காது அடைப்பு என்றால் என்ன?
நடுக் காது உங்கள் மூக்கின் பின்பகுதியில் ஈஸ்டாக்கியன் குழாய் என அழைக்கப்படும் குழாய்களின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது, இந்த குழாயில் ஏற்படும் அடைப்பே காது அடைப்புக்கு வழிவகுக்கிறது. இந்த நிலையில், காதுகள் நிரம்பியிருப்பது போன்றோ அல்லது காதுகளில் அழுத்தமிருப்பது போன்றோ உணரலாம். இந்த குழாயில் பல்வேறு காரணங்களால் அடைப்பு ஏற்படலாம் அவை காதில் மெழுகு உருவாவதிலிருந்து காதில் ஏற்படும் தொற்றிலிருந்து திடீர் மாற்றத்தினால் ஏற்படும் காது அழுத்தம் வரை வேறுபடுகிறது.
இதனுடன் முக்கிய தொடர்புடைய காரணிகள் மற்றும் அறிகுறிகள் என்ன?
பின்வரும் அறிகுறிகள் காது அடைப்புடன் காணப்படுகின்றவை:
- தலைச்சுற்றல்.
- இருமல்.
- காதுகளில் ஏற்படும் வலி (காதுவலி) மற்றும் காது நிரம்பியிருக்கும் உணர்வு.
- பாதிக்கப்பட்ட காதில் அரிப்பு ஏற்படுதல்.
- காதுகளில் இருந்து வெளியேறும் நாற்றம் அல்லது கேட்ட வாடை.
- சுற்று புறத்தில் எந்தவித சத்தம் இல்லாத போதும் காதுகளில் ஏற்படும் ஒலி (காதிரைச்சல்) அல்லது இரைச்சல்.
- பாதிக்கப்பட்ட காதின் காரணமாக குறைவான கேட்கும் திறன் அல்லது காது கேட்பதில் ஏற்படும் சிரமம், இது தொடர்ந்தால் மேலும் மோசமடையலாம்.
ஒரு தனிநபர் காதுவலி அல்லது குறைவான கேட்கும் திறன் போன்ற சிரமத்தை சந்திக்க நேர்ந்தால், மருத்துவர்கள் காதின் பிற மருத்துவ நிலைகளை சோதிக்கும் படி அறிவுறுத்துவார்கள், அதாவது சேதமடைந்த செவிப்பறை போன்ற மற்ற தேவையான உடனடி சிகிச்சையில் கவனம் செலுத்துவார்கள்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
வெளிப்புற காது கால்வாயின் வெளிப்பகுதி தோலினாலானது. அந்த தோல் மெழுகை சுரக்கும் சுரப்பிகளை கொண்டிருக்கும். ஆழ்ந்த கட்டமைப்புகள், அதாவது செவிப்பறை போன்றவைக்கு எந்த சேதமுமின்றி பாதுகாப்பது, தூசி மற்றும் பிற அயல் துகள்களை தடுக்கும் இந்த மெழுகு மற்றும் சிறிய முடிகளே. வழக்கமாக புது மெழுகு சுரந்தபின் ஏற்கனவே இருக்கும் மெழுகில் சிறிதளவு காதின் வாயிலில் எறியப்படுகிறது. எனினும், இந்த மெழுகு அதிகப்படியாக சுரந்தாலோ அல்லது சரியான முறையில் வெளியேற்றப்படாவிட்டாலோ, அது மென்மேலும் சேர்ந்துக்கொண்டே போகும். இது காது அடைப்புக்கு வழிவகுக்கும். பால்பாய்ண்ட் பேனாக்கள், ஊக்குகள் போன்றவைகளைப் பயன்படுத்தி தங்கள் காதுகளை சுத்தம் செய்ய முயற்சி செய்யும் நபர்களுக்கு இந்த காது அடைப்பு மிகவும் பொதுவானது.
காது அடைப்புக்கான பிற பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
- சைனஸ் தொற்று, குளிர் அல்லது ஒவ்வாமையினால் ஏற்படும் ஈஸ்டாக்கியன் குழாயின் வீக்கம்.
- திரவம் சேர்தல்.
- காதில் ஏற்படும் தொற்று.
- நீர் மூழ்குதல் செய்யும் போது, பறக்கும் போது, ஏற்படும் அழுத்ததின் மாற்றங்கள்.
இது எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
காது அடைப்பு பொதுவாக செவி அகநோக்கி எனப்படும் சிறந்த கருவியின் மூலம் கண்டறியப்படுகிறது. இது விளக்குகள் மற்றும் உருபெருக்கிகளை பயன்படுத்தி உள் காதுகளை பெரிதாகக்காட்டுகிறது, இது மருத்துவர் உங்கள் காதுகளைப் எளிதாக பரிசோதிப்பதற்கு உதவுகிறது.
காது அடைப்புக்கான சிகிச்சை பின்வருமாறு:
- ஈஸ்டாக்கியன் குழாய் குளிரினாலோ அல்லது அதிக உயரங்களின் காரணமாகவோ அடைக்கப்பட்டால் பின்வருபவற்றை முயற்சிக்கவும்:
- சர்க்கரை-இல்லாத மெல்லும் கம் அல்லது விழுங்குதல், கொட்டாவிவிடுதல் ஆகியவை ஈஸ்டாக்கியன் குழாய்களை திறக்க உதவுகிறது.
- மேற்கண்ட தீர்வு ஒத்துவரவில்லை எனில் உங்கள் மூக்கினை இருக்கி மூடிக்கொள்தல் மற்றும் வாயை மூடி, மெதுவாக மூச்சுவிடுதல் போன்ற முறைகளை பயன்படுத்தி மீண்டும் முயற்சி செய்துபாருங்கள். ஒரு சிறுவெடித்துளை சத்தம் இந்த குழாய் திறப்பதை குறிக்கிறது.
- மெழுகு காரணமாக காது கால்வாய் அடைக்கபட்டிருக்கையில், பின்வரும் முறைகளை பயன்படுத்தப்படுத்தலாம்:
- அதிகப்படியான மெழுகை நீக்க மருத்துவர் ஒரு சிறிய, வளைந்த கருவியான க்யுரேட்டை பயன்படுத்துகின்றனார்.
- மருத்துவர் மெழுகை நீக்கக்கூடிய உறிஞ்சும் அழுத்தத்தையும் பயன்படுத்தலாம்.
- தண்ணீரால் நிரப்பப்பட்ட குத்துக்கோடாரி அல்லது மிதமான சுடுதண்ணீரை கொண்ட ரப்பர் பல்ப் ஊசியைக் கொண்டு மருத்துவர் மெழுகை வெளியாற்றலாம்.
- ஒரு வேளை மீண்டும் அடைப்பு ஏற்பட்டால், மருத்துவர்கள் மெழுகு-நீக்கதுக்கான மருந்துகளை பரிந்துரைக்கின்றனர், இதனால் மெழுகு உருகிய பின் காட்டன் காது பட்ஸ் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
- ஒவ்வாமை கொண்ட தனிநபர்களுக்கு, ஸ்டீராய்டு மருந்துகளோ அல்லது டிகன்ஜெஸ்டண்ட்ஸையோ மூக்கினுள் ஸ்பிரே செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது (வாய்வழியாகவோ அல்லது மூக்கு தெளிப்பான் போலவோ பயன்படுத்துவது), இது தானாகவே அடைப்பை சுத்தம் செய்துவிடுகிறது.
- தொற்று நோய்களுக்கு, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படலாம்.
- சில சந்தர்ப்பங்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈஸ்டாக்கியன் குழாயை சரிசெய்ய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.