உயர் இரத்த அழுத்தமானது முற்றிலும் குணப்படுத்த இயலாது. ஆனால் முறையான பராமரிப்பு மற்றும் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த இயலும். உயர் இரத்த அழுத்த சிகிச்சையானது உங்கள் மருத்துவர் எடுத்த இரத்த அழுத்த அளவீடுகளை பொருத்து இருக்கும். சிகிச்சை தொடுங்குவதற்கு முன்பாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இரத்த அழுத்த அளவீடுகள் எடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் சிகிச்சை ஆரம்பிக்க பட வேண்டும்.
- உங்களின் இரத்த அழுத்தம் 120/80 mm Hg மெர்குரியின் அளவில் இருந்து சரியான அளவில் அல்லது அதற்கு கீழே இருந்தால், உங்களின் இரத்த அழுத்தம் உயர்வதை தவிர்க்க வாழ்க்கை முறையையும், உணவு முறையையும் ஆரோக்கியமாக பின்பற்றி அதனுடன் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும் என மருத்துவர் அறிவுருத்துவார்.
- உங்கள் சிஸ்டாலிக் பிபி (இரத்த அழுத்தம்) 120-129 mm Hg மெர்குரியின் அளவில் இருந்து ஆனால் டைஸ்டாலிக் பிபி 80 mm Hg-க்கு குறைவாக இருந்தால், மருத்துவர் உங்களை ஆரம்ப நிலை இரத்த அழுத்த நோயாளி என்று அதாவது முன் உயர் இரத்த அழுத்த வகையைச் சேர்ந்தவர் என்று கூறுவர். இந்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு மருந்துகள் தேவையில்லை ஆனால் தினசரி உடற்பயற்சியும் உணவு கட்டுப்பாடும் வேண்டும். ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை இரத்த அழுத்ததை வீட்டில் மின்னணு இயந்திரம் மூலம் அல்லது மருத்துவ நிலையத்தில் சென்று இரத்த அழுத்த அளவீடுகளை பார்வையிட வேண்டும் என மருத்துவர் அறிவுருத்துவார்.
- உங்கள் சிஸ்டாலிக் பிபி 130-139 mm Hg மெர்குரியின் அளவில் ஆனால் டைஸ்டாலிக் பிபி 80-89க்கும் குறைவாக இருந்தால், உங்களுக்கு முதல் நிலை உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக அர்த்தம். ஆதலால் மருத்துவர் உங்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகள், உணவு மாற்றங்கள், உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாடான இரத்த அழுத்த பரிசோதனைகளை பரிந்துரைக்கலாம்.
- உங்கள் சிஸ்டாலிக் பிபி 140mm Hg மெர்குரியின் அளவில் அல்லது அதிகமாக இருந்து மற்றும் டைஸ்டாலிக் பிபி 90mm Hg மெர்குரியின் அளவிற்க்கும் குறைவாக அல்லது அதிகமாக இருந்தால், உங்களுக்கு இராண்டாம் நிலை முன் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக அர்த்தம். ஆதலால் மருத்துவர் உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள், கட்டுப்பாடான உணவு மாற்றங்கள், உடற்பயிற்சி மற்றும் கண்டிப்பான இரத்த அழுத்த கண்கானிப்புகளை பரிந்துரைக்கலாம்.
- கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ், எசிஇ இன்ஹிபிட்டர்ஸ், பீட்டா பிளாக்கர்ஸ், மற்றும் டையூரிட்க்ஸ் போன்ற உயர் இரத்த அழுத்த மருந்துகள் ஆண்டிஹய்பர்டென்சிஸிவ் மருந்துகளாக பயன்படுகின்றன. இதில் ஒன்று அல்லது இரண்டின் கலவை அல்லது அதற்கு மேற்ப்பட்ட மருந்துகளின் கலவை உயர் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது. இரத்த அழுத்த அளவீடுகள், நோயின் தீவிரம், வயது மற்றும் தேவையான மருந்துகள் இவ்வற்றின் அடிப்படையில் மருத்துவர் மருந்துகளை தேர்வு செய்வார்.
- உயர் இரத்த அழுத்த மருந்துகள் எடுத்துகொள்ளும்போது உப்பு கட்டுப்பாடு, மன அழுத்தம் தவிர்த்தல், மற்றும் தினசரி உடற்பயிற்சி அவசியம். இதனால், மேலும் இதன் மூலம் வரக்கூடிய உயர் இரத்த அழுத்த சிக்கல்களை தவிர்க்கலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றங்கள்
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் .ஃப்ரைடு ரைஸ், ஃப்ஸ்ட் புட் போன்றவற்றை தவிர்க்கவும்.
- ஆல்கஹால் உட்கொள்ளுதளை குறைத்தல்
அழுத்தத்தை சீராக வைக்க ஆல்கஹால் மற்றும் புகையிலை உட்கொள்ளுவதை குறைக்கவும், முடிந்தவரை தவிர்ப்பது நல்லது மேலும் இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.
- குறைந்த அளவு உப்பு, மற்றும் அடைத்துவைக்கப்பட்ட நெடுங்கால புட்டி வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது, அதில் அதிக அளவு சோடியம் உள்ளது.
- கட்டுக்கோப்பாக இருக்கவும்
தினசரி உடற்பயிற்சிகளில் நடைபயிற்சி, ஜாகிங், நீச்சல் மற்றும் தீவிர பயிற்சி ஆகியவற்றை சேர்த்துகொள்ளுதல் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். ஆனால் அவை உங்கள் மருத்துவர் அல்லது நிபுணர் வழிகாட்டுதலின் படி இருக்க வேண்டும்.
- மன அழுத்தத்தை கட்டுப்படுத்தல்
மன அழுத்தமும் உயர் இரத்த அழுத்ததின் முக்கிய காரணி ஆகும். அதை கட்டுப்படுத்த யோகா, தியானம், சுவாச பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ளுதல் மூலம் மனஅழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தை முறைப்படுத்தி கையாள முடியும்.
வாழ்கைமுறை மேலாண்மை:
உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டால் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வருவது மிகவும் கட்டாய பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தினசரி வாழ்க்கையில் செய்யப்படும் மாற்றங்கள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முக்கியமானது. ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்தவும் ஆரோக்கியமான வாழ்க்கை நடவடிக்கைகள் உங்கள் மருந்துகளின் அளவைக் குறைக்கவும் வழிவகுக்கும் மற்றும் மேலும் சிக்கல்களை தவிர்த்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் அது உதவலாம். அத்தகைய வாழ்கைமுறை மாற்றங்கள் பின்வருமாறு:
- உங்கள் எடையை கண்காணிக்கவும்:
உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உடல் எடையை குறைப்பது மிகவும் பயனுள்ள வழியாகும்.எடை அதிகரிப்பு இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வழி வகுக்கும். உடல் பருமன் அதிகப்படியான இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான ஆபத்தான காரணியாகும். உங்கள் உயரத்திற்கும் வயதிருக்கும் பொருத்தமான எடையை நீங்கள் அடைய முயற்சிக்க வேண்டும். சிறந்த உடல் நிறை குறியீட்டெண் 18 மற்றும் 24.5 kg/m2 க்கு இடையில் இருக்க வேண்டும்.
- தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும்:
பல உடல்நலப் பிரச்சினைகளை தவிர்க்க தினசரி உடற்பயிற்சி செய்வது முக்கியம். வாரம் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். மிக முக்கியமாக, சிறந்த பலனை அடைய உடற்பயிற்சியை வழக்கமாக தொடர்ந்து செய்ய வேண்டும். உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் நீங்கள் சேர்த்துக்கொள்ளக்கூடிய பிற பயிற்சிகள் நீச்சல், நடனம், ஜாகிங், ஓடுதல் போன்றவை. எந்த ஒரு உடற்பயிற்சியை தொடங்கும் முன்பும் உங்கள் மருத்துவர் அல்லது உடல் உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியமாகும்.
- DASH உணவு முறை பழக்கத்தை பின்பற்றவும்:
ஆரோக்கியமான உணவு பழக்கம், ஆரோக்கியமான உடலுக்கு முக்கியமானது. ஒரு ஆரோக்கியமான உணவு முறையில் முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆகியவை அடங்கும்.மேலும், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நல்ல கொழுப்பு கொண்ட உணவுகளும் இதில் அடங்கும். இந்த உணவு முறை உணவுப்பழக்கவழக்கத்தின் மூலம் உயர் இறைத்த அழுத்த நிறுத்தம் எனப்படும் Dietary Approaches to Stop Hypertension (DASH)” டேஸ்” எனவும் அழைக்கப்படுகிறது. எப்போதும் நீண்ட காலமாக நீங்கள் பின்பற்றும் உணவு பழக்கத்தை மாற்றுவது கடினம் என்றபொதிலும் ஒரு நல்ல ஆரோக்கியமான உணவு முறையை எப்போதும் தங்களுக்குள் உற்சாகப்படுத்துங்கள். சமையலறையில் ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை வைத்துக் கொள்ளாதீர்கள், அது உங்கள் பசியையும் உங்களின் கட்டுப்பாடான உணவு பழக்கத்தையும் ஆழ்ந்த சோதனைக்கு உள்ளாக்கும்.
- உப்பு உட்கொள்வதை கட்டுப்படுத்தவும்:
இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டின் கீழ் பராமரிப்பதற்கு உணவில் பயன்படுத்தும் சோடியம் எனப்படும் உப்பு பயன்பாட்டை குறைப்பது மிகவும் முக்கியம். உணவு லேபிள்களில் குறிப்பிடப்பட்டுள்ள உப்பின் அளவீட்டை எப்போதும் படித்து பார்க்கவும். உணவில் உப்பு கட்டுப்பாடு அளவிற்கான ஆலோசனையை உங்கள் மருத்துவரிடம் பெறலாம். ஏற்கனவே தயார் செய்யப்பட்ட உணவின் மீது கூடுதல் உப்பு தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.
- ஆல்கஹால் பயன்பாட்டை குறைக்கவும்:
மிதமான அளவு எடுத்துக் கொண்டால் மதுபானம் இதயத்திற்கு நன்மை பயக்கும், மாறாக அதிகமான அளவு எடுத்துக் கொள்வதால் தீங்கே விளையும். ஆல்கஹாலால் ஏற்படும் விளைவுகளை புரிந்துகொள்வதற்கு டாக்டரிடம் பேசலாம் மற்றும் எவ்வளவு அளவு ஆல்கஹாலை உட்கொள்ளலாம் என கேட்டு தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
புகைப்பிடித்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே, சிகரெட் புகைப்பதை படிப்படியாகக் குறைத்து, பின்னர் புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள். இது உங்களுக்கு இதய நோய் உருவாவாகும் அபாயத்தை தவிர்த்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
- மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்:
மன அழுத்தம் மிக்க வாழ்க்கை முறையானது இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். எனவே, தியானம் கற்றல் மூலம் மன அழுத்ததை குறைத்தல் உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
- உங்கள் மருத்துவரைப் பார்க்கவும்:
வழக்கமாக தவறாமல் சென்று மருத்துவரை அணுகுகி உடல்நிலயை சோதனை செய்து உங்கள் இரத்த அழுத்தத்தை கண்காணிப்பதன் மூலம் மருத்துவர் உங்கள் சிகிச்சையின் பலனை கவனிக்க முடியும் மற்றும் தேவையான மாற்று சிகிச்சை செய்ய முடியும்.
உங்கள் மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆதரவு அவசியம்.