சுருக்கம்
குடல்வால் என்பது பெருங்குடலின் ஒரு பகுதியான கேயிகம் உடன் ஒட்டியிருக்கும் ஒரு மெல்லிய குழாய் போன்ற உறுப்பாகும். இது வயிற்றின் கீழ்ப்புற வலது பக்கத்தில் (மார்புக்கும் இடுப்புக்கும் இடையிலுள்ள பகுதி) அமைந்திருக்கிறது. நமது உடலில் குடல்வாலின் துல்லியமான வேலை என்னவென்று இன்னும் தெரியாமலே இருக்கிறது, ஆனால் மற்ற விலங்குகளில், அது செரிமானத்திற்கு உதவுகிறது. குடல்வால் வீக்கமடைந்து, வயிற்றின் கீழ்ப்புற வலது பக்கத்தில் கடுமையான வலியை ஏற்படுத்தும் போது, குடல்வால் அழற்சி ஒரு அவசர நிலையாக இருக்கிறது. இது தவிர, குடல்வால் அழற்சி உள்ள நபர்கள் வாந்தி, காய்ச்சல் மற்றும் கீழ் முதுகு வலி போன்ற மற்ற அறிகுறிகளையும் உணர்கிறார்கள். ஒரு நோய்கண்டறிதலை நிறுவ, மருத்துவர்கள் குறிகள் மற்றும் அறிகுறிகளைப் பார்க்கிறார்கள், ஒரு மருத்துவப் பரிசோதனை நடத்துகிறார்கள், மேலும் தேவைப்பட்டால் அல்ட்ராசவுண்ட், ஆய்வக சோதனைகள் மற்றும் சிடி ஸ்கேன்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள். அப்பெண்டெக்டமி அல்லது அப்பெண்டிசெக்டமி என்பது குடல்வால் அழற்சியை நீக்குவதற்கு அடிவயிற்றில் கீறி செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சை நடைமுறையாகும். சில நிலைமைகளில், கூடவே ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சையும் பயன்படுத்தப்படலாம். குடல்வாலின் குறுகிய குழாய் மலம் அல்லது உணவினால் அடைக்கப்படும் போது, அது வெடித்து அதனுள்ளே இருப்பவற்றை சூழ்ந்திருக்கும் வயிற்றுத் தசைகளில் பரவச் செய்து நோய்த்தொற்றை ஏற்படுத்தக் கூடும். அதுபோன்ற நிலையில், சரியான நேரத்தில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது அவசியம்.