பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் என்றால் என்ன?
பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் என்பது, இதயத்தின் மிகப்பெரிய இரத்தநாளமான பெருந்தமணியில் ஏற்படும் சுருக்கம் ஆகும். அந்த சுருங்கிய பெருந்தமனி இரத்த உந்துதலை கடினமாக்கி இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இது இதயத் தசைகளை தடிமனாக்குகிறது மற்றும் அதனால் ஏற்படும் கூடுதல் சுமை இதய செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கத்தின் நிலவுதல் 65 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் 7 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது மற்றும் ஆண்களில் (80 சதவிகிதம்) மிகவும் பொதுவானதாக உள்ளது. குழந்தைகளில், இந்த நோய் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. இந்தியாவில் எந்தவொரு அடைப்பு நோயும் 2.8% உள்ளது, அதில் பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் 0.4% ஆகும்.
அதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
அறிகுறிகள் வயது மற்றும் அடைப்பின் தீவிரத்தைப்பொறுத்து வேறுபடலாம். நோய் முற்றிய நிலைக்கு வரும் வரை நோயளிகளுக்கு எந்த அறிகுறிகளும் தெரியாமல் இருக்கலாம் ஆனால் அந்த நிலையில் ரத்த ஓட்டத்தின் தடை கவலைக்குரிய ஒன்றாக மாறிவிடுகிறது.
கடுமையான பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் பின்வரும் அறிகுறிகளை கொண்டிருக்கலாம்:
- சோர்வு.
- உதடுகள் மற்றும் தோல் முழுவதும் நீல நிறத்தன்மை (சயனோசிஸ்).
- மயக்கம்.
- மூச்சு திணறல்.
- ஒழுங்கற்ற இதய துடிப்பு.
- நெஞ்சு வலி அல்லது அழுத்தம்.
குழந்தைகள் சாப்பிடுவது குறையலாம் மற்றும் எடை கூடாமல் இருக்கலாம். பிறந்த சில நாட்களில் அல்லது வாரங்களில் அவர்களிடம் சோர்வு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். லேசான அல்லது மிதமான பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் கொண்ட குழந்தைகளில் வயது கூடக்கூட நிலை மோசமடையலாம், மேலும் அவை பாக்டீரியா நோய்த்தொற்று ஏற்படுத்தலாம்.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
இது பிறப்பிலேயே தோன்றலாம் அல்லது பின்னர் உருவாகலாம்.
- பிறவியிலேயே உருவாகும் பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம்:
- பெருந்தமனி உருவாகும்போது ஏற்படும் கோளாறு ஒரு காரணமாக இருக்கலாம்.
- அவை கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் இருந்தாலும், ஆனால் வயது கூடக்கூட தமனிகள் சுருங்கலாம் அல்லது கசியலாம், இதனால் அவற்றை சரிசெய்வது அல்லது மாற்றுவது கடினமாக இருக்கலாம்.
- ஈட்டிய பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம்:
- பெரியவர்களில், ஸ்ட்ரெப்டோகாக்கால் தொற்றினால் (ரீமாடிக் காய்ச்சல்) வடுக்கள் ஏற்பட்டு, இறுதியாக பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் ஏற்படுகிறது.
- கால்சியம் அதிகரித்தல்:
- தமணியை சுற்றி ஏற்படும் கால்சியம் படிவங்கள் இந்த நோய்க்கு வழிவகுக்கும்.
- இது வெளிப்புறமாக கால்சியம் உட்கொள்ளல் மூலம் ஏற்படாது.
- மார்பக கதிர்வீச்சு கால்சியம் படிவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
அசாதாரண இரத்த ஓட்டத்திற்கான பிரதான அறிகுறிகள் இதய முணுமுணுப்பு, ஸ்டெதஸ்கோப் மூலம் சோதிக்கும் போது சொடுக்கு அல்லது அசாதாரண ஒலி, மங்கலான நாடித்துடிப்பு, அல்லது கழுத்து வழி நாடித்துடிப்பு தரத்தில் மாற்றம் போன்றவை. இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்.
உங்கள் மருத்துவரால் பின்வரும் சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்:
- மார்பக எக்ஸ்-ரே.
- எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈசிஜி).
- மன அழுத்தம் மற்றும் உடற்பயிற்சி சோதனை.
- இடது இதய வடிகுழாய்.
- இதயத்தின் காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (எம்ஆர்ஐ).
- டிரான்ஸ்யூஸோபாகல் எகோகார்டியோகிராம் (டிஇஇ).
நோயின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் முக்கியமாக இதய செயலிழப்பு அல்லது ஒழுங்கற்ற இதயத்துடிப்பின் அறிகுறிகளைக் சரிசெய்கின்றன. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டும். ஒரு பல் செயல்முறை அல்லது காலனோஸ்கோபி செய்ய வேண்டுமானால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்த மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிறகு பாக்டீரியல் எண்டோகார்டிடிஸை தடுப்பதற்காக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (ஆண்டிபயோடிக்ஸ்) குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படலாம். இந்த அறிகுறிகள் கொண்ட பெரியவர்கள் அல்லது குழந்தைகளுக்கு தமணிகளை சரிசெய்ய அல்லது மாற்ற அறுவை சிகிச்சை பொதுவாக செய்யப்படுகிறது. இயந்திர தமணி மாற்றீட்டை செய்து கொண்ட நோயாளிகள், தமனிகளில் இரத்த உறைவை தடுக்க இரத்த மெலிவூட்டிகளை உட்கொள்ள வேண்டும் . வால்வுலோபிளாஸ்டி என்றழைக்கப்படும் குறைவாக உட்செல்லும் பலூன் சிகிச்சையை அறுவை சிகிச்சைக்கு பதிலாக அல்லது அதற்கு முன்னர் செய்யலாம்.
மருந்தில்லா மருத்துவ மேலாண்மைக்கான கீழ்கண்ட முறைகள் பின்பற்றப்படுகின்றன:
- கடுமையான உடலுழைப்புத் தேவைப்படும் விளையாட்டுகள் அல்லது போட்டிகளை தவிர்த்தல்.
- புகைப்பழக்கத்தை நிறுத்துதல்.
- கொழுப்பு அளவு சோதனை.
- இரத்த உறைவு நிலையை கண்காணித்தல்.
- முறையான மருத்துவ பரிசோதனை.
வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சிகிச்சையளிப்பதன் மூலம் பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கத்தின் தீவிரத்தை குறைக்கலாம்.