கடுமையான சிறுநீரக செயலிழப்பு என்றால் என்ன?
சிறுநீரகங்களின் முதன்மை செயல்பாடு இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கழிவு பொருட்களை நீக்கி, அவற்றை சிறுநீர் வழியாக உடலில் இருந்து வெளியேற்றுவது தான். சிறுநீரகம் தனது வேலையை சரியாக செய்யாவிட்டாலோ அல்லது முற்றிலுமாக நிறுத்திவிட்டாலோ, மோசமான சிறுநீர் உற்பத்திக்கு வழிவகுக்கும், இந்த நிலை தான் கடுமையான சிறுநீரக செயலிழப்பு எனப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
கடுமையான சிறுநீரக செயலிழப்பு நோயின் பொதுவான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- குறைந்த சிறுநீர் வெளியேற்றம் மற்றும் உடலில் திரவ நிலையை தக்க வைத்தல் (திரவங்கள் உடலுக்குள்ளேயே தங்கி விடுதல்) கைகள், கால்கள் மற்றும் முகத்திலும் வீக்கமாக காணப்படுகிறது.
- சுவாசகோளாறுகள் மூச்சடைப்பு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை பொதுவான அறிகுறிகள்.
- பசியின்மை, மன குழப்பம் மற்றும் உடல் பலவீனம் ஆகியவை ஒரு நபரிடத்தில் தோன்றக்கூடிய மற்ற அறிகுறிகள்.
- உயர் இரத்த அழுத்தம், கைகளில் மதமதப்பு (உணர்ச்சியின்மை) மற்றும் காயங்கள் ஆறுவதில் தாமதம் ஆகியவை பிற அறிகுறிகள் ஆகும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறையும்போது, அது சிறுநீரகத்தை சேதாரப்படுத்தி கடுமையான சிறுநீரக செயலிழப்பு ஏற்படுத்துகிறது.
- சிறுநீர்க்குழாய்களில் ஏற்படும் தடுப்பினால் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்பைகளுக்கு செல்லும் சிறுநீர் தடைபடுகிறது. காலப்போக்கில், ஒரு சிறுநீரகத்திலோ அல்லது இரண்டிலுமோ சிறுநீர் தேங்கி அவற்றை வீக்கம் அடைய செய்து விடுகிறது (ஹைஃட்ரொநெபிரோசிஸ்). இதன் காரணமாகவும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்.
- ரசாயனங்கள் அல்லது கனரக உலோகங்கள் அல்லது கிளாமருல நீரகக் குற்றழல் (குளோமெருலோனெர்பிரிஸ்) போன்ற ஆட்டோஇம்யூன் (தன்னெதிர்ப்பு நிலைமைகள்), அதாவது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பே சிறுநீரக திசுக்களை தாக்குவது போன்றவற்றால் சிறுநீரகத்தில் ஏற்படும் காயங்களினால் சிறுநீரகம் செயலிழந்து போகிறது.
- கடுமையான சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்க கூடிய சில காரணிகள் பின்வருமாறு:
- கடுமையான நீரிழப்பு.
- குறைந்த இரத்த அழுத்தம்.
- ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகள்.
- நீரிழிவு நோய்.
இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
கடுமையான சிறுநீரக செயலிழப்பு பின்வரும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்படுகிறது:
- உடலில் பல்வேறு பாகங்களில் ஏற்படும் வீக்கங்கள் மற்றும் பிற அறிகுறிகளை மருத்துவர் பரிசோதிப்பார்.
- யூரியா, பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகியவற்றின் அளவை தெரிந்துகொள்வதற்கு இரத்தம் மற்றும் சிறுநீர் சோதனைகள் செய்யப்படுகின்றன. கிரியாட்டினைனின் அளவையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
- உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டால், உங்கள் மருத்துவர் குளோமருலர் வடிகட்டுதல் விகிதம் (ஜி.எஃப்.ஆர்) பரிசோனை செய்யும்படி பரிந்துரைப்பார். இது சிறுநீரகத்திலிருந்து இரத்தம் வடிகட்ட கூடிய விகிதம், இந்த விகிதத்தில் தான் உங்கள் சிறுநீரகத்திலிருந்து இரத்தம் வடிகட்டப்படுகிறது. மேலும் இது சிறுநீரக செயலிழப்பை வியக்கத்தகும் வகையில் குறைக்கிறது. மேலும், இந்த விகிதமானது சிறுநீரக செயலிழப்பின் போது, வியக்கத்தகும் வகையில் குறைகிறது.
- சிறுநீரக அல்ட்ராசவுண்ட், எம்.ஆர்.ஐ, சி.டி ஸ்கேன் மற்றும் அடிவயிற்று எக்ஸ்ரே ஆகியவை மற்ற சோதனை முறைகள் ஆகும்.
கடுமையான சிறுநீரக செயலிழப்பு நோயிற்கான சிகிச்சை முறைகள்:
- இந்த நோய் தாக்கத்திற்கான மறைமுக அடிப்படை காரணிகளை கண்டறிந்து சரிசெய்வது மற்றும் ஒட்டுமொத்த சிறுநீரக ஆரோக்கியத்தை முழுவதுமாக மேம்படுத்துவது ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கும் போது கவனம் செலுத்தப்படுகிறது.
- முதன்மையாக, திரவ, உப்பு மற்றும் புரத உணவுகளை குறைவாக உட்கொள்ளும்படி மருத்துவர் பரிந்துரைப்பார்.
- டையூரிட்டிக்ஸ் என்பது உடலில் உள்ள திரவ நிலையை சீராக்க கூடிய மருந்துகள் ஆகும். கால்சியம் சப்ளிமென்ட் மாத்திரைகள் உடலின் இரத்த பொட்டாசியம் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. கால்சியம் பிற்சேர்வு இரத்தத்தில் உள்ள பொட்டாசியம் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.
- டயாலிசிஸ் கூழ்மப்பிரிப்பு அல்லது சிறுநீர் பிரித்தல் என்பது இரத்தத்தை இயந்திரம் மூலம் வடிகட்டும் ஒரு வழிமுறை. நோயின் தீவிரத்தை பொறுத்து, ஒரு வாரத்தில் பல முறை டயாலிசிஸ் முறை தேவைப்படலாம்.