கவலை - Anxiety in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

February 06, 2019

March 06, 2020

கவலை
கவலை

சுருக்கம்

கவலை என்பது உடலின் சமாளிப்பு முறைகளைத் தாக்கும் உடல் ரீதியான மாற்றங்களுடன் சேர்ந்து கொண்ட கவலை மிகுந்த உணர்வு. கவலை என்பது ஒற்றை முறையிலோ அல்லது மூன்றுவகையான கவலைகளின் கலவையாகவோ இருக்கக்கூடும். மனக்கவலை, சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் ஏற்படும் கவலை மற்றும் மற்றதொடர்புடைய நிலைமைகள் மற்றும் அதிர்ச்சி மற்றும் மனஅழுத்த கவலைகள். இது லேசான, மிதமான, கடுமையான மற்றும் பெரும் அச்சம் போன்ற நிலைகள் உட்பட பல்வேறு நிலைகளிலும் இருக்கலாம். உணர்ச்சிகள், மருத்துவ பிரச்சினைகள், சில நோய்கள், மது உட்கொள்ளல் மற்றும் பொருள் மோசடி போன்ற காரணத்தினால் கவலை ஏற்படுகிறது. மேலும், குடும்ப சூழ்நிலைகளும் கவலை மற்றும் பதற்றம் ஏற்படுவதற்கு முக்கிய பங்காகிறது. படபடப்பு (அதிகரித்த இதய துடிப்பு), அச்ச உணர்வு, அதிகமான வியர்த்தல், குமட்டல் மற்றும் மயக்கம், தூக்கமின்மை ஆகியவை கவலை மற்றும் பதற்றத்தின் அறிகுறிகளாகும். மருந்துகள் மற்றும் உளவியல் சிகிச்சையின் கலவைகளே கவலைக்கான மிக பொதுவான சிகிச்சையாகும். எச்சரிக்கையாக இருத்தல் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களை தொடர்ந்து பின்பற்றுதல் ஆகியவை கடுமையானவையாகும் இருப்பினும் அதை தொடர்ந்து பின்பற்றுவதின் மூலம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புதலுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கவலை சிக்கல்கள் ஏற்பட நடத்தை பிரச்சினைகளான கவனக்குறைபாடு மற்றும் முழுமையாக பணிகளைச் செய்ய இயலாமை, மருத்துவ நிலைகளான இதயப் பிரச்சினைகள், தூக்கமின்மை மற்றும் செரிமான பிரச்சினைகள், மனநல பிரச்சினைகளான அளவுக்கு மீறிய அச்சம், தற்கொலை போக்குகள் மற்றும் அச்ச கோளாறுகள் ஆகியவை அடங்கும்.

கவலை என்ன - What is Anxiety in Tamil

சில சமயங்களில் பயம், மன அழுத்தம் அல்லது கவலைகளை அனுபவிப்பது பொதுவானதாகும். சில சந்தர்ப்பங்களில், உணர்வானது நீடிக்கலாம். கிட்டத்தட்ட எல்லா நிகழ்வுகளிலும், ஒரு விஷயத்தினாலோ, ஒரு நிகழ்வுனாலோ அல்லது ஒரு நபரினால் கூட கவலையானது தூண்டுப்படலாம். எனினும், இந்த உணர்வானது அவர்களின் தினசரி செயல்பாட்டில் தலையிட தொடங்கும் அளவிற்கு வளர்ந்தால், அதை கவலை கோளாறுகள் என அழைக்கப்படுகிறது.

கவலை கோளாறு என்றால் என்ன?

அமெரிக்க மனோதத்துவ சங்கத்தின் (APA) படி, கவலையை, 'பதட்டம், மனச்சோர்வு மற்றும் அதிகமான இரத்த அழுத்தம் கொண்ட உடல் ரீதியான மாற்றங்கள்' போன்ற உணர்ச்சிகளின் தன்மையைக் குறிக்கிறது. ஒரு சாதாரண கவலை உணர்வாக இருந்தால் மட்டுமே அதை சமாளிக்கும் வழிமுறைகள் உதவும் மற்றும் அந்த நபர் மன அழுத்தத்தின் கீழ் இருப்பத்தை உணர உதவும் மற்றும் கவலை கோளாறுக்கான மருத்துவ கவனமும் அவசியமாகும்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Manamrit Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like stress, anxiety, and insomnia with good results.
Brahmi Tablets
₹896  ₹999  10% OFF
BUY NOW

கவலை அறிகுறிகள் என்ன - Symptoms of Anxiety in Tamil

கவலை கோளாறுகளுக்கான அறிகுறிகள் பரந்த அளவில் ஏற்படலாம். அனைத்திற்கும் மேலாக, பல்வேறு சிக்கல்கள் உள்ளன மற்றும் அவை ஒவ்வொன்றும் ஒரு வேறுபட்ட தன்மை உடையதாகும். பல்வேறு வகையான சீர்குலைவுகளில் மிகவும் பொதுவான பதற்ற கவலை கோளாறுகளுக்கான அறிகுறிகள் தூக்க தொந்தரவுகள், படபடப்பு, மூச்சுத்திணறல் , கைகள் மற்றும் கால்கள் பிணைத்தல், வியர்வை, மயக்கம் மற்றும் குமட்டல், தசைகளில் விறைப்பு ஆகியவை அடங்கும்.

கவலை சிகிச்சை - Treatment of Anxiety in Tamil

பதற்ற கவலைக்கான இரண்டு முக்கிய சிகிச்சை அணுகுமுறைகள் உள்ளன. பொதுவாக இரண்டையும் இணைந்து பயன்படுத்துவதினால் அதற்கான சிறந்த தீர்வுகளை காணலாம்.

  • ஆதாரம் சார்ந்த சிகிச்சைகள்
    நோயாளிக்ளுடன் தொடர்ந்து பேசுவதின் மூலமாக, அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முடிகிறது. ஆதலால் இந்த சிகிச்சையானது 'பேச்சு சிகிச்சையாக' அறியப்படுகிறது.
    • கலந்தாய்வுகள்
      மன அழுத்தம் போன்ற குறிப்பிட்ட பிரச்சனைகளை மக்கள் கையாளவதற்கு உதவும் ஒரு கருவியாகும்.
    • உளவியல் சிகிச்சைகள்
      போலல்லாமல், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைக் காண்பிக்க கூடியதாகும், உளவியல் என்பது ஒரு நீண்ட கால அணுகுமுறை ஆகும், ஆதலால் அதன் அறிகுறிகள் மற்றும் தொடர்ச்சியான நடத்தைகளை சரிசெய்ய முடிக்கிறது. உளவியல் சிகிச்சையின் நோக்கமானது, மக்கள் அவர்களின் உணர்ச்சிகள், உறவுகள், மன அழுத்தம் ஆகியவற்றை நிர்வகிக்க உதவுவதாகும். உளவியல் சிகிச்சையானது பல்வேறு வடிவங்களையுடைது. இவற்றில் மிகவும் சிறப்பானவைகள், அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (சிபிடி), இயல்பான நடத்தை சிகிச்சை (டிஇபிடி) மற்றும் நீண்டகால வெளிப்பாடு சிகிச்சை (பிஇ) ஆகியவை அடங்கும்.
    • குடும்பம் பற்றிய சிகிச்சைகள்
      என்பது ஒரு போர் அல்ல அதை தனியாகவே போராட முடியும். கவலையை சமாளிக்கவும் மற்றும் சிகிச்சையளிக்கவும் குடும்ப ஆதரவு முக்கியமானது. கவலை உடையவர்களுக்கு அவர்களை புரிந்து கொண்டு அதிலிருந்து விடுப்படவும், அவரிடம் தொடர்ந்து பேசி ஒருவருக்கொருவர் இடையே இருக்கும் உறவுகளை வடிவமைக்க குடும்பத்தில் உள்ள நபர்கள் ஒரு பெரிய ஆதரவு அனுகுமுறையை உருவாக்க வேண்டும். சில நேரத்தில் குடும்பமே மன அழுத்தத்திற்கு ஒரு காரணியாக இருந்தாலும் கூட, குடும்பம் பற்றிய சிகிச்சையே மிக முக்கியமான சிகிச்சை ஆகும்.
  • மருந்துகள்
    'பேச்சு' அடிப்படையிலான அணுகுமுறையைத் தவிர, மருந்துகளும் கவலையை தீர்க்கும் முக்கிய வழிமுறையாகும். மருந்துகளானது அதன் அறிகுறிகளை பொறுத்து பரிந்துரைக்கப்படுக்கிறது. பெரும்பாலான மருந்துகள் பாதுகாப்பானவை, இருப்பினும் சில சிறு பக்க விளைவுகளை கொண்டிருக்கலாம்.
    • ஆன்க்ஸியோலிடிக் மருந்துகள்
      மனக்கவலை கோளாறுக்களுக்கான மிகவும் பொதுவான மருந்து ஆகும். இது அறிவாற்றல் சம்பந்தமான சிக்கல்களுக்கு ஒரு பாதுகாப்பான மருந்தாக உதவுகிறது. இதில் ஆல்கஹால் மூலக்கூறுக்கள் இல்லை மற்றும் தொடர்ந்து இந்த மருந்துதை சார்ந்து இருக்க வேண்டியதில்லை என்பதால் இது ஒரு பாதுகாப்பான மருந்தாக கருத்தப்படுக்கிறது.எனினும், இதில் தலைவலி, குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம்.
    • பென்சோடையசெபின்கள்
      மருந்தானது மிகவும் குறுகிய கால சிகிச்சை கொண்டது மற்றும் கடுமையான மனக்கவலையை அடக்குவதற்கு பயன்படுத்தப்படுக்கிறது. இந்த மருந்தானது தூக்க தொந்தரவுகள், ஆல்கஹால் உட்கொள்ளுவதைத் திரும்பப் பெறும் அறிகுறிகள் மற்றும் வலிப்பு நோயை குணப்படுத்தலாம். இந்த மருந்துகள் பக்கவிளைவு உடையது மற்றும் நீண்ட கால பயன்பாட்டிற்கு சிறந்தது இல்லை மற்றும் இந்த மருந்ததை சார்ந்து இருக்கக்கூடியதாகவும் இருக்கலாம்.
    • பீட்டா பிளாக்கர்ஸ்
      ஓட்டம் அதிகரிக்க, இரத்த அழுத்தத்தை குறைக்க மற்றும் இதய தசைகள் சுருங்குதல் சக்தியை குறைக்க மற்றும் இதயத்தில் ஏற்படும் படபடப்பு மற்றும் நடுக்கங்களை குறைக்க இந்த மருந்தானது பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், இது அளவுக்கு மீறிய அச்சம் அல்லது அச்ச உணர்வு தாக்குதலுத்தலை குணப்படுத்துவதில்லை.
    • மன அழுத்த எதிர்ப்பிகள்
      நேரங்களில் பதற்ற கவலை கோளாறுகளினால் ஏற்படும் மன அழுத்த அறிகுறிகளில் குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு மட்டும் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுக்கிறது.
  • தியானம், உடற்பயிற்சி, குத்தூசி மருத்துவம் மற்றும் நரம்பு தூண்டுதல் போன்ற மாற்று சிகிச்சைகளான ஆலோசனைகளும் வழங்கப்படலாம்.

வாழ்க்கை மேலாண்மைகள்

கவலை மனப்பான்மையை கட்டுப்படுத்த சில குறிப்பிடத்தக்க வாழ்க்கைமுறை மாற்றங்கள் தேவைப்படலாம். நீங்கள் பின்பற்றக்கூடிய சில குறிப்புகள் இங்கே:

  • உணவு கட்டுப்பாட்டிலிருந்து காஃபியை அகற்றவும். இது மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், கவலையை மோசமாக்குவதாகவும் அறியப்படுகிறது.
  • அதிகப்படியான சர்க்கரை மற்றும் சாக்லேட்ஸ்களை தவிர்க்கவும்.
  • வெளிப்புற பயிற்சிகளை ஏராளமாக உள்ளிட்ட ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கவும். உடற்பயிற்சியானது உடலில் உள்ள இரசாயனங்களை வெளியீடு (எண்டோர்பின்) உதவுகிறது, மேலும் இது நேர்மறையான எண்ணங்களை உணரச் செய்கிறது.
  • மன அழுத்தத்தை குறைக்க, அதிக ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை முறையை உருவாக்க வேண்டும். பதற்றமானது எப்போதும் கிட்டத்தட்ட தூக்கமின்மை (தூக்கமின்மை) என்ற ஒரு வழக்கமான முறையை உருவாக்குவதால், போதுமானளவு ஓய்வு மற்றும் தூக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மருத்துவரைக் கலந்து யோசிக்காமல் எந்த மருந்தும் எடுக்காதீர்கள். வெளித்தோற்றத்தில் பாதிப்பில்லாத இயற்கை அல்லது மூலிகை மருந்துகளின் நிலையால் கூட கவலை பதற்றமானது மோசமடையலாம்.
  • சிகிச்சையின் போக்கைப் பின்தொடரவும், மருந்து எடுப்பதை இடையில் விட்டுவிடாதீர்கள்.
  • உங்களுக்கு ஆதரவான குழுக்கள் மற்றும் நண்பர்களை கண்டுபிடியுங்கள், தனியாக இருப்பதை தவிர்க்கவும். மக்கள், தங்களை விட்டு ஒருவர் போக்கும்போது கவலை மற்றும் அச்ச தாக்குதல் ஏற்பட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன. கவலையின்மைக்கு ஒரு ஆதரவான குழுவுடன் சேர்ந்து நீங்கள் பகிர்ந்து கொள்ளவதால், நீங்கள் தனியாக இல்லை என்பதை உணரலாம், நீங்கள் எவ்வாறு உங்களை சமாளிக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ளுலாம்.


மேற்கோள்கள்

  1. American Psychological Association [internet] St. NE, Washington, DC. Anxiety.
  2. National Health Service [Internet]. UK; Generalised anxiety disorder in adults
  3. National Institute of Mental Health [Internet] Bethesda, MD; Anxiety Disorders. National Institutes of Health; Bethesda, Maryland, United States
  4. Anxiety and Depression Association of America [internet] Silver Spring, Maryland, United States. Physical Activity Reduces Stress.
  5. National Alliance On Mental Illness [Internet] Virginia, United States; Find Support.
  6. Davidson JR, Wittchen HU, Llorca PM, et al. Duloxetine treatment for relapse prevention in adults with generalized anxiety disorder: a double-blind placebo-controlled trial. Eur Neuropsychopharmacol. 2008;18:673-681. PMID: 18559291
  7. National Institute of Mental Health [Internet] Bethesda, MD; Generalized Anxiety Disorder: When Worry Gets Out of Control. National Institutes of Health; Bethesda, Maryland, United States

கவலை க்கான மருந்துகள்

Medicines listed below are available for கவலை. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.