அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு என்றால் என்ன?
அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு என்பது கருப்பையிலிருந்து அடிக்கடி, நீட்டித்தகாலத்திற்கு, வழக்கத்தைவிட அதிகமான அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதைக் குறிக்கிறது.
பெண்கள் எல்லோருக்கும் சரியான தேதியில் மாதவிடாய் வருவது இல்லை என்பதால், 2 மாதவிடாய்க்கு இடையே, 21 முதல் 35 நாட்களுக்குள்ளான ஒரு வரம்பு அனுமதிக்கப்படுகிறது. இது அதிகமானால், அல்லது விரைவில் ஏற்பட்டால், இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்களை அறிய ஒரு பரிசோதனை தேவைப்படலாம்.
இதன் முக்கிய அறிகுறிகள் யாவை?
பெண்களின் மாதவிடாய் தேதி குறித்து, மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாறுதல்கள் இருப்பினும், அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு குறித்து சில வரையறுக்கப்பட்ட அறிகுறிகள் உள்ளன:
- 3 வாரங்களுக்கு ஒரு முறை அடிக்கடி வரக்கூடிய அல்லது 5 வாரங்களுக்கு மேலாக வரும் மாதவிடாய்.
- ஒரு வாரத்திற்கும் மேலாக அல்லது 2 நாட்களுக்கு குறைவாக நீடிக்கும் மாதவிடாய்.
- ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடிக்கடி நாப்கின்களை/டெம்பான்களை மாற்றுதல்,அல்லது பீரியட் ஆகுதல்.
- உடலுறவு அல்லது மாதவிடாய்களுக்கு இடையில் இரத்தப்போக்கு அல்லது இரத்தச் சொட்டுக்கறை ஏற்படுதல்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
இந்த நிலைக்கான மிகவும் பொதுவான காரணம், ஹார்மோன்களில் ஏற்படும் சமநிலை இன்மையே ஆகும். பிற காரணங்கள் பின்வருமாறு:
- பிறப்பு கட்டுப்பாடு மருந்தூட்டம்.
- மன அழுத்தம் அல்லது பதட்டம்.
- அதிக எடை அதிகரிப்பு அல்லது இழப்பு.
- ஐ.யூ.டி (கருப்பையகமான கருவி).
- கருப்பையில் உள்ள நார்த்திசுக்கட்டிகள்.
- இரத்தத்தை மெலிதாக்கும் மருந்தூட்டம்.
- கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அல்லது கருப்பை புற்றுநோய்.
- தைராய்டு அல்லது சிறுநீரகத்துடன் தொடர்புடைய நோய்கள்.
- கருப்பை அல்லது கருப்பை வாய்யில் உள்ள தொற்றுகள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உடனடி நோயறிதல் சாத்தியமானதாக இருக்காது, மருத்துவர் உடலியல் பரிசோதனை செய்து, மேலும் அடுத்த சுழற்சி மற்றும் மாதவிடாயை, கவனித்து தீர்மானிக்கலாம். கருத்தரிப்பு சோதனை மற்றும் மருத்துவ வரலாறு முதலியன, முதன்மையான நோயறிதலுக்கான மற்ற படிகள் ஆகும். இதனை அடுத்து, ஹார்மோன்கள் சமநிலையின்மை, இரும்பு சத்து குறைபாடு அல்லது இரத்தம் சம்பந்தமான குறைபாடுகளுக்கான இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். மருத்துவர் கருப்பையை பரிசோதிப்பதற்காக ஒரு அல்ட்ராசவுண்ட் அல்லது கர்ப்பப்பை வாயை பரிசோதிக்க ஒரு ஹிஸ்டிரோஸ்கோபியை மேற்கொள்வார். புற்றுநோய் அல்லது பிற கோளாறுகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், ஒரு உடல் திசு ஆய்வு (Biopsy) நடத்தலாம்.
நோய் கண்டறிதல் எதை குறிக்கிறது என்பதைப் பொறுத்து, சிக்கலை எதிர்கொள்ளவும்,விரைவான நிவாரணம் அளிக்கவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கான சில சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- பிறப்பு கட்டுப்பாடு மருந்துகளான கோனாடோட்ரோபின்-வெளியீடு ஹார்மோன் அகோனிஸ்டுகள் அடங்கிய ஹார்மோனல் மருந்தூட்டத்தின் மூலம் மாதவிடாயை ஒழுங்குபடுத்தி, இரத்த போக்கை குறைக்கலாம் (மேலும் படிக்க:ஒழுங்கற்ற மாதவிடாய்கான சிகிச்சைமுறை).
- இரத்த ஓட்டத்தை குறைக்க அழற்சி எதிர்ப்பு மருந்துகள்.
- இரத்தம் உறைதல் மற்றும் இரத்தம் கசிதல் போன்றவையை குறைக்க டிரான்செக்சமிக் அமிலம்.
- எண்டோமெட்ரியல் அபலேஷன் மூலம் கருப்பையின் உட்புற சுவரை நீக்கினாலும் கூட, அதன் பிறகு அது பீரியட்டை நிறுத்திவிடுவது கண்கூடாக தெரியும்.
- தசைக்கட்டி நீக்கம் - இது நார்த்திசுக்கட்டிகளை நீக்குகிறது அல்லது அந்த இடத்திற்கான இரத்த ஓட்டத்தை நிறுத்துகிறது.
- பெரிய நார்த்திசுக்கட்டிகள் அல்லது கருப்பை புற்றுநோய் இருந்தால் கருப்பை நீக்கம் செய்யலாம்.