அல்சைமர்'ஸ் நோய் என்றால் என்ன?
அல்சைமர்'ஸ் நோய் என்பது ஒரு சிதைவு நோயாகும், இது பழையநிலைக்கு மாற்ற முடியாத மற்றும் மேலும் விருத்தியடையக்கூடிய நிலையைக் கொண்டது. இது மூளையின் செயல்பாட்டிற்கு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் எளிதான தினசரி நடவடிக்கைகளைக் செய்யக்கூடிய திறனையும் குறைத்துவிடுகிறது ஆகையினால் இவை அனைத்திற்கும் தொடர்புடைய ஒருங்கிணைந்த நிலையே இதை ஒரு வகை டிமென்ஷியா (நினைவக இழப்பு) என கருதப்படுவைக்கிறது. டிமென்ஷியாவின் நோய்த்தாக்கமானது இந்தியாவில் 4 மில்லியனுக்கும் மேல் உள்ளது. இது ஒரு உலக சுகாதார பிரச்சினை, ஏனெனில் குறைந்தபட்சமாக 50 மில்லியன் மக்கள் சில வகையான டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஆரம்பகால ஆன்செட் வகை ஏடியானது 30கள் மற்றும் மத்திய-60களில் வளர்கிறது மற்றும் தாமதமான ஆன்செட் வகை ஏடியானது 60களின் மத்தியில் தோன்றுகிறது. நோய் தீவிரமடையும் போது மூளையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது மற்றும் இதன் வீரியம் ஒவ்வொருவருக்கும் ஏற்ப மாறுபடும்.
இந்த நோய் மூன்று கட்டங்களைக் கடந்து செல்கிறது:
- லேசான கட்டம்
இந்த கட்டத்தில் ஒரு நபர் சாதாரணமாக செயல்படலாம், ஆனால் நினைவுகளின் இழப்புகளை எதிர்கொள்ள நேரிடும், அதாவது இடங்களையோ அல்லது பிரபலமான வார்த்தைகளையோ மறக்க நேரிடும். சரியான பெயர்களை நினைவுபடுத்தக் கூடிய திறன் இல்லாதது, சமீபத்திய சந்திப்புகளை மறப்பது, பொருட்களை வேறிடத்தில் வைப்பது அல்லது தொலைத்துவிடுவது மற்றும் திட்டமிடுதல் அல்லது ஏற்பாடுகளை செய்வதில் சிரமத்தை எதிர்கொள்வது ஆகியவைகள் பிற அறிகுறிகளாகும். - மிதமான கட்டம்
அதிக நேரம் நீடிப்பது மட்டுமின்றி சமீபத்திய நிகழ்வுகளையோ அல்லது தனிப்பட்ட வரலாற்றையோ மறப்பது, குழப்பமான மனநிலை, பொதுப்பணியிலிருந்து விலகுதல், சிலருக்கு மலக்குடல் மற்றும் சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சிரமம் மற்றும் சுற்றுச்சூழல் அல்லது நிகழ்காலத்துடன் இருக்கும் தொடர்பை இழந்துவிடுவது. - தீவிரமான கட்டம்
சுற்றுச்சூழலின் தூண்டுதல்களுக்கு மற்றும் சாதாரண உரையாடல்களுக்கு ஏற்ப பதிலளிக்க முடியாதது, முழுமையாக மற்றவர்களை சார்ந்து இருப்பது.
அல்சைமர்'ஸ் நோயின் முக்கிய காரணங்கள் என்ன?
காரணங்கள் முழுமையாக புலப்படவில்லை; அல்சைமர்'ஸினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மூளையில் அதிகளவிலான ப்ரோடீன்களின் உருவாக்கம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த அதிகப்படியான ப்ரோடீன்கள் வழக்கமாக நடைபெறும் மூளை செல்களின் செயல்பாட்டில் இடர்பாடுகளை ஏற்படுத்தி இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கிறது. கைவசமிருக்கும் தகவல்களை பொறுத்தவரை, வயது வரம்பு அதிகரிப்பதே அல்சைமர்'ஸ் நோயின் ஒரு முக்கிய அபாய காரணியாக கருதப்படுகிறது. வயது-முதிர்வு தொடர்பான மாற்றங்களினால் ஏற்படும் நரம்பு சேதம் (குறிப்பிட்ட மூளை பகுதிகள் சுருங்குதல், வீக்கம் மற்றும் தீவிர உற்பத்தியின்மை) மற்றும் அல்சைமர்'ஸின் விரைவான வளர்ச்சியை பற்றிய அதிகமான தகவல்கள் பல்வேறு படிப்புகளின் மூலம் ஆராயப்பட்டு வருகின்றன. ஆரம்பகால ஆன்செட் வகை என்பது பெரும்பாலும் மரபணு பாதிப்பினால் ஏற்படுவது மேலும் இது பொதுவாக அரிதாக ஏற்படக்கூடியது, அதேசமயம் தாமதமான ஆன்செட் வகை என்பது மரபணு, வாழ்க்கைமுறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவை மேலும் இதுவே பொதுவாக ஏற்படக்கூடிய வகையாகும்.
அல்சைமர்'ஸ் நோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
ஒரு தனிநபரின் மனநல திறனையும் மற்றும் பிற மூளை திறன்களையும் உறுதிபடுத்தி கொள்ள காலப்போக்கில் எடுக்கப்படும் தொடர்ச்சியான சோதனைகளின் மூலம் அல்சைமர்'ஸ் நோய் கண்டறியப்படுகிறது. அவற்றில் பின்வருபவையும் அடங்கலாம்:
- பழக்கவழக்கம் மற்றும் ஆளுமையில் ஏற்படும் மாற்றங்களை கொண்ட மருத்துவ வரலாறு.
- சிறுநீர், ரத்தம் மற்றும் முதுகெலும்பு திரவ சோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமும் கண்டறியலாம்.
- மூளை ஸ்கேன்கள் (சிடி ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ).
இன்றைய தேதி வரை அல்சைமர்'ஸ்க்கான முழுமையான சிகிச்சை ஏதுமில்லை ஆனால் டிமென்ஷியாவின் அறிகுறிகளை சில மருந்துகளை கொண்டு கட்டுப்படுத்த முடியும். விஞ்ஞானிகள் இதன் மூலகாரணத்தை கண்டறிந்து அல்சைமர்'ஸை தாமதப்படுத்தவதற்கான வழியையோ அல்லது இதை முற்றிலும் தடுக்கவோ பலவிதமான ஆய்வுகளை நடத்திவருகின்றனர்.
ஆற்றல்மிகுந்த சிகிச்சைகளில் பின்வருபவையும் அடங்கலாம்:
- அல்சைமர்'ஸுடன் தொடர்புடைய நோய்களுக்கான சிகிச்சை அதாவது இதயநோய் மற்றும் டைப் 2 நீரிழிவு போன்றவைகள்.
- மேம்படுத்தப்பட்ட சிந்தனை செயல்பாட்டிற்கான அறிவாற்றல் பயிற்சி மற்றும் பதட்டம், கிளர்ச்சி, வன்முறை மற்றும் மனச்சோர்வு போன்றவைகளை கையாளுவதற்கான பயிற்சி.
- மெடிடேரனியன் உணவுமுறை அல்லது உயர் ரத்த அழுத்தத்தை (டிஏஎஸ்ஹெச்) குறைக்கும் உணவு அணுகுமுறைகள் அதாவது கொழுப்புக் குறைவான உணவுகள்.
- உடற்பயிற்சி.
- அரோமாதெரபி.
- இசை அல்லது நடனத்தில் நாட்டம் செலுத்துதல்.
- விலங்குகள்-நல உதவி சிகிச்சை.
- மன ஆறுதலளிக்கும் மசாஜ்.
- பல-உணர்ச்சி தூண்டுதல்.
துறை சார்ந்த வல்லுநர்களே சிகிச்சையை நடத்தி கண்காணிப்பதன் மூலம் அதிகப்படியான பலனை அடையமுடியும்.