கர்ப்ப கால இரத்தப்போக்கு - Bleeding During Pregnancy in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 14, 2018

March 06, 2020

கர்ப்ப கால இரத்தப்போக்கு
கர்ப்ப கால இரத்தப்போக்கு

கர்ப்ப கால இரத்தப் போக்கு என்றால் என்ன?

கர்ப்ப காலத்தில் யோனிக் குழாயில் ஏற்படும் இரத்தப்போக்கு, அது கர்ப்ப காலத்தின் எந்த மும்மாதத்தில் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து ஆபத்தானது அல்லது ஆபத்தில்லாதது என்று கூறப்படும். பெரும்பாலான சமயங்களில் கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு ஆபத்தில்லாதது ஆகும். எனினும் கர்ப்பகாலத்தின் 12வது வாரங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு கருச்சிதைவு அல்லது இடம் மாறி தோன்றும் கர்ப்பத்தால் ஏற்படலாம். பிரசவ காலத்தில் ஏற்படும் இரத்தப் போக்கிற்கான மற்ற காரணங்களில் கருப்பையில் ஏற்படும் நோய்த்தொற்று, கருப்பை வாயில் ஏற்படும் ஒழுங்கீனம், நஞ்சுக்கொடியில் ஏற்படும் முறிவு, நஞ்சுக்கொடி இறங்கிய நிலையில் இருத்தல் ஆகியவை உள்ளடங்கும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

கர்ப்பகாலத்தின் முதலாம் மற்றும் இரண்டாவது வாரங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு இந்த அறிகுறிகள் மற்றும் அடையாளங்களோடு சேர்ந்ததல்ல. கர்ப்ப காலத்தின் பின் மாதங்களில் ஏற்படும் இரத்தப்போக்கு கருச்சிதைவு அல்லது இடம் மாறித் தோன்றும் கர்பம் (கருப்பை அல்லாமல் வேறு இடங்களில் பொதுவாக கருமுட்டை குழாயில் கருமுட்டை இணைவது) போன்று தீவிர பிரச்சனைகளின் அறிகுறிகளாகும். அதற்கான அடையாளங்கள்:

கர்ப்ப காலத்தில் இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?

  • கர்ப்பக் காலத்தின் தொடக்க காலங்களில் இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்:
    • கருமுட்டை கருத்தரித்த பின் கருப்பையில் பொருத்தப்படும் போது முதல் 1 - 2 வாரங்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படலாம்.
    • உடலுறவுக்குப் பின் கருப்பை வாய்க்கு அதிக இரத்த ஓட்டம் இருப்பதால் இரத்தக்கறையை காணலாம்.
    • நோய்த்தொற்று.
    • கருச்சிதைவு அல்லது ஆரம்ப கால கட்டத்தில் ஏற்படும் கருக்கலைவு.
    • இடம் மாறித் தோன்றும் கற்பம்.
  • கர்ப்ப காலத்தின் பிற்காலங்களில் இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்:
    • கருப்பை வாய் பாலிப் அல்லது கருப்பை வாய் மற்றும் கருப்பையில் ஏற்படும் வளர்ச்சி (நார்த்திசுக்கட்டிகள்).
    • நஞ்சுக்கொடியில் ஏற்படும் முறிவு.
    • கீழ் இறங்கிய நஞ்சுக்கொடி.
    • குறைப்பிரசவம்.
    • நஞ்சுக்கொடி கர்ப்பப்பையின் சுவர்களுக்குள் சென்று பிரிக்கமுடியாதபடி ஆகுவது.

இதை எப்படி கண்டறிவது மற்றும் சிகிச்சை அளிப்பது?

விரிவான மருத்துவ விசாரணை,அடையாளங்கள்,உடல் சோதனை, யோனிக்குழாய் சோதனை மற்றும் பல்வேறு சோதனைகளைக் கொண்டு மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிவார்கள்.

  • யோனிக்குழாய் சோதனை மூலம் நோய்த்தொற்று, கருப்பைவாய் புற்றுநோய், கருப்பைவாய் பாலிப் போன்ற காரணங்களால் ஏற்படும் இரத்தப்போக்கை கண்டறிய உதவும்.
  • யோனிக் குழாயில் இருந்து வரும் இரத்தத்தில் இருக்கும் திசுகளில் கோரியோனிக் வில்லீ உள்ளதா என்பதை நுண்ணிய ஆய்வின் மூலம் கண்டறிந்து, கருச்சிதைவை கண்டறியலாம்.
  • அல்ட்ராசோனோகிராபி கர்ப்பகாலத் திசுப்பை, கருவின் இதயத்துடிப்பு மற்றும் இடம் மாறி தோன்றும் கற்பம் ஆகியவற்றைக் கண்டறிய உதவும்.
  • மெதுவாக ஏறும் பீட்டா மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் அளவு, ஏற்படப்போகும் கருச்சிதைவு அல்லது இடம் மாறி தோன்றும் கர்ப்பம் ஆகியவையை சுட்டிக்காட்டும்.

சிகிச்சைகள்:

  • கருமுட்டையை பொருத்துவதால் காணப்படும் இரத்தக்கரை, சிகிச்சை இல்லாமல் தானாகவே சரியாகிவிடும்.
  • கருச்சிதைவு அல்லது இடம் மாறி தோன்றும்  கர்ப்பத்தால் உண்டாகும் இரத்தப் போக்கிற்கான சிகிச்சை:
    • கருச்சிதைவு தவிர்க்க முடியாததாக இருக்கும் போது-கருப்பையில் இருக்கும் திசுவை இயற்கையாகவோ, மாத்திரை மூலமோ அல்லது அறுவை சிகிச்சை மூலமோ வெளியேற்ற வேண்டும்.
    • இடம் மாறித் தோன்றும் கர்ப்பத்தில் மீதமுள்ள திசுவை அறுவை சிகிச்சையின் மூலம் வெளியேற்ற வேண்டியது அவசியமாகும்.
    • கர்ப்ப காலத்தில் கருக்கலைப்பு ஏற்படக்கூடிய நிலையில் சில சமயங்களில் புரோஜெஸ்ட்டிரோன் இயக்குநீர் மற்றும் அதன் மாறுபட்ட வடிவங்கள் வழங்குவதன் மூலம் ஏற்படக்கூடிய இரத்தப்போக்கை சமாளிக்கலாம்.
    • Rh-நெகடிவ் இரத்தசோகை உள்ள பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய இழப்பை தடுக்க Rh-இம்யூனோக்ளோபுலின் வழங்கப்படும்.



மேற்கோள்கள்

  1. National Health Service [Internet]. UK; Vaginal bleeding in pregnancy
  2. American College of Obstetricians and Gynecologists. Bleeding During Pregnancy. Washington, DC
  3. American Academy of Family Physicians. First Trimester Bleeding. Am Fam Physician. 2009 Jun 1;79(11):985-992.
  4. American College of Obstetricians and Gynecologists. Early Pregnancy Loss. Washington, DC
  5. G. Dante et al. Use of progestagens during early pregnancy. Facts Views Vis Obgyn. 2013; 5(1): 66–71. PMID: 24753930

கர்ப்ப கால இரத்தப்போக்கு டாக்டர்கள்

Dr. Samadhan Atkale Dr. Samadhan Atkale General Physician
2 Years of Experience
Dr.Vasanth Dr.Vasanth General Physician
2 Years of Experience
Dr. Khushboo Mishra. Dr. Khushboo Mishra. General Physician
7 Years of Experience
Dr. Gowtham Dr. Gowtham General Physician
1 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

கர்ப்ப கால இரத்தப்போக்கு க்கான மருந்துகள்

Medicines listed below are available for கர்ப்ப கால இரத்தப்போக்கு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.