சுருக்கம்
ஆஸ்துமா என்பது நுரையீரலில் மூச்சுக்குழாய்களில் ஏற்படும் சுருக்கத்தினால் (ப்ராஞ்சி) உண்டாகும் ஒரு சுவாச கோளாறு ஆகும். இது ஒரு நாள்பட்ட உடல்நல பிரச்சனை ஆகும். இது மரபணு வழியாக பரவக்கூடியது. இந்த நோயினால் சுவாச பாதையில், பூனை அல்லது நாயின் ரோமம், தூசி, பூவின் மகரந்தம், கரப்பான் பூச்சி (கற்று மாசு, பல்வேறு இரசாயனங்கள், வாசனை திரவியங்கள் அல்லது வலுவான வாசனையுள்ள வர்ணங்கள், புகையிலை, வானிலை மாற்றம், உடற்பயிற்சி, ஆஸ்பிரின் கொண்டிருக்கும் மருந்துகள், செயற்கைப் உணவு பாதுகாப்புகள்) போன்ற ஏதேனும் படுவதினால் அழற்சி முதல் எரிச்சல் வரை ஏற்படலாம். இது போன்ற ஒவ்வாமை ஏற்பட்டு மூச்சுக்குழாயின் உட்புறமும் வெளிப்புறமும் உள்ள தசைகளில் ஒடுக்கம் உண்டாகி மூச்சுவிட முடியாமை, இருமல், மார்பில் இறுகிய உணர்வு, மூச்சு திணறல் (சுவாசிக்கும் போது மார்பில் ஒலி கேட்டல்) போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.
பொதுவாக வீட்டிற்குள்ளேயே ஒவ்வாமை அறிகுறிகள் (படுக்கை விரிப்புக்களில் உள்ள தூசி, தரைவிரிப்புகள், மகரந்தம், செல்லப்பிராணிகளில் உள்ள தூசி) கொண்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா இருக்கிறது, இது அவர்களை நோயுற்றவர்களாக பள்ளிக்கு விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருக்க வைக்கிறது. ஆஸ்துமாவைக் குணப்படுத்த முடியாது என்பதால், கடுமையான தாக்குதல்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கும் கடுமையான தாக்குதல்கள் அடிக்கடி உண்டாவதை குறைப்பதற்கும் ஆஸ்துமா சிகிச்சை உதவும். உறிஞ்சும் ஸ்டெராய்டுகள், ப்ரொன்சோடிலேடேர்ஸ் (தசைகளை நிதானப்படுத்துதல் மற்றும் காற்று குழாய்களை திறக்கும் மருந்துகள்) மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள், பொதுவாக ஆஸ்த்துமாவின் சிகிச்சையில் பரிந்துரைக்கப்படுகின்றன. கூடுதலாக, சுய-பராமரிப்பு: உங்களுக்கு அழற்சி ஏற்படுத்தும் காரணங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல் மற்றும் அவற்றை தவிர்தல் போன்றவை; மூச்சு திணறல் ஏற்படும்போது உடனடியாக எடுத்துக்கொள்ள மருந்துகளை தயாராக வைத்துக் கொள்ளுதல்; மற்றும் சுவாச பயிற்சிகள் போன்றவை கணிசமாக ஆஸ்துமாவுடன் போராட உதவும்.