குருதியுறையாமை என்றால் என்ன?
குருதியுறையாமை என்பது இரத்தம் உறைய முடியாத ஒரு நிலையாகும், இந்த பிரச்சனை இரத்தபோக்கு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். ஒழுங்கற்ற அல்லது முறையற்ற இரத்தம் உறையாமையானது, இரத்த கூறுகள் அல்லது உறைதல் காரணிகளில் ஏற்படும் ஏதேனும் குறைபாடு காரணமாக இருக்கலாம். நமது உடல் பதிமூன்று உறைதல் காரணிகளை உண்டாக்குகிறது, மற்றும் உறைதல் காரணிகளில் ஏற்படும் குறைபாடு அல்லது பற்றாக்குறையே மெல்லிய இரத்த நாளங்களில் குருதியுறையாமை மூலம் இரத்த போக்கை ஏற்படுத்துகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பின்வரும் அறிகுறிகள் தனிப்பட்ட முறையில் இரத்தபோக்கு கோளாறுகளுக்கான காரணங்கள் என அறியப்படுகிறது:
- விவரிக்க முடியாத நிலையில் மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்.
- ஈறுகளில் இரத்தக்கசிவு.
- சிறு வெட்டுக்கள் மற்றும் ஊசி மூலமாக கூட நீண்ட காலத்திற்க்கு இரத்தபோக்கு ஏற்படுதல்.
- அறுவை சிகிச்சையின் போதும் அதற்கு பிறகும் அதிகபடியான இரத்தபோக்கு.
- பல் சிகிச்சைக்குப் பிறகு நீண்ட நேர இரத்தப்போக்கு.
- இரத்தத்தில் எந்த கட்டியும் இல்லாமல் கடுமையான மாதவிடாய் இரத்தப்போக்கு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இரத்தப்போக்கு குறைபாடுகள் விடுபட்ட அல்லது சேதமடைந்த உறைதல் காரணிகள் காரணமாக ஏற்படுகிறது, இரத்த தட்டுகள் இரத்தத்தில் குறைந்து காணப்படுதல், அல்லது இரத்த தட்டுகளின் முறையற்ற செயல்பாடுகளினாலும் இவ்வாறு ஏற்படுகிறது. குருதியுறையாமை ஏற்பட அடிப்படைக் காரணங்களாக கீழ் வருவதை வகைப்படுத்தலாம்:
- ஹீமோபீலியா போன்ற மரபணு அல்லது அது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது (மரபு வழி இரத்தப்போக்கு கோளாறுகள்).
- இரத்தசோகை போன்ற வேறு சில ஆரோக்கிய நிலைமைகள், வைட்டமின் கே பற்றாக்குறை, எச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்று, கல்லீரல் அழற்சி, இரத்த புற்றுநோய் ஆகியவை காரணமாகவும் ஏற்படுகிறது.
- ஆஸ்பிரின், வார்ஃபரின் மற்றும் ஹெபரின் போன்ற மருந்துகளை நீண்ட காலமாக உட்கொள்ளல்.
இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
குருதியுறையாமை கோளாறுகளைப் பின்வரும் விதங்களினால் கண்டறியலாம்:
- முழுமையான மருத்துவ பரிசோதனை பற்றிய ஆய்வு.
- முழு உடல் பரிசோதனை.
- முழுமையாக இரத்த எண்ணிக்கையை கணக்கிட இரத்த பரிசோதனை.
- இரத்த உறைதலுக்கான நேரத்தை கண்டறியும் பரிசோதனை.
- இரத்தத்தில் உள்ள புரத குறைபாட்டை கண்டறியும் சோதனை.
மெல்லிய இரத்த நாளங்களின் ஏற்படுகின்ற கோளாறுகள் அதன் நிலமைகளின் சிகிச்சையானது தீவிரத்தை பொறுத்து மாறுபடுகிறது. சில இரத்தபோக்கு பிரச்சனைகளுக்கு, இரத்த போக்கை தடுக்க இரத்தம் உறைதல் காரணிகள் உட்செலுத்தப்படுகிறது, அதேசமயத்தில், மற்ற கோளாறுகளுக்கு, மேற்பூச்சு மருந்துகள் அல்லது நாசியில் உபயோகிக்கும் தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. கீழ்கண்ட சிகிச்சை வழிமுறைகள் ஒருவேளை இரத்தபோக்கிற்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படலாம்:
- வைட்டமின் கே ஊசிகள்.
- இரத்த பிளாஸ்மா அல்லது இரத்த தட்டுகள் மாற்றுதல்.
- இரத்தம் உறைவதற்கு உதவும் மருந்துகள்.
- இரத்த குழாய்கள் தொடர்பான முரண்பாடுகளை குணப்படுத்த ஹைட்ராக்ஸியூரியா போன்ற பிற மருந்துகள் பயன்படுத்தப்படலாம்.