ஆல்டிடியூட் சிக்னெஸ் என்றால் என்ன?
மிக உயரமான இடங்களை அடையும் போது அல்லது உயரமான இடத்தை அடைய வேகமாக ஏறும் போது ஆல்டிடியூட் சிக்னெஸ் அல்லது மலைச்சூழல் நலிவு நோய் ஏற்படுகின்றது. உயரங்களில் அழுத்தம் குறைவதால், அந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க உடலுக்கு நேரம் தேவைப்படுகிறது. 8000 அடி உயரத்திற்கு மேல்இருக்கும்போது பொதுவாக ஆல்டிடியூட் சிக்னெஸ் ஏற்படுகிறது.
அதன் பல்வேறு வகைகள் பின்வருமாறு:
- அக்கியூட் ஆல்டிடியூட் சிக்னெஸ்/ கடுமையான மலைச்சூழல் நலிவு நோய், இது மிகவும் பொதுவான வகையாகும்.
- உயரமான இடத்தை அடைய வேகமாக மேலேறும் போது ஏற்படும் நுரையீரல் வீக்கம், இது அபாயகரமானதாக இருக்கலாம்.
- உயரமான இடத்தை அடைய வேகமாக மேலேறும் போது ஏற்படும் பெருமூளை வீக்கம், இது மற்ற வகைகளைக் காட்டிலும் மரணத்தை விளைவிக்கக்கூடிய கொடிய வகையாகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
உயரங்களில் ஏற்படும் உடல்நலமின்மையின் வகையை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். சில நபர்கள் பொதுவான அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம், அதே நேரத்தில் உயரமான இடத்தை அடைய வேகமாக மேலேறும் போது நுரையீரலில் வீக்கம் ஏற்படுபவர்களுக்கு நுரையீரலில் திரவம் சேரலாம். உயரமான இடத்தை அடைய வேகமாக மேலேறும் போது மூளையில் வீக்கம் ஏற்படுபவர்களுக்கு மூளையில் திரவம் சேகரிக்க தொடங்குகிறது.
சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- தலைவலி மற்றும் மயக்கம்.
- குமட்டல் மற்றும்/அல்லது வாந்தி.
- சோர்வு, மூச்சுத்திணறல் மற்றும் பசியின்மை.
- தூங்குவதில் ஏற்படும் தொந்தரவுகள்.
- நீல நிற நகங்கள் மற்றும் உதடுகள்.
- வெளிரிய தோல்.
பொதுவான அறிகுறிகள், பொதுவாக சில மணி நேரத்திற்குள் வெளிப்படும், ஆனால் உடல் அந்த மாற்றத்திற்கு ஈடுகொடுக்க ஆரம்பித்தவுடன் அறிகுறிகள் குறைந்துவிடும். மிகவும் கடுமையான நிலைமையில் ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- கடுமையான தலைவலி.
- நெஞ்சடைப்பு.
- நடையில் பிரச்சனை.
- ஒழுங்கற்ற ஒருங்கிணைப்பு.
- தன்னிலையிழத்தல்.
- இளஞ்சிவப்பு நிற சளியுடன் கூடிய கடுமையான இருமல்.
- கோமா (உணர்விழந்த முழு மயக்க நிலை).
உயரங்களில் ஏற்படும் உடல்நலமின்மைக்கான முக்கிய காரணங்கள் யாவை?
உயரங்களில் ஏற்படும் உடல்நலமின்மைக்கான மிக முக்கியமான காரணம், உடலால் ஏற்றுக்கொள்ள முடியாத காலநிலை மாற்றமாகும். எனினும், பிற காரணிகளும் பங்களிக்கின்றன. அவை பின்வருமாறு:
- மிக விரைவாக உயரம் ஏறுதல்.
- உயரங்களில் ஏற்படும் உடல்நலமின்மை சார்ந்த வரலாறு.
- புதுச்சூழற்கிணங்கல் இல்லாமை.
- மது அல்லது போதைப்பொருட்கள் உட்கொள்ளுதல்.
- இதயம், நுரையீரல் அல்லது பிற அமைப்பு ரீதியான கோளாறுகள் சார்ந்த வரலாறு.
இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
குறைந்த மருத்துவ வசதிகள் மற்றும் முதலுதவி இருப்பதால், நோயறிதல் கடினமானதாக உள்ளது. இருப்பினும், தொடர்ந்து நீடித்திருக்கக்கூடிய அறிகுறிகளோ அல்லது அவற்றின் கலவையையோ ஏற்படுமாயின், அது ஆல்டிடியூட் சிக்னெஸ்ஸை குறிக்கலாம். இது கவனிக்கப்பட வேண்டிய நோயாகும். மருத்துவர் நுரையீரலில் ஏற்படும் ஒலியைக் கேட்டு, அதில் ஏற்படும் திரவ சேகரிப்பைக் கண்டறியலாம்.
இதனை தொடர்ந்து, மருத்துவ தலையீட்டினால், அதன் நிலைமையை கண்டறிய பின்வரும் சோதனைகளில் ஒன்றை மேற்கொள்ளலாம்:
- எலக்ட்ரோகார்டியோகிராஃபி (ஈசிஜி).
- மார்பக எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை.
- இரத்தப் பரிசோதனைகள்.
உயரங்களில் ஏற்படும் உடல்நலமின்மை கடுமையாகும்போது சிகிச்சை அளிப்பது கடினமாகக்கூடும். இருப்பினும், அனைத்து நிலைமைகளுக்கும் கவனிப்பு அவசியம். அதற்கான கவனிப்பு முறைகள் பின்வருமாறு:
- குறைந்த உயரத்திற்கு இறங்குதல்/அல்லது செயற்கை ஆக்ஸிஜனை வழங்குதல்.
- உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்தூட்டம்.
- சுவாசத்தை சீராக்க மற்றும் மூக்கு அடைப்பு -ஐ சரி செய்யக்கூடிய மூச்சிழுப்பு மருந்து (இன்ஹேலர்).
- நுரையீரலுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கான மருந்தூட்டம்.
- ஆரம்ப கட்டங்களில் கொடுக்கப்படும் மலைச்சூழல் நலிவு நோய்க்கான மருந்துகள்.