உடல் வலி - Body Pain in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

November 28, 2018

July 31, 2020

உடல் வலி
உடல் வலி

உடல் வலி என்றால் என்ன?

 உடல் வலி என்பது உங்களை களைப்பாக மற்றும் மந்தமாக உணர வைத்து உடல் முழுதும் ஒரு விரும்பத்தகாத உணர்வை அளிப்பதாகும். இது திடீரென்று ஏற்படலாம் அல்லது மெதுவாக ஏற்படலாம் மற்றும் பல நாட்களுக்கு இந்த வலி நீடிக்கும். இது மெல்லிய திசுக்களாகிய தசை நாண்கள் அல்லது தசை நார்களில் வலி ஏற்படும் அல்லது மற்ற தசைகளிலும் ஏற்படும். சில சமயம் அது வேறு மோசமான நோயை குறிக்கும், சில நேரங்களில் இது பதட்டம் ஏற்படுவதன் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

உடல் வலி கடுமையானதாக அல்லது நீண்ட காலமாக நீடித்திருக்கும், ஆனால் ஏறக்குறைய ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் காணப்படும்; கடுமையானது (சில நாட்களுக்கு நீடிக்கும்) அல்லது நீண்ட காலமாக நீடித்திருக்கும் (ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும்). இந்த இரண்டு வகைக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன.

 உடல் வலியை குறிக்கும் அறிகுறிகள்:

  • உடம்பில் பல இடங்களில் வலி இருக்கும்.
  • மூட்டுகளை அழுத்தும் பொழுது மிகுந்த வலி ஏற்படும்.
  • சோர்வு.
  • தூக்கமின்மை; காலை எழும் பொழுது சோர்வாக இருத்தல்.
  • காலைநேர விறைப்பு (30 நிமிடங்களுக்கும் குறைவாக).
  • கூச்சத்தன்மையும் உணர்வின்மையும் கை மற்றும் கால்களில் ஏற்படும்.
  • தலை வலி.
  • பதற்றம்.

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

சில நாட்களுக்கு அல்லது அதிக நாட்களுக்கு வரும் உடல் வலி இரண்டிற்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்கும்.

சில நாட்கள் நிகழும் உடல் வலியின் காரணங்கள்:

  • அதிர்ச்சி அல்லது காயம்.
  • நீர்ச்சத்துக் குறைவு.
  • ஹைபோகலீமியா (உடலில் குறைந்த பொட்டாசியம் அளவு).
  • தூக்க பற்றாக்குறை.
  • கடுமையான வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள்.
  • மிகுந்த உடல் உழைப்பு.

அதிக நாட்களுக்கு நீடிக்கும் உடல் வலியின் காரணங்கள்:

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

சில சமயங்களில் நோயின் சரியான காரணத்தை கண்டறிவது கடினம்; தேவையான மருத்துவ வரலாறும், மருத்துவ பரிசோதனையும் சரியான காரணத்தை கண்டறிய மிகவும் அவசியம். இந்த மருத்துவ வரலாறும் மருத்துவ பரிசோதனையும் மட்டுமல்லாமல் இரத்த பரிசோதனையின் மூலம் நாம் உடல் வலியின் காரணத்தை கண்டறியலாம். அவை:

  • முழுமையான இரத்த அணுக்கள் அளவு - இரத்த சோகை உள்ளதா என்று கண்டறிதல்.
  • எரித்ரோசைட் அலகு வீதம் (இ.எஸ்.ஆர்) மற்றும் சி-எதிர்வினை புரதம் (சி.ஆர்.பி) இவை உடலில் உள்ள வீக்கம் ஆகியவற்றை கண்டறிய உதவுகிறது. 
  • அல்கலைன் பாஸ்பேட்ஸ் மற்றும் அஸ்பர்டேட் டிரான்ஸாமினேஸ் - இது தசை முறிவு ஏற்பட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்தும்.
  • முடக்கு கீழ் வாதம் காரணி - கீழ் முடக்கு வாதம் உள்ளதா என்பதை உறுதி செய்யும்.
  • எதிர்ப்பு அணு ஆன்டிபாடிகள் - தற்சார்பு ஏமக்கோளாறு காரணிகளால் உடல் வலி ஏற்படுகிறதா என்று அறிவதற்காக செய்யப்படுகிறது.
  • வைட்டமின் பி12 மற்றும் டி3 அளவுகள் - ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ளதா என்று அறிய வேண்டும்.

இதற்கு பிறகும் காரணம் கண்டறிய முடியவில்லை என்றால், உளவியலாளர் அல்லது ஆலோசகருடன் ஓர் சந்திப்பு, உடல் வலியின் அடிப்படை காரணம், மன அழுத்தம்,பதட்டம், அல்லது மனச்சோர்வா என்று கண்டறிய உதவும்.

உடல் வலிக்கான காரணம் முதலில் தெரிந்துவிட்டால், பின்பு காரணத்தைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். சிலருக்கு வெறும் நோய்க்குறி சிகிச்சை போதும் மற்றவருக்கு வெறும் ஆறுதல் மருந்து மற்றும் ஆலோசகரின் அறிவுரை இருந்தால் போதும்.

இதை குணப்படுத்த பயன்படுத்தும் சில மருந்துகள்:

  • வலி நீக்கிகள் - பாராசிட்டமால் அல்லது ஸ்டிராய்டு அல்லாத எதிர்ப்பு அழற்சி (டைக்லோஃபெனாக் போன்ற மருந்துகள்) மருந்துகள் வலி நிவாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். 
  • தசை தளர்த்திகள் - தசை இறுக்கத்தால் ஏற்படும் உடல் வலிக்கு;தசை தளர்த்திகள் எடுத்துக் கொள்ளலாம்.
  • வைட்டமின் பிற்சேர்ப்புகள் - உடல் வலி ஊட்டச்சத்து குறைப்பட்டால் ஏற்படுகிறது என்றால் அதற்கு வைட்டமின் கூடுதலாக எடுத்துக்கொள்ளலாம்.
  • ஆன்க்ஸியோலிடிக் அல்லது ஆண்டி-டிப்ரசன்ட்கள் - இவற்றை தன்னிச்சையாக மருந்துக் கடைகளில் வாங்க முடியாது, ஒரு மருத்துவரின் பரிந்துரைப்படி மட்டுமே வாங்க முடியும், உடம்பு வலிக்கு உளவியல் காரணமாக இருந்தால் இவை உதவும்.

சில சமயம் உடல் வலி, தசை இறுக்கத்தால் ஏற்பட்டால், அதற்கு பிசியோதெரபி, மசாஜ், அக்குபஞ்சர் அல்லது மற்ற வகை சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது உதவும்.



மேற்கோள்கள்

  1. Stuart Ralston, Ian Penman, Mark Strachan, Richard Hobson. Davidson's Principles and Practice of Medicine E-Book. 23rd Edition: Elsevier; 23rd April 2018. Page Count: 1440
  2. J. Larry Jameson et al. Rediff Books Flipkart Infibeam Find in a library All sellers » Shop for Books on Google Play Browse the world's largest eBookstore and start reading today on the web, tablet, phone, or ereader. Go to Google Play Now » Books on Google Play Harrison's P. 20, illustrated; McGraw-Hill Education, 2018. 4400 pages
  3. National Health Service [Internet]. UK; Treatment - Fibromyalgia
  4. U.S. Department of Health & Human Services. Myalgic Encephalomyelitis/Chronic Fatigue Syndrome. Centre for Disease Control and Prevention; [Internet]
  5. Sheldon Cohen et al. Chronic stress, glucocorticoid receptor resistance, inflammation, and disease risk. The Rockefeller University, New York, NY, and approved February 27, 2012.

உடல் வலி க்கான மருந்துகள்

Medicines listed below are available for உடல் வலி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.