பார்டோனெல்லோசிஸ் - Bartonellosis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 27, 2018

March 06, 2020

பார்டோனெல்லோசிஸ்
பார்டோனெல்லோசிஸ்

பார்டோனெல்லோசிஸ் என்றால் என்ன?

பார்டோனெல்லோசிஸ் என்பது பார்டோனெலா இனங்களால் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களின் தொகுப்பைக் குறிக்கிறது. உலகளவில் 1,00,000 பெரியவர்கள் மக்கட்தொகையில் 6.4 பேருக்கும் மற்றும் 1,00,000 குழந்தைகளின் மக்கட்தொகையில் 9.4 பேருக்கும், குறிப்பாக 5-9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எல்லா வயதுக்குட்பட்டோரையும் பாதிக்கிறது, ஆனால் இதனால் அடிக்கடி பாதிக்கப்படுவது <21 வயதுகுட்பட்டோரே.

இதன் முக்கிய அறிகுறிகள் மற்றும் குறியீடுகள் யாவை?

இது ஒரு சுய-கட்டுப்பாட்டு நோய் மற்றும் நிணநீர் கணுக்களின் வீக்கத்தைத் தொடர்ந்து காய்ச்சல் அல்லது சோர்வு -ஐ  ஏற்படுத்தக்கூடிய பண்பைக்கொண்டது.  அறிகுறிகளானது எப்போதுமே காணப்படக்கூடியது அல்ல. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த தொற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

பூனை கீறல் நோய்:

  • இதற்கான அறிகுறிகள் நாட்கள் அல்லது வாரங்களுக்கு கூட தெரியாமலிருக்கலாம்.
  • பாதிக்கப்பட்ட இடத்திலிருக்கும் தோலில் ஒரு சிவப்பு புள்ளி காணப்படலாம் மற்றும் சில நாட்களுக்கு பிறகு நோய் வெளிப்பாட்டினால் அது மேலும் அதிகரிக்கலாம்.
  • ஒரு வலியற்ற, நமைத்தல் இல்லாத கொப்புளமோ /பருக்களோ உருவாகும், அது கவனிக்கபடாமல் போகலாம் அல்லது காயம் காரணமாகவும் இருக்கலாம்.
  • தசை வலி, உடல்சோர்வு, சோர்வு மற்றும் தலைவலி ஆகியவை மற்ற அறிகுறிகளில் அடக்கமாகும்.
  • தொண்டை புண், பசியின்மை மற்றும் எடை இழப்பு ஆகியவற்றை எப்போதாவது காணலாம்.

கேரியனின் நோய்:

  • இந்த நோய்க்கு இரு நிலைகள் உள்ளன: திடீரென ஏற்படும் கடுமையான கட்டம் (ஓரோயா காய்ச்சல்) மற்றும் நோய் நீடித்திருக்கும் நிலை, தீங்கற்ற கட்டம் (வெருக பெரௌனா).
  • ஓரோயா காய்ச்சல் திடீரென தொடங்கிய காய்ச்சல், குளிர்ந்தத்தன்மை, பலவீனம், கடுமையான தலைவலி, அதிகப்படியான வியர்வை மற்றும் வெளிர் நிறத்தோல் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.
  • வெருக பெரௌனா சிகிச்சை அளிக்கப்படாத நபர்களுக்கு ஏற்படுகிறது. முதலில் சிறிய சிவப்பு-ஊதா புண்கள் வடிவத்தில் தோலில் தோன்றி, பின்னர் கணுக்களாகின்றன. அவை இரத்தக்  கசிவை  ஏற்படுத்தலாம், புண்களை உருவாக்கலாம்  அல்லது கொப்பளங்கள் -ஆக மாறலாம்.

அகழி காய்ச்சல்(ட்ரென்ச் காய்ச்சல்):

  • சில நாட்களிலேயே அறிகுறிகள் தெரியலாம் அல்லது வெளிப்பாட்டின் பின் 5 வாரங்களுக்கு அப்புறமும் அது தெரியலாம்.
  • திடீர் காய்ச்சல், தலைவலி, தலைச்சுற்று, குளிர்ந்தத்தன்மை, பலவீனம் மற்றும் கால்களில் வலி மற்றும் பிற்பகுதியிலும் வலியினை காணலாம்.
  • தற்காலிக தோல் அழற்சி மற்றும் மண்ணீரல் அல்லது கல்லீரலில் விரிவாக்கம் ஆகியவற்றையும் காணலாம்.

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

பார்டோனெல்லோசிஸ் என்பது பார்ட்டோனெல்லா இனங்களான நுண்ணுயிர்களால் ஏற்படும் தொற்று நோயாகும்.

பூனை கீறல் நோய் பார்டோனெல்லா ஹென்ஸெல்லே மூலம் ஏற்படுகிறது.

  • இது முக்கியமாக பூனை நக்குவதாலோ, கீறுவதாலோ அல்லது கடிப்பதலோ ஏற்படுகின்றது.
  • மனிதர்களுக்குப் பூனைப் பறவைகள் இந்த தொற்றுகளை பரிமாற்றம் செய்கின்றன.
  • பொதுவாக முழு வளர்ச்சியடைந்த பூனைகளை விட பூனைக்குட்டிகளே இந்த நோயை அதிகம் பரப்புகின்றன மேலும் இவை வழக்கமாக அறிகுறிகளை ஏற்படுத்தாதவைகள்.

கேரியனின் நோய் பார்டோனெல்லா பேசில்ஃபார்மைஸ் மூலம் ஏற்படுகிறது.

  • இந்த பாக்டீரியம் மணல் பறவையின் கடியின் மூலம் பரிமாற்றமாகி, இரத்த ஓட்டத்தில் இருக்கும் சிவப்பு இரத்த அணுக்களின் மேற்பரப்பில் இணைந்துக்கொள்கிறது.
  • அதன் செயல்பாடு மலேரியா நோய்த்தொற்று- ஐ ஒத்திருக்கிறது மற்றும் இது ஹீமோலிட்டிக் அனீமியாவிற்கு வழிவகுக்கிறது.

அகழி காய்ச்சல் பார்டோனெல்லா குய்டனா மூலம் ஏற்படுகின்றது.

  • இந்த பாக்டீரியம் மனித உடம்பில் இருக்கும் பேன்கள் மூலம் பரிமாற்றப்படுகிறது.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை என்ன?

ஆரம்பகாலத்தில் நோய் கண்டறிதல் வெளிப்பாட்டின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டும் மற்றும் பொதுவான குறியீடுகள் அல்லது அறிகுறிகளின் அடிப்படையிலும் உருவாகலாம். கண்டறிதல் சோதனைகள் பின்வருமாறு:

  • பாக்டீரியல் சீரோலஜி சோதனை என்பது ஐஜிஎம் மற்றும் ஐஜிஜி ஆன்டிபாடிகளை கண்டறிவதற்காக உறுதியானதும், பொதுவாதுமான இம்யூனோஃப்ளோரசன்ட் ஆன்டிபாடி சோதனையாகும்.
  • பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (பிசிஆர்) என்பது பார்டோனெலா தொற்றுநோயை சோதிக்க பயன்படுத்தப்படலாம். டி.என்.ஏ வரிசைமுறையின் மூலம் இதை உறுதி செய்யமுடியும்.
  • வெஸ்டர்ன் ப்ளாட் சோதனையானது சிறந்த தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது.
  • கல்ச்சர் சோதனையானது சாத்தியமே, ஆனால் ஆய்வக அமைப்பில் பாக்டீரியா வளர்வதற்கான நேரம் அதிகம் எடுக்கிறது மற்றும் நிலையான ஊடகத்தில் உணர்ச்சியற்றதாக இருக்கிறது.

சிகிச்சை முறைகள்:

  • சிக்கலான கேஸ்களில் ஆன்டிபையோட்டிக் சிகிச்சையே முக்கிய வரிசையில் இருக்கிறது.
  • பூனை கீறல் நோய் சுயமாகவே குணமாகிவிடும். வலி நிவாரண மருந்துகளும் வழங்கப்படலாம், மேலும் உட்புற வெப்பத்தை சம்பந்தப்பட்ட நிணநீர் மண்டலங்களைச் சுற்றியுள்ள தோல் மீதும் உபயோகிக்கலாம்.
  • என்சிபாலிட்டிஸ் போன்ற பூனை கீறல் நோயில் சிக்கல்கள் பொதுவாக முழுமையாக தன்னிச்சையான மீட்பை காட்டுகிறது.

தடுப்பு மற்றும் சுய பாதுகாப்பு குறிப்புகள்:

  • தெரு பூனைகளால் கீறப்படுதலை தவிர்க்கவும். செல்லபிராணிகளான பூனைகளை வீட்டின் உள்ளேயே வைத்துக் கொள்ளவேண்டும்.
  • பூனைகளை கையாண்டப்பிறகு கைகளை சுத்தமாக கழுவவேண்டும்.
  • நீளமான கைகளைக் கொண்ட உடைகளையே அணியுங்கள்.
  • உண்ணிகள் மற்றும் பேன்களுக்கான விலக்கிகளைப் பயன்படுத்துங்கள்.



மேற்கோள்கள்

  1. Journal of Neuroinfectious Diseases. Neurological Manifestations of Bartonellosis in Immunocompetent Patients: A Composite of Reports from 2005–2012. OMICS International; ISSN: 2314-7334
  2. American society for microbiology. Recommendations for Treatment of Human Infections Caused by Bartonella Species. Washington DC, USA.
  3. AIDSinfo. Bartonellosis . U.S. Department of Health and Human Services. [internet].
  4. National Organization for Rare Disorders. Bartonellosis. USA. [internet].
  5. Lyme and Tick-Borne Diseases Research Center. Bartonellosis. Columbia University. [internet]
  6. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Bartonella Infection (Cat Scratch Disease, Trench Fever, and Carrión’s Disease)
  7. International journal of infectious diseases. Prevalence of Bartonella henselae infection and its diagnosis in diverse clinical conditions in a tertiary care hospital in North India. International society of infectious diseases. [internet].
  8. Mada PK, Zulfiqar H, Joel Chandranesan AS. Bartonellosis. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan