லெப்டோஸ்பிரோசிஸ் என்றால் என்ன?
லெப்டோஸ்பிரோசிஸ் என்பது லெப்டோஸ்பைரா என்ற சுருள் வடிவிலான பாக்டீரியத்தால் (சுருளுயிரி பாக்டீரியம்) ஏற்படும் நோய்த்தொற்றாகும். இந்த நோய்த்தொற்றானது பிற நோய்தொற்றுகளை ஒத்த பரந்த அளவிலான அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. எனவே, உறுதியான நோய் கண்டறிதலுக்கு சிறுநீர் அல்லது இரத்த மாதிரிகள் சோதனை தேவைப்படுகிறது. சிறுநீரக சிதைவு, சுவாச இடையூறு, கல்லீரல் செயலிழப்பு மற்றும் மூளையுறை அழற்சி (மூளையைச் சுற்றியிருக்கும் மூளையுறையான பாதுகாப்புச் சவ்வுகளில் ஏற்படும் தீவிரமான வீக்கத்தைக் குறிக்கிறது) ஆகியவை இதனோடு தொடர்புடைய சிக்கல்கள் ஆகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
லெப்டோஸ்பிரோசிஸ் பின்வரும் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது:
- காய்ச்சல்.
- குளிர் (நடுக்கம்).
- தலைவலி.
- வாந்தி.
- மஞ்சள் காமாலை.
- கண்கள் சிவந்திருத்தல்.
- தசை வலி.
- தடிப்பு.
- விறைப்பான கழுத்து.
- விரிவடைந்த மண்ணீரல்.
- வயிற்றுப்போக்கு.
பாக்டீரியாவிற்கு வெளிப்பட்ட 2 முதல் 4 நாட்களில் உடல் நலமின்மை காணப்படுகிறது. இந்த நிலையின் முதல் அறிகுறி காய்ச்சலே ஆகும். இது இரண்டு முக்கிய கட்டங்களைக் கொண்டுள்ளது:
- கட்டம் 1: காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் தசை வலி.
- கட்டம் 2: சிறுநீரக அல்லது கல்லீரல் சேதம், விழித்திரைப்படலத்தின் அழற்சி அல்லது வீக்கம் அல்லது மூளையுறை அழற்சி உடன் கூடிய நரம்பு கோளாறுகள்.
லெப்டோஸ்பிரோசிஸ் கர்ப்பிணிப் பெண்ணின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக விளங்குகிறது. இது கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீருடன் ஏற்படும் தொடர்பு மூலம் இந்த நோய்த்தொற்று ஏற்படுகிறது. நாய்கள், கால்நடை, குதிரைகள், பூனைகள் மற்றும் பிற வீட்டு விலங்குகளின் சிறுநீரில் இந்த பாக்டீரியாவைக் காணலாம். லெப்டோஸ்பைரா கொறிக்கும் விலங்குகளான எலிகளிலும் காணப்படுகிறது. பாக்டீரியா உள்ள சிறுநீருடனான நேரடித் தொடர்பு அல்லது அவற்றால் அசுத்தமடைந்த உணவு அல்லது நீர் ஆகியவையும் கூட இந்த நோய்த்தொற்றை ஏற்படுத்தும். சளி உடைய மேற்ப்பரப்புகளான கண்கள் அல்லது மூக்கு அல்லது சருமத்தின் வழியாக இந்த பாக்டீரியா நுழைகிறது. இந்த நோயை மனிதர்கள் கடத்துவது அரிதானதாகும்; எனவே, இது ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதில்லை.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உடல் நலமின்மை தோன்றும் ஆரம்ப கட்டத்தில், உடலில் சுரக்கும் திரவத்தில் இருந்து பாக்டீரியாவை எடுத்து பண்படுத்துவதன் மூலமாக நோய் கண்டறியப்படுகிறது. வழக்கமாக ஆரம்ப நாட்களில் மூளை தண்டுவட திரவம் (மூளை மற்றும் தண்டுவடத்தை சுற்றியுள்ள திரவம்) சோதிக்கப்படுகிறது. பிந்தைய கால கட்டத்தில், சிறுநீர் பண்படுத்தி சோதிக்கப்படுகிறது. அதேப் போல், நோயறிதலை உறுதிப்படுத்த இரத்தம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பின் உயிரணுக்கள் நோய் கண்டறிதலை உறுதி செய்ய பரிசோதிக்கப்படலாம்.
பெனிசிலின், டாக்சிசிலின், இஸ்ட்ரெப்டோ மைசின், எரித்ரோ மைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக செயல்படுகின்றன. சுவாச இடையூறு இருப்பின், செயற்கை சுவாசம் மூலமாக நிவாரணம் அளிக்கப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் கூடிய உதரஉடையிடையூடு பிரித்தல், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பிற்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.
தடுப்பு நடவடிக்கைகள்:
- பாதிக்கப்பட்ட விலங்குகளுடனான சரும ரீதியான தொடர்பை தவிர்த்தல்.
- வீட்டு விலங்குகளை சுத்தம் செய்யும் போது, பாதுகாப்பான ஆடை அணிதல்.
- விலங்கின் சிறுநீரினால் அசுத்தமடைந்த தண்ணீரை நுகர்தல் அல்லது அதில் நீந்துவதை தவிர்ப்பதன் மூலமாக இந்த நோய்த் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கலாம்.