அலர்ஜி ரினிடிஸ் (ஹே காய்ச்சல்) என்றால் என்ன?
வெளிப்புறம் அல்லது உட்புறங்களில் காணப்படும் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருட்களின் காரணமாக ஏற்படும் சளி போன்ற அறிகுறிகளை கொண்டது அலர்ஜி ரினிடிஸ் அல்லது இது பொதுவாக ஹே காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வாமை பொருட்களின் பட்டியல் நீளமாக இருப்பினும், அனைவரும் இவை அனைத்திற்கும் எதிர் செயல் ஆற்றுவதில்லை. உடல் சார்ந்த அறிகுறிகளைத் தவிர, பெரும்பாலான மக்கள் ஒரு பொதுவான உடல்நலமின்மை உணர்வு மற்றும் வேலை, வீடு அல்லது பள்ளி ஆகியவற்றில் செய்யவேண்டிய வழக்கமான பணிகளை நிறைவேற்ற இயலாத தன்மை போன்றவற்றால் அவதிப்படுகின்றனர்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஒவ்வாமை காரணமாக உங்களுக்கு பல்வேறு அறிகுறிகள் உண்டாகலாம். பலர் தாக்குதலுடன் கூடிய ஒன்று அல்லது இரண்டு அறிகுறிகளை அனுபவிப்பர். மிகவும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- சோர்வு.
- இருமல்.
- தொடர்ச்சியான தும்மல்.
- கண்களில் அரிப்பு மற்றும் கண்கள் சிவத்தல், அடிக்கடி கண்களில் நீர் வழிதல்.
- நாசி குழியில் ஏற்படும் அடைப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல்.
- கண்களுக்கு கீழே கருவளையம் மற்றும் வீக்கம்.
- தொண்டை மற்றும்/அல்லது மூக்கில் வறட்சி மற்றும் அரிப்பு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
சிலரிடத்தில், குறிப்பாக முதல் அறிகுறியை அனுபவிக்கும்போது, ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருளை எதிர்த்து உடல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, பிறபொருளெதிரிகளை வெளியிடுகின்றது. ஒவ்வொரு முறையும் ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை எதிர்கொள்ளும் போது, உடலில் தானாகவே இரசாயனங்கள் வெளியிடப்படுகின்றன, அவை பின்னர் ஹே காய்ச்சலின் அறிகுறிகளை தூண்டும்.
பொதுவான ஒவ்வாமை வகைகள் பின்வருமாறு:
- மரங்கள், புல் மற்றும் ராக்வீட் ஆகியவற்றில் உள்ள மகரந்தம்.
- செல்லப்பிராணிகளின் தோள், உமிழ்நீர் மற்றும் சருமம்.
- தூசி மற்றும் பூச்சிகள்.
- பூஞ்சை மற்றும் பூசணத்தில் உள்ள சிதல்/வித்து.
இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
ஹே காய்ச்சலை கண்டறிவது சற்று எளிமையானது மற்றும் நேரடியானது. இந்த நிலையை கண்டறிய இரண்டு முக்கிய முறைகள் உள்ளன. அவை பின்வருமாறு:
- உடலில் பாதிப்பு ஏற்படுத்தும் ஒவ்வாமை விளைவிக்கும் பொருட்களை அடையாளம் காண மற்றும் இரத்தத்தில் உள்ள ஒவ்வாமையை எதிர்த்து போராடும் பிறபொருளெதிரிகளின் அளவை மதிப்பீடு செய்ய மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனை.
- சாத்தியமான ஒவ்வாப்பொருளை கண்டறிய தோலில் துளையிடும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சிறிய அளவிலான ஒவ்வாப்பொருள் உடலில் உட்செலுத்தப்படும். ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு ஒவ்வாமை எதிர்வினை இருந்தால், துளையிட்ட இடத்தில் ஒரு வீக்கம் ஏற்படும்.
ஒவ்வாப்பொருளில் இருந்து விலகி இருப்பதே ஹே காய்ச்சலில் இருந்து பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகும். சில சமயங்களில் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். தீவிரமான நிலையில், தொடர்சியாக வலுவான மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். அவற்றில் சில பின்வருமாறு:
- அரிப்பு, வீக்கம் மற்றும் மூக்கு ஒழுகுதலை கட்டுப்படுத்தக்கூடிய நாசி இயக்க ஊக்கி மருந்துகள்.
- தும்மல், மூக்கு ஒழுகுதல் மற்றும் அரிப்பை கட்டுப்படுத்தக்கூடிய ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்து. இவை மாத்திரைகள் அல்லது தெளிப்பான்களாக வழங்கப்படலாம். இது ஒவ்வாமை எதிர்விளைவால் வெளிப்படும் ரசாயன திசுநீர் தேக்கியை/ஒவ்வாமை எதிர்ப்பொருளை தடுத்து செயல்படுகின்றன.
- மூக்கடைப்பு நீக்கிகள் பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது மற்றும் இது மூக்கு அடைப்புக்கு நிவாரணம் வழங்கும். ஆனால் அவை உயர் இரத்த அழுத்தம், தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
- லுயூகோடிரையீன் மாடிஃபையர் என்பது அதிகப்படியான சளி மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளை விளைவிக்கும் லுயூகோடிரையீன் உற்பத்தியை தடுக்கும் மருந்தாகும்.
- வாய்வழியாக கார்டிகோஸ்டீராய்டு மருந்துகளை செலுத்துதல் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகின்றன.
- நாசி ஈப்ராட்ரோபியம் மூலம் சளி உற்பத்தி மற்றும் மூக்கு ஒழுகுதலை குறைக்கலாம்.
அலர்ஜி ஷாட்ஸ், நாக்குக்கு கீழ் வைக்கப்படும் ஒவ்வாமை எதிர்ப்பு மாத்திரைகள், நீராவி உள்ளிழுத்தல் மற்றும் சைனஸ் பகுதியை தூய்மைப்படுத்துதல் ஆகியவை பிற மாற்று சிகிச்சைகளில் உள்ளடங்கியது.