வயது தொடர்பான நினைவக இழப்பு - Age-related Memory Loss in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 20, 2018

March 06, 2020

வயது தொடர்பான நினைவக இழப்பு
வயது தொடர்பான நினைவக இழப்பு

வயது தொடர்பான நினைவக இழப்பு என்றால் என்ன?

வயதானவர்களிடம், அவர்களின் இயக்கம், செயல், எதிர்வினை மற்றும் தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றில் ஒரு மந்த நிலையான போக்கு காணப்படும். அவர்களிடம் ஏதோ ஒன்றை பற்றி கேட்கும் சமயத்தில், அதனை நினைவுகூர்ந்து பதிலளிக்க இயலாமை அவர்களிடத்தில் அடிக்கடி காணப்படுகின்றது. சில நேரங்களில் காலம்தாழ்த்தி அந்த தகவல்கள் நினைவுக்கு வரும் அல்லது நினைவுக்கு வராமலே கூட போகலாம். காலப்போக்கில், நமக்கு வயதாகும்போது உடலில் சில உடற்கூறு மாற்றங்கள் ஏற்படும், அவற்றில் ஒன்றுதான் மனம் சார்ந்த செயல்பாடுகள் குறைவடைதல். பெரும்பாலான சமயங்களில், இந்த நினைவக மந்த நிலையை, மக்கள் வயது தொடர்பான நினைவக இழப்பு என்று தவறாக புரிந்துகொள்கின்றனர். வயதானவர்களிடத்தில் அறிவாற்றல் செயல்முறைகள் மந்தமாகுதல், மிதமான மனநல குறைபாடு அல்லது டிமென்ஷியா (தினசரி நடவடிக்கைகளை பாதிக்கக்கூடிய குறைந்த நினைவுத்திறன் மற்றும் சிந்தனை திறன்) போன்ற நினைவக இழப்பு தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஒரு தனிநபர் மற்றும் அவருக்கு ஏற்பட்டுள்ள நோயின் தீவிரம் பொறுத்து, பலதரப்பட்ட அறிகுறிகள் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு.

  • தகவல்களை தாமதமாக அல்லது பகுதியளவு மட்டும் நினைவுகூர்தல்.
  • பேசும் போது பொதுவாக வழக்கத்தில் உள்ள சொற்களை மறப்பது.
  • பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்களில் குழப்பம் அடைதல்.
  • ஒரே தலைப்பை பற்றி மீண்டும் மீண்டும் விவாதிப்பது அல்லது ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பது.
  • பொருட்களை இடம்மாற்றி வைப்பது.
  • மக்களை மாற்றி அடையாளம் கண்டுகொள்வது.
  • தினசரி அலுவல்களை முடிக்க அல்லது தெரிந்த வழிமுறைகளை பின்பற்றுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது.
  • பழக்கமான சூழலில் கூட பாதையை மறந்துவிடுவது.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பொதுவாக பெருமூளையின் செயல்பாடுகள் மந்தமடைவதால் பெரும்பாலும் வயது தொடர்பான நினைவக இழப்பு வருகிறது. அவை பின்வருவனவற்றை உள்ளடக்குன்கிறன:

  • ஹிப்போகாம்பஸ் (மூளைப் பின்மேடு) இல் (ஒருவரின் உணர்வுகள் மற்றும் நீண்ட கால நினைவுகளை ஒழுங்குபடுத்தும் மூளையில் அமைந்துள்ள ஒரு சிறிய உறுப்பு) ஏற்படும் சீர்குலைவு.
  • ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள்.
  • மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் குறைபாடு.

இருப்பினும், மற்ற காரணங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும், அவை:

  • மதுப்பழக்கம்.
  • மூளையில் ஏற்படும் நோய்கள்.
  • வைட்டமின் பி12 குறைபாடு.
  • தைராய்டு கோளாறுகள்.
  • மன உளைச்சல் மற்றும் மன சோர்வு போன்ற உணர்வு ரீதியான தொந்தரவுகள்.
  • தலையில் ஏற்படும் காயங்கள்.
  • தன்னிலையிழத்தல் மற்றும் குழப்பம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய தூக்க மாத்திரைகள், தசை தளர்த்திகள், மனஅழுத்தம் தடுப்பு மாத்திரைகள் (உளச்சோர்வு போக்கிகள்), இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் போன்ற சில மருந்தூட்டங்கள்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

இந்த சிக்கலை கண்டறிய ஒரு மருத்துவ ஆலோசனை முக்கியமானதாகும். இந்த மருத்துவ ஆலோசனைகள், பெரும்பாலும் மருத்துவம் சார்ந்த வரலாறு, தூக்க முறைகள், உணர்ச்சி நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை போன்றவற்றை பற்றிய தொடர் கேள்விகள் அடங்கியதாக இருக்கும். மறந்துவிடும் நிகழ்வுகள், ஞாபக மறதி தொடங்கிய காலம் மற்றும் மறதியின் இயல்புகள் போன்றவற்றின் விவரங்கள் கேட்டறியப்படும். சில தருணங்களில் நரம்பியல் உளவியலாளரின் கருத்துக்களும் கேட்கப்படும்.

பெரும்பாலான நோயாளிகளை பொறுத்தவரை, இந்த நிலையை மாற்றவோ அல்லது சிகிச்சை அளிக்கவோ முடியாது. இந்த நிலைமை மற்றும் பாதிக்கபட்ட தனிநபரை சமாளித்து, சிறந்த பராமரிப்பு முறையை கண்டறிவதில்தான் இதற்கான முக்கிய சிகிச்சை முறை அடங்கியுள்ளது.

பெரும்பாலான முதியவர்கள் தங்கள் மன குறைபாட்டை உணருகின்றனர், குறிப்பாக வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்தவர்களுக்கு இது மிகுந்த மன உளைச்சல் மற்றும் சங்கடங்களை உருவாக்கும். தன்னிச்சையாக செயல்படமுடியாத நிலையும், மற்றவரை சார்ந்து இருப்பதும் அவர்களுக்கு கடினமாக இருக்கலாம். எனவே, இவர்களை போன்றவர்களுக்கு பின்வருபவை தேவைப்படுகின்றன:

  • குடும்பத்தினரின் ஆதரவும், கவனிப்பும்.
  • திட்டமிடப்பட்ட நீண்டகால பராமரிப்பு.
  • ஏதேனும் உடல் நிலை குறைபாடு மற்றும் பிற சிக்கல்களுக்கான சரியான சிகிச்சை.
  • சமுதாயத்துடன் ஒன்றி இருக்கும்படியான ஒரு வாய்ப்பு.
  • சமச்சீரான உணவு மற்றும் போதுமான உறக்கம்.
  • நோய் அறிகுறிகள் மேலும் தீவிரமாகாமல் தடுப்பதற்கான எளிய மூளை செயல்பாட்டினை தூண்டக்கூடிய செயல்கள், அவை பின்வருமாறு: 
    • புதிர்கள் மற்றும் குறுக்கெழுத்து பயிற்சிகள்.
    • செய்தித்தாள்கள்/பத்திரிகைகள் வாசித்தல்.
    • மூளைக்கு சவாலான செயல்களில் ஈடுபடுதல்.



மேற்கோள்கள்

  1. National institute of aging. [internet]: US Department of Health and Human Services; Do Memory Problems Always Mean Alzheimer's Disease?
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Memory loss
  3. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Alzheimer's Disease
  4. Clinical Trials. Treatment for Early Memory Loss. U.S. National Library of Medicine. Treatment for Early Memory Loss.
  5. Clinical Trials. Treatment for Early Memory Loss. U.S. National Library of Medicine. Treatment for Early Memory Loss.

வயது தொடர்பான நினைவக இழப்பு க்கான மருந்துகள்

Medicines listed below are available for வயது தொடர்பான நினைவக இழப்பு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹599.0

₹135.0

Showing 1 to 0 of 2 entries