கர்ப்ப காலத்தில் ஏற்படும் அனீமியா - Anemia in Pregnancy in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 27, 2018

March 06, 2020

கர்ப்ப காலத்தில் ஏற்படும் அனீமியா
கர்ப்ப காலத்தில் ஏற்படும் அனீமியா

கர்ப்பக் காலத்தில் வரும் அனீமியா (இரத்தச்சோகை) என்றால் என்ன?

அனீமியா என்று கூறப்படும் இரத்தச்சோகை ஒரு பொதுவான மருத்துவ நிலையே, இது முக்கியமாக வளர்ந்து வரும் நாடுகளில் அதிகளவில் தோன்றிவருகிறது. கர்ப்பக்காலத்தின் போது ​​அதிகரிக்கும் இரத்த உற்பத்தியினால் மட்டுமே போதுமான ஊட்டச்சத்துக்களையும் ஆக்ஸிஜனையும் வளரும் கருவுக்கும் தாய்க்கும் வழங்கக்கூடும். அதிக அளவு இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இரும்பு சத்து (அதிகமான ஹீமோகுலோபின் உருவாக்கத்திற்கு) மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் அவசியம். ஆனால் உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்களும் மற்றும் பிறக்கூறுகளும் போதிய அளவு இல்லையெனில், கர்ப்பக் காலத்தில் அவசியப்படும் கூடுதல் தேவையை பூர்த்தி செய்யமுடியாமல் ஜெஸ்டேஷனல் அனீமியா அல்லது கர்ப்பக் காலத்தில் ஏற்படும் இரத்தச்சோகை போன்ற குறைப்பாடுகள் ஏற்படும். இந்த நிலை பொதுவாக கடுமையானது இல்லை ஆனால் இதுவே தீவிரமாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) கர்ப்பக்காலத்தில் குறைந்த அளவு ஹீமோகுலோபின் (ஹெச்பி <11ஜி / டிஎல்) இருப்பதைத்தான் ஜெஸ்டேஷனல் அனீமியா என்று கருதுகிறது. கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அனீமியாவின் காரணத்தினால் குறைமாதத்தில் பிரசவம், குழந்தை பிறக்கும் போது குறைவான எடை மற்றும் பிரசவத்தின் போது தாய்மார்கள் இறப்பு (தாயின் மரணம்) போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இதன் முக்கிய அறிகுறிகள் மற்றும் குறியீடுகள் யாவை?

அனீமியாவின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

முக்கிய காரணங்கள் என்னென்ன?

கர்ப்பக்காலத்தில் தோன்றும் அனீமியா பொதுவாக, இரும்பு சத்துக்கள் நிறைந்தில்லாத உணவு, கர்ப்பத்திற்கு முன்னர் வரும் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் அதிகளவு இரத்தப்போக்கு, புண்கள், அல்லது இரத்த தானம் செய்த பிறகு, சிகப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி விகிதத்தை விட வேகமாக குறைந்துவிடுதல் போன்ற காரணங்களினாலேயே ஏற்படுகின்றது. அனீமியாவிற்கான பொதுவான காரணிகள் இரும்பு சத்துக் குறைபாடு மற்றும் ஃபோலிக் ஆசிட் குறைபாடேயாகும். கர்ப்பம் தரித்தலே கூட அனீமியாவிற்கு ஒரு காரிணியாக இருக்கலாம் ஏனென்றால் கூடுதல் தேவையின் காரணமாக சிகப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை விட (இரத்தத்தின் ஒரு செல்லுலார் கூறு-RBCs) பிளாஸ்மா (இரத்த அணுக்களை உடைய வைக்கோல் நிறத்தை கொண்ட பிசுபிசுப்பான திரவம்) அதிகரித்த விகிதத்தில்  இருக்கும்.

இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

இங்கு கண்டறிதல் என்பது பொதுவாக பெண்களின் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் கர்ப்பக் காலத்தில், எந்த கட்டத்திலும், முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனையான (சிபிசி) ஹீமோகுலோபின் (ஹெச்பி) சரிபார்த்தல் மிக அவசியம். ஹெச்பி அளவு, பொதுவாக 10-11ஜி/ டிஎல்க்கும் குறைவாக இருந்தால் அது இரத்த சோகை எனக் கருதப்படுகிறது. இது பொதுவாக கடுமையில்லாதது. ஒரு பெண்ணிற்கு அனீமியா நோய் கண்டறியப்பட்டால், அதன் பிறகு அடுத்தடுத்த கார்பூஸ்குலர் அளவு (MCV) பரிசோதனை தேவைப்படுகிறது. மதிப்பாய்வில் சீரம் பெர்ரிட்டின் (இரும்பு சத்து) அளவு, ஹீமோகுலோபின் எலக்ட்ரோபோரேஸிஸ்சின் ஹீமோகுளோபினோபதிகளின் அளவிடல் (ஹீமோகுலோபின் மூலக்கூறின் ஒரு மரபணு கோளாறு), சீரம் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 அளவு ஆகியவைகள் அடங்கும்.

சிகிச்சையளித்தல் என்பது வழக்கமாக அடிப்படை காரணத்தை கண்டறிந்து சிகிச்சை செய்வதே ஆகும். இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைந்த சப்லிமென்ட்டுகள் சிகிச்சையாகவும் இந்த நிலையை சரிசெய்யவும் பரிந்துரைக்கப்படுகின்றன. இரும்பு சத்து-மற்றும் ஃபோலேட் சத்துக்கள் நிறைந்த உணவு ஹீமோகுலோபின் அளவை வேகமாக மேம்படுத்துவதற்கு கூடுதலாக பரிந்துரைக்கலாம். தவிர, அரிதான மற்றும் தீவிரமான நிலையில்,மருத்துவரின் அறிவுரைப்படி கூடுதலாக இரத்தம்  ஏற்றிக்கொள்ளலாம். இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் இறைச்சி, முட்டை, பச்சை காய்கறி, நட்ஸ், விதைகள், பயறுகள், பீன்ஸ் மற்றும் டோஃபு. வைட்டமின் சி கூடுதலாக அதிகளவிலான இரும்புச்சத்தை உள்ளீர்க்க வசதிசெய்யும். வைட்டமின் சி நிறைந்த உணவுகளில் ஆரஞ்சு, தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, கீவீஸ் மற்றும் குடை மிளகாய் போன்ற சிட்ரஸ் பழங்கள் இடம்பெறுகின்றன.



மேற்கோள்கள்

  1. American Pregnancy Association. Anemia During Pregnancy. [internet]
  2. J.B.Sharma, Meenakshi Shankar. Anemia in Pregnancy. JIMSA October - December 2010 Vol. 23 No. 4. [internet]
  3. OA Idowu. Anaemia in pregnancy: A survey of pregnant women in Abeokuta, Nigeria. Afr Health Sci. 2005 Dec; 5(4): 295–299. PMID: 16615838
  4. Lara A. Friel. Anemia in Pregnancy. University of Texas Health Medical School at Houston. Manual Professional Version. [internet]
  5. National Institute of Health and Family Welfare. Anaemia during pregnancy (Maternal anemia). Health and Family Welfare. [internet]