விழித்திரை ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் என்றால் என்ன?
விழித்திரை ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் என்பது கண்களின் விழித்திரைக்கு ஆக்ஸிஜனை வழங்கும் இரத்தக் குழாய்கள் சேதமடையும் நிலை. விழித்திரை என்பது நம் கண்களுக்கு பின்னால் இருந்து நம்மை சுற்றியுள்ள காட்சிகளை பார்க்க உதவும் ஒரு மெல்லிய சவ்வு. இது ஒரு ஒளி உணர்வுத்திறன் கொண்ட சவ்வு. பார்வைக்குரிய தமனி சுருக்கத்தின் காரணமாக விழித்திரைக்கு ஆக்ஸிஜன் தடைபடுவதால் விழித்திரை ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் ஏற்படுகிறது.
அதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
ரெட்டினோபதியின் ஆரம்ப கட்டங்களில், எந்த அறிகுறிகளும் தோன்றாது. இருப்பினும், அவை கண் பரிசோதனையின் போது கண்டறியப்படலாம்.
ரெட்டினோபதியின் சில அறிகுறிகள் பின்வருமாறு:
- மங்கலான பார்வை.
- கண் வலி.
- புள்ளிகள் தெரிதல்.
- திடீர் பார்வை இழப்பு.
- இரட்டை பார்வை.
- மின்வெட்டொளிகள்.
- இருண்ட பகுதிகள்.
இந்த அறிகுறிகள் இந்த நோய் வளர்ச்சி அடையும் நிலைகளில் காணப்படக்கூடும். ரெட்டினோபதியின் மிகவும் கடுமையான நிலை குருட்டுத்தன்மை போன்ற தீவிர சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
ரெட்டினோபதிக்கு வேறுபட்ட காரணங்கள் இருந்தலும், அதெரோஸ்லெக்ரோசிஸ் காரணமாக விழித்திரை ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் ஏற்படுகிறது. விழித்திரைக்கு செல்லும் இரத்த தமனிகளின் உள்ளே உருவாகும் பிளேக் என்றழைக்கப்படும் கொழுப்பு படிவத்தின் காரணமாக இந்த குறைபாடு ஏற்படுகிறது. இது விழித்திரை தமனிகளில் தடிமன் மற்றும் கடினமானதாக மாற்றுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
இந்த நோய் முதன்மையாக அறிகுறிகளின் அடிப்படையில் கண்டறியப்படுகிறது. இருப்பினும், வழக்கமான கண் பரிசோதனை ஆரம்ப கட்டங்களில் ரெட்டினோபதி நோயைக் கண்டறிய உதவும். கண் விளக்கப்படங்கள் வாசிப்பு உட்பட விரிவான மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனை ஆகியவை நோயின் நிலைமையை கண்டறிய உதவுகின்றன. ஒரு விழித்திரை அகநோக்கி, விழித்திரை டிஜிட்டல் இமேஜிங் மற்றும் ஃப்ளோரெஸ்சின் ஆன்ஜியோகிராஃபி ஆகியவற்றால் பரிசோதித்து நோயை உறுதி செய்யலாம்.
விழித்திரை கோளாறுக்கான மருத்துவம் முதன்மையாக நிலைமையை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் செய்யப்படுகிறது. விழித்திரையில் சேதம் நிரந்தரமாக இருக்கக்கூடும், எனவே ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் கொண்ட நபர்கள் தொடர்நது கண் பரிசோதனைகளுக்கு சென்று, அடிப்படை சிகிச்சையை தொடர்நது பின்பற்ற வேண்டும்.
ரெட்டினோபதி ஏற்கனவே ஏற்பட்டிருந்தால், அதன் தீவிரத்தன்மை, அறிகுறிகள் மற்றும் தனிநபரின் வயது ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். தீவிர நிலைகளில் பார்வையை மீட்டெடுக்க அறுவை சிகிச்சை செய்யப்படலாம்.