தசைநார் அழற்சி) ஏற்படுகிறது, இது தோள்பட்டையில் அசைவை தடுக்கிறது.
  • முதுகெலும்பு - முதுகெலும்பில் ஏற்படும் எலும்புப் புடைப்பினால் முதுகெலும்பு குறுக்கம் ஏற்படுகிறது. நரம்புகள் ஒன்றோடு ஒன்று மோதுவதன் காரணமாக கால்களில் வலி, உணர்வின்மை மற்றும் பலவீனம் ஏற்படும்.
  • இடுப்பு மற்றும் முழங்கால்கள் - எலும்புப் புடைப்பு கால்களின் அசையும் பகுதிகளில் வலியை ஏற்படுத்திகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

சில சமயங்களில், எலும்புப் புடைப்பு எந்த அறிகுறிகளும் இருக்காது. ஆனால், அறிகுறிகள் உருவாகும்போது, ​​அவை இடம் சார்ந்து இருக்கும். எலும்புப் புடைப்பு ஏற்படும் பகுதிக்கு அருகில் உள்ள திசுக்கள், தசை நாண்கள், நரம்புகள் மற்றும் தோலில் ஏற்படும் எரிச்சல் உணர்வினால் வலி, உணர்வின்மை மற்றும் தொடும்போது அசௌகரியம் உணரலாம்.

குதிகாலில் ஏற்படும் எலும்புப் புடைப்பு, மென்மை மற்றும் வீக்கம் ஏற்படுத்துவதோடு நடப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில், குதிகாலின் அடிப்பகுதியில் எலும்புப் புடைப்பு இருந்தால் உள்ளங்கால் முழுவதும் வீக்கம் ஏற்படும்.

முதுகெலும்பில் ஏற்படும் எலும்புப் புடைப்பினால் நரம்பு ஒன்றோடு ஒன்று உரசி மோதல்கள் ஏற்படலாம், இதனால் அந்த குறிப்பிட்ட நரம்புக்கு தொடர்புடைய உடல் பாகத்தில் உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் வலி ஏற்படும்.

ஒரு எலும்புப் புடைப்பு அறிகுறிகள் இன்றி இருந்தால், மற்ற காரணங்களுக்காக செய்யப்படும் எக்ஸ்-கதிர்கள் சோதனையில் அது தெரிந்துவிடகூடும்.

எலும்பு துரித்த வளர்ச்சி நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

எலும்புப் புடைப்பு பொதுவாக வீக்கம் மற்றும் அழுத்தம் உள்ள பகுதிகளில் ஏற்படுகிறது.

மூட்டு முடக்குவாதம், ஒரு பொதுவான மூட்டு குறைபாடுள்ள நோய், எலும்புப் புடைப்பு உருவாவதற்கு மிகவும் பொதுவான காரணமாகும். இது வயதானவர்களில் ஏற்படும் பொதுவான ஒரு நிலை. நமக்கு வயதாகும்பொழுது, குருத்தெலும்புகளில் தேய்மானம் ஏற்படும், இது எலும்பு எடையை குறைக்கும். இந்த இழப்பை சரிசெய்யும் முயற்சியில், உடல் எலும்பு துரித்த வளர்ச்சிகளை உருவாக்குகிறது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

பரிசோதனையின்போது, வலியின் துல்லியமான இடத்தை அறிய, உங்கள் மருத்துவர் மூட்டுகளுக்கு அருகில் தொட்டு பார்த்து தெரிந்து கொள்வார். அந்த குறிப்பிட்ட பகுதிக்கு எக்ஸ்ரே எடுக்குமாறு மருத்துவர் பரிந்துரைக்கலாம். தேவைப்பட்டால் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன் மற்றும் மைலோகிராம் போன்ற பிற தோற்றமாக்கல் (இமேஜிங்) சோதனைகள் செய்யப்படலாம்.

நோயை உறுதிப்படுத்திய பிறகு, வலி மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்த சில மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் குளிச்சியான பொருளால் ஒத்தடம் கொடுப்பது அசௌகரியத்தை குறைக்கலாம்.

குதிகாலில் உள்ள எலும்புப் புடைப்பிற்கு காலணி செருகிகள் ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன; தொடந்து ஏற்படும் வலியை நிறுத்த அறுவைசிகிச்சை தேவைப்படலாம்.

நீங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுவீர்கள், உடல் ரீதியான சிகிச்சை மற்றும் செயல்பாட்டு மாற்றங்களை மேற்கொள்ளலாம். எலும்புப் புடைப்புகள் நரம்பை அழுத்தி கடுமையான வலி உண்டாக்கினால் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

(மேலும் படிக்க : எலும்பு வலி காரணிகள்)



மேற்கோள்கள்

  1. Oregon Health & Science University [Internet].Oregon; Foot and Ankle Video Resources.
  2. Oregon Health & Science University [Internet]. Oregon; Hand and Upper Extremity Video Resources.
  3. G. L. Gallucci et al. Extensor Tendons Rupture after Volar Plating of Distal Radius Fracture Related to a Dorsal Radial Metaphyseal Bone Spur. Published online 2018 Feb 28. PMID: 29682379
  4. Orthoinfo [internet]. American Academy of Orthopaedic Surgeons, Rosemont IL. Plantar Fasciitis and Bone Spurs.
  5. National Institute of Arthritis and Musculoskeletal and Skin Diseases; [Internet]. U.S. National Library of Medicine. Osteoarthritis

எலும்பு துருத்த வளர்ச்சி டாக்டர்கள்

Dr. Vikas Patel Dr. Vikas Patel Orthopedics
6 Years of Experience
Dr. Navroze Kapil Dr. Navroze Kapil Orthopedics
7 Years of Experience
Dr. Abhishek Chaturvedi Dr. Abhishek Chaturvedi Orthopedics
5 Years of Experience
Dr. G Sowrabh Kulkarni Dr. G Sowrabh Kulkarni Orthopedics
1 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்