'பிராணயாமம்' என்பது, சுவாசம் எனப் பொருள்படும் 'பிராணா" என்ற சொல்லில் இருந்தும் மற்றும் நீட்டித்தல் அல்லது முறைப்படுத்துதல் என்ப பொருள்படும் 'ஆயாமா' என்ற சொல்லில் இருந்தும், சுவாசத்தை ஒழுங்குபடுத்தல் என்ற பொருளை அளிக்கும் விதமாக, உருவான ஒரு சமஸ்கிருத சொல் ஆகும்.  இந்த சொல் தவறான அர்த்தத்தைக் கொடுக்கிறது எனக் கூறும் படியாக பிராணாயாமம், மூக்கு துவாரங்களின் வழியாக வெறுமனே காற்றை உள்ளே இழுத்து, வெளியே விடுவதைத் தவிரவும், ஏராளமான விஷயங்களைக் கொண்டிருக்கிறது. அது, நமது 'பிராணா'வின் ஆதாரம் அல்லது வாழ்க்கையின் முக்கிய சக்தியைக் கட்டுப்படுத்தும் ஒரு செயல் என அர்த்தமாகிறது.

பிராணயாமம் என்பது, "பகவத் கீதை" யில் அதைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட, கி.மு ஐந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் இருந்து பண்டைய இந்தியாவில், தனது வேர்களைப் பரப்பியிருக்கின்ற ஒரு யோகா வடிவம் ஆகும். அந்தக் காலகட்டத்தில் இருந்து பிராணயாமம், இந்தியாவை அதன் முக்கியப் பயிற்சி மையமாக வைத்துக் கொண்டு, இந்த பூமிக்கோளம் முழுவதும் தன்னை பரப்பிக் கொண்டு இருக்கிறது.

அமைதி மற்றும் கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக ஒரு தியான வடிவில் பயிற்சி மேற்கொள்ளப்படுவதைத் தவிர, பிராணயாமம் குறிப்பிட்ட நோய்களுக்கு, குறிப்பாக, மன அழுத்தத்தோடு தொடர்புடைய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நன்மை விளைவிக்கிறது என்று யோகிகளும் ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு வகை பிராணயாம பயிற்சி உத்திகளுள், 'அனுலோம் விலோம்' உத்தியானது, அதன் பிரபலம் மற்றும் நன்மைகளின் காரணமாக மிகவும் பொதுவாக பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.  "விதையுடன்" எனப் பொருள்படும் மற்றும் மாற்று முறை மூச்சு விடுதலின் ஒரு வடிவமான அனுலோம் விலோம், பிராணாயாமத்தின் மிகச் சிறந்த வடிவமாகக் கருதப்படுகிறது. அது, உங்கள் மூளை, இதயம் மற்றும் உடலுக்கு ஆழமான நன்மைகளைக் கொண்டிருக்கிறது. அதன் நன்மைகள், படிகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியன பற்றி கீழே விவாதிக்கப்படும்.

  1. அனுலோம் விலோம் படிகள் - Anulom Vilom steps in Tamil
  2. அனுலோம் விலோம் பிராணயாமத்தின் நன்மைகள் - Anulom Vilom Pranayama benefits in Tamil
  3. அனுலோம் விலோம் எவ்வளவு நேரத்துக்கு செய்யப்பட வேண்டும் - How much time to do anulom vilom for in Tamil
  4. அனுலோம் விலோம் எவ்வாறு பாதுகாப்பானது - How safe is anulom vilom? in Tamil

அனுலோம் விலோம் பிராணயாமம், பயிற்சி செய்வதற்கு மற்றும் தொடர்ந்து செய்வதற்கும் மிகவும் எளிதானது ஆகும். அது, பின்வரும் படிகளில் மிகவும் எளிதாக செய்யக் கூடியதாகும். இந்தப் படிகளை ஆரம்பிக்கும் முன்பு, ஒரு அமைதியான, சாந்தமான மற்றும் வசதியான நிலையில் அமர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இது சுற்றுப்புற நிகழ்வுகளில் இருந்து உங்களைத் தனியாகத் தள்ளி வைக்கவும் மற்றும் உங்கள் முழுமையான கவனத்தை பயிற்சியை நோக்கித் திருப்பவும் உதவும்.

  • கால்களைக் குறுக்காக வைத்து அல்லது தியான நிலையில், கூடுமான வரை தரையில் அமருங்கள். உங்கள் முதுகுத்தண்டு மற்றும் தலை நேராக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க: முதுகுத்தண்டு காயம்)
  • உங்கள் கண்களை மூடிக்கொண்டு, சில நிமிடங்களுக்கு ஆசுவாசப்படுத்துங்கள். இது, சுற்றுப்புற நிகழ்வுகளில் இருந்து கவனத்தைத் திருப்பவும் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் உதவும்.
  • நீங்கள் ஆசுவாசமாகி பிராணயாமம் செய்வதற்கு தயாராகும் வரையில், இந்த நிலையில் கண்களை மூடியபடி,  ஒரு சில நிமிடங்களுக்கு அமர்ந்து இருக்கவும்.
  • இப்பொழுது, உங்கள் இடது கை உங்களது இடது முழங்காலில் இருக்கும் பொழுதே, உங்கள் வலது கையை எடுத்து மெதுவாக உங்கள் வலது மூக்கு துவாரத்தில் வைக்கவும்.
  • இந்த நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றோட்டம் செல்வது தற்காலிகமாக அடைபடுமாறு கடினமாக அழுத்தவும்.
  • இப்பொழுது, உங்கள் இடது நாசித்துவாரத்தின் வழியாக மெதுவாக மூச்சை ஆழமாக உள்ளிழுக்கவும்.
  • இரண்டு நாசித்துவாரங்களையும் அடைத்து, ஒரு சில வினாடிகளுக்கு இழுக்கப்பட்ட மூச்சை அப்படியே பிடித்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது, வலது நாசித்துவாரத்தின் வழியாக காற்றை வெளியேற்ற உங்களுக்கு உதவும் விதமாக, அதில் இருந்து உங்கள் விரலை எடுக்கவும்.
  • இவ்வாறு செய்யும் பொழுது, உங்கள் இடது நாசித்துவாரம், உங்கள் மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் இரண்டின் உதவியால் பாதுகாப்பாக மூடியிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  • உங்கள் வலது நாசித்துவாரத்தில் இருந்து காற்றினை வெளியேற்றும் போது, காற்றை உள்ளே இழுக்கும் போது எடுத்துக் கொண்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ள முயற்சித்து, அந்த செயல்முறையை மிகவும் மெதுவாக செய்யவும்.
  • அடுத்து, உங்கள் மோதிர விரல் மற்றும் சுண்டு விரலைக் கொண்டு இடது நாசித்துவாரத்தை மூடிக் கொண்டு, உங்கள் வலது நாசித்துவாரத்தின் வழியாக மூச்சை ஆழமாக உள்ளே இழுக்கவும்.
  • அதே போன்று, இரண்டு நாசித்துவாரத்தையும் மூடிக் கொள்வதன் மூலம், ஒரு சில வினாடிகளுக்கு உங்கள் மூச்சைப் பிடித்துக் கொள்ளவும்.
  • இறுதியாக, பெருவிரல் மூலமாக வலது நாசித்துவாரத்தை மூடிக் கொண்டு, இடது நாசித்துவாரத்தின் வழியாக மூச்சை வெளியே விடவும்.
  • அவ்வாறு மூச்சை வெளியேற்றுவது, மெதுவாக, மற்றும் மூச்சை உள்ளிழுக்கும் போது எடுத்துக் கொண்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளுமாறு இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

இது, அனுலோம் விலோமின் ஒரு முழு சுழற்சியைப் பூர்த்தி செய்யும். மேலே கூறப்பட்ட படிகளைப் பின்பற்றி, மற்றும் இரண்டு நாசித்துவாரங்களுக்கும் இடையே மாற்றி மாற்றி, அடுத்த சுழற்சி ஆரம்பிக்கப்படுகிறது. இது, இதன் நன்மைகளைப் பெற தினசரி 5 முதல் 6 முறைகள் வரை செய்யப்பட வேண்டும்.

தொடக்க நிலையில் இருக்கும் ஒருவருக்கு, மூச்சை உள்ளே இழுக்கும் பொழுதோடு ஒப்பிடுகையில், மூச்சை வெளியேற்றுவது நீண்ட நேரமாக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்க. அந்த இரண்டுக்கும் இடையே ஒரு சமமான விகிதத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு, படிப்படியாக, உள்ளிழுத்தல் மற்றும் வெளியேற்றுதல் நேரத்தை 1.2 என்ற விகிதத்துக்கு அதிகரித்துக் கொள்ளலாம்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹799  ₹799  0% OFF
BUY NOW

அனுலோம் விலோம் பிராணயாமம், தினசரி 5 முதல் 6 நிமிடங்கள் வரையில் சரியான முறையில் செய்யப்படும் பொழுது, மன அமைதியைத் தருவதைத் தவிரவும், எண்ணற்ற ஆரோக்கியமளிக்கும் நன்மைகளைக் கொண்டிருக்கிறது. நமது இரண்டு நாசித்துவாரங்களும், ஒரு நாளுக்குள் சுழற்சி முறையில், ஒரு சீரான முறையில் காற்றை உள்ளே இழுத்து, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செயல்படுகின்றன. ஆரோக்கியமான நபர்களுக்கு, இந்த மாறி மாறி வரும் லயம், 24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் ஏற்படுகின்ற வேளையில், ஆரோக்கியமற்ற நபர்களுக்கு அதில் இடையூறுகள் ஏற்படலாம். அனுலோம் விலோம் பயிற்சி செய்வது, இந்த லயத்தை மறுபடி கொணர, சமமாக மற்றும் சமன் செய்ய, மற்றும் உடலில் பிராணத்தை பாய செய்வதற்கும் உதவுகிறது. இந்த பிராணயாமம் உங்கள் ஆரோக்கியத்துக்கு எவ்வாறு நன்மை அளிக்கக் கூடியதாக உள்ளது என்பதை, நாம் இப்பொழுது விவாதிக்கலாம்:

  • மூளைக்கு: அனுலோம் விலோம் பயிற்சி செய்வது, மூ ளையில் ஒரு அமைதிப்படுத்தும் மற்றும் தணிப்பைக் கொடுக்கும் ஒரு விளைவைக் கொண்டிருக்கிறது. அதனால் மனச் சோர்வு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. அது, அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது மற்றும் முதுமை தொடர்பான ஞாபக மறதி ஏற்படாமல் தடுக்க உதவக் கூடியதாகும்.
  • சருமத்துக்கு: அனுலோம் விலோம், பருக்கள் மற்றும் தோல் அழற்சி ஏற்படுவதைக் குறைப்பதன் மூலம் உங்கள் சருமத்துக்கான நன்மைகளைக் கொண்டிருக்கிறது.
  • கண்களுக்கு: அனுலோம் விலோம் பிராணயாமம், கண்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் பார்வைத்திறன் மற்றும் கண்பார்வையை மேம்படுத்தி, பார்வை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது.
  • இதயத்துக்கு: அனுலோம் விலோம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, அதனால் இதய பாதுகாப்பு செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது, உங்களுக்கு இதயநாளக் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
  • நுரையீரல்களுக்கு: அனுலோம் விலோம் ஒரு நபரின் சுவாசத்தின் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கின்ற காரணத்தால், அதனைப் பயிற்சி செய்வது, ஆஸ்துமாவை சமாளிப்பதில் உதவிகரமாக இருக்கிறது. மேலும் அது, உடலின் காற்று சுழற்சியையும் அதிகரிக்கிறது, மற்றும் மூச்சுத்திணறல் மற்றும் மூச்சிரைப்பு ஆகியவற்றைக் குறைக்கவும் கூட உதவுகிறது.
  • எடைக் குறைப்புக்கு: அனுலோம் விலோமை பயிற்சி செய்வது, எடைக் குறைப்பு, மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதில் உதவுகிறது என்று ஆய்வுகள் கண்டறிந்து இருக்கின்றன.
  • பெண்களுக்கு: கர்ப்ப காலத்தில் அனுலோம் விலோமை பயிற்சி செய்வது, சிகிச்சை அளிக்காமல் விடப்பட்டால் பேறுகாலத்துக்குப் பிறகும் நீடிக்கும் முனைப்பைக் கொண்ட, கர்ப்பகால மனச் சோர்வு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க உதவுகிறது. கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு, இந்த உத்தி மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளில் இருந்து விடுபட உதவுகிறது.

மூளைக்கான அனுலோம் விலோமின் நன்மைகள் - Anulom Vilom benefits brain in Tamil

அனுலோம் விலோம் 'கிரியா' (செயல்), உங்கள் மூளை மற்றும் மன நலத்துக்கு பிரமிப்பான நன்மைகளைக் கொண்டிருக்கிறது.

அது, உங்கள் மனதுக்கு அமைதியை அளிப்பதிலும், மற்றும் தினசரி நடைமுறைகள் மூலம் உங்களுக்கு ஏற்படும் அழுத்தங்களில் இருந்து விடுபட வும் உதவுகிறது. சுவாசத்தை முறைப்படுத்துதல் மற்றும் நீட்டித்தல் செயல்பாடு, மன அமைதியைப் பெறுவதற்கு மற்றும் பொறுமையை அதிகரிப்பதற்கு உதவுகிறது. உங்கள் மூளையில் நடைபெறுகின்ற குறிப்பிட்ட செயல்கள், கற்பனை சக்தி மற்றும் தர்க்க சிந்தனை இரண்டுக்கும் இடையேயான ஒரு சமநிலையின் படைப்பாக சுருக்கப்பட முடியும். இது, மூளையின் கற்பனை சக்திக்கு பொறுப்பான வலது பக்கம், தர்க்கரீதியான சிந்தனைக்கு உறுதி செய்கிற இடது பக்கம், ஆகிய இரண்டு பக்கங்களின் தகுந்த செயல்பாடுகளைப் பராமரிப்பதன் காரணமாக நடைபெறுகிறது. இந்த இரண்டின் ஒரு சமநிலையின் மூலம், மூளையின் அதிகபட்ச திறனை அடைய மற்றும் தினசரி நடவடிக்கைகளில் சிறப்பான செயல்பாட்டினை உறுதி செய்ய உதவும்.

அனுலோம் விலோம், குறிப்பாக முதிர்ந்த வயதுப் பிரிவினருக்கு நன்மைகரமானதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது. பல்வேறு ஆய்வுகள், நாசித்துவாரங்கள் மாற்றி மாற்றி சுவாசித்தல் அல்லது பிராணயாமம் பயிற்சி செய்வது, அறிவாற்றல் (தர்க்கரீதியாக, பகுத்தறியும் திறன்கள், மற்றும் நினைவாற்றல்) செயல்பாட்டில் ஒரு முன்னேற்றத்தைக் கொடுப்பதை நிரூபித்து இருக்கின்றன. அதனால் அது, முதுமை தொடர்பான நினைவாற்றல் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, முதிர்ந்த வயதுப் பிரிவை சேர்ந்த நபர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

(மேலும் படிக்க:டிமென்ஷியாவுக்கான சிகிச்சை)

மனச்சோர்வுக்காக அனுலோம் விலோம் - Anulom Vilom for depression in Tamil

மூளையின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டின் மீதான அதன் சாதகமான விளைவுகளால் அனுலோம் விலோம், நடத்தையை மேம்படுத்தவும், மற்றும் பதற்றம், மனச்சோர்வு ஆகியவற்றைப் போக்குவதற்காகவும் அறியப்படுகிறது. இந்த பிராணயாமத்தின் மூளையை அமைதிப்படுத்தும் விளைவுகள் பற்றி, பதற்றம் மற்றும் மன அழுத்தத்தின் மீதான அதன் விளைவுகளைப் பரிசோதிக்க மாணவர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், காட்டப்பட்டு இருக்கிறது. அந்த ஆய்வில், மற்ற குழுவோடு ஒப்பிடப்படும் பொழுது, பிராணயாமத்தைப் பயிற்சி செய்த பங்கேற்பாளர்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதற்றம் மிகவும் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த பங்கேற்பாளர்களுக்கு ஒரு குறைந்த சராசரி அளவில் பதற்றம் கவனிக்கப்பட்டது.

(மேலும் படிக்க: அல்சைமர் நோய்க்கான சிகிச்சை)

சருமத்துக்கான அனுலோம் விலோமின் நன்மைகள் - Benefits of anulom vilom for skin in Tamil

அனுலோம் விலோம், உங்கள் சரும ஆரோக்கியத்தையும் அதிகரிக்கக் கூடும். மேலே குறிப்பிட்டவாறு அது ஒரு திறன்மிக்க மன அழுத்த நீக்கி மற்றும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க குறிப்பிடத்தக்க அளவில் உதவுகிறது. நம் அனைவருக்கும் தெரிந்தவாறு, மன அழுத்தம் உங்கள் சருமத்தின் மீது பல்வேறு சேதப்படுத்தும் விளைவுகளைக் கொண்டிருக்கிறது. அதிக அளவிலான மன அழுத்தம் உள்ள நபர்களுக்கு, முகப்பருக்கள் அதிக அளவில் ஏற்படுவதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. மன அழுத்தம் மற்றும் தோல் அழற்சி இரண்டுக்கும் இடையிலான ஒரு கொடூரமான தொடர்பும் (ஒன்று மற்றொன்றுக்கு மாறி மாறி வழிவகுக்கிறது) ஆய்வுகளில் கண்டறியப்பட்டு உள்ளது. மன அழுத்தம், திறந்த காயங்கள் குணமாவதை தாமதப்படுத்துகிறது மற்றும் சரும முதிர்ச்சி விளைவுகளை விரைவுபடுத்துகிறது எனவும் அறியப்பட்டிருக்கிறது. அனுலோம் விலோம், மன அழுத்தத்தின் தனிப்பட்ட அளவுகளைக் குறைக்க உதவிகரமாக இருக்கும் காரணத்தால், அது உங்கள் சருமத்துக்கான ஆரோக்கியத்தின் மீது ஒரு சாதகமான விளைவைக் கொண்டிருக்கக் கூடும்.

(மேலும் படிக்க: சருமத்துக்காக வைட்டமின் இ)

கண்களுக்கான அனுலோம் விலோமின் நன்மைகள் - Benefits of anulom vilom for eyes in Tamil

அனுலோம் விலோம், தினசரி பயிற்சி செய்யப்படும் பொழுது, உங்கள் பார்வைத்திறனை மேம்படுத்தும் திறனைக் கொண்டிருக்கிறது. காலை அல்லது மாலை நேரங்களில் வெறும் வயிற்றில் பயிற்சி செய்யப்படும் பொழுது, கண்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை (இரத்த சுழற்சி) அதிகரிக்கிறது. விழித்திரைக்கு (விழித்திரை என்பது கண்பார்வைக்குப் பொறுப்பான அடுக்கு ஆகும்) போதுமான இரத்த ஓட்டம் பாய்வது, உங்கள் கண்பார்வைக்கு அத்தியாவசியமானது ஆகும். கண்களில் பாயும் இரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தால், 4 முதல் 6 வினாடிகளுக்குள் பார்வை இழப்பு ஏற்படுவதாக அறியப்படுகிறது. இது, அனுலோம் விலோம் பயிற்சி செய்வதன் மூலம் அதிகரிக்கக் கூடிய, உங்கள் கண்களுக்கு முறையாக செலுத்தப்படும் சுத்தமான ஆக்சிஜனின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துகிறது

(மேலும் படிக்க: கண்களுக்கான வைட்டமின் ஏ நன்மைகள்)

இதயத்துக்கான அனுலோம் விலோமின் நன்மைகள் - Benefits of anulom vilom for heart in Tamil

அனுலோம் விலோம் பயிற்சி செய்வது, இதயத்துக்கான ஆழமான நன்மைகளைக் கொண்டிருக்கிறது. அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கதாக, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதில் அதன் பங்கினைக் கூறலாம். பல்வேறு ஆய்வுகள், அனுலோம் விலோமில் பயிற்சி செய்யப்படுவது போன்ற மெதுவாக சுவாசித்தல், உயர் இரத்த அழுத்த நோயைக் கொண்ட நோயாளிகளுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவிகரமாக இருப்பதைக் காட்டுகின்றன. எனவே, உயர் இரத்த அழுத்தம் பிரச்சினைக்கு ஒரு மாற்று மருத்துவமாக இது பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

அது, உங்கள் இதயநாள ஆரோக்கியத்துக்கான மற்ற பல்வேறு நன்மைகளையும் கொண்டிருக்கிறது மற்றும் உங்கள் இதய செயல்பாட்டினை முறைப்படுத்த உதவுகிறது. அது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உட்பட, பல இதயநாள கோளாறுகள் ஏற்படக் காரணமான, முக்கியமான ஒரு அபாய காரணியான பதற்றத்தைப் போக்க உதவுகிறது.

அனுலோம் விலோம் இதயத்துடிப்பைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும், மன அழுத்தத்தை, குறிப்பாக இதயநாளக் கோளாறுகளின் அபாயத்தைக் கொண்ட நபர்கள், எதிர்த்துப் போராட, அதைத் தினசரி பயிற்சி செய்வது உதவிகரமாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்ட நபர்களுக்கு அனுலோம் விலோமின் முக்கியமான நன்மை தரும் வடிவமாக, வெப்பத்தைக் குறைக்கின்ற அல்லது குளிர்ச்சியான விளைவைக் கொண்ட சந்திர அனுலோம் விலோம் இருக்கிறது. இது, உயர் இரத்த அழுத்தத்தை சமாளிக்க, ஒரு மருந்து இல்லாத முறையாகப் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.

(மேலும் படிக்க: இதயத்துக்கான வைட்டமின் பி3 நன்மைகள்)

அனுலோம் விலோம் சுவாசித்தல் - Anulom Vilom breathing in Tamil

மன அழுத்தம், சுவாசம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒரு முக்கியத் தூண்டுதலாக அறியப்படுகிறது. அது ஒரு ஆஸ்துமா தாக்குதல் அல்லது நிகழ்வை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் மிக்க சூழ்நிலைகளில் நமது உடல், நமது சுவாச முறையை மாற்றி, அதனை ஆழமற்றதாக மற்றும் வேகமானதாக ஆக்குகின்ற, மன அழுத்த ஹார்மோனை சுரக்கின்றது. இது, ஆஸ்துமா பாதிப்புடன் இணைந்திருக்கின்ற இருமலின் அறிகுறிகள், மற்றும் நெஞ்சு பிடிப்பின் அறிகுறிகளைத் தூண்டி விடுகிறது. அனுலோம் விலோம் மன அழுத்தத்தை சமாளிக்க, மற்றும் ஒரு நபரின் சுவாசம் மீதான கட்டுப்பாட்டை மேம்படுத்துகின்ற காரணத்தால், அது ஆஸ்துமா நிகழ்வுகளை சமாளிப்பதில் உதவிகரமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது.

(மேலும் படிக்க: நெஞ்சு வலியை சமாளித்தல்)

ஆய்வுகள், அனுலோம் விலோம் பிராணயாமம், உடலின் காற்று சுழற்சியையும் (நுரையீரல்களுக்கு ஆக்சிஜன் சென்று அடையும் செயல்முறை) மற்றும் சைனஸ்களுக்கு (கபாலத்தின் உள்ளே உள்ள வெற்று குழிவுகள்) ஆக்சிஜனூட்டத்தையும் அதிகரிக்கிறது எனக் காட்டி இருக்கின்றன. இது, மூக்கின் புறத்திசுக்களின் மூலம் கிரகிக்கப்படக்கூடிய, ஆக்சிஜன் கிடைக்கும் சிறப்பான ஒரு பரப்பை வழங்குகிறது, உடலுக்கு ஆக்சிஜன் அளிப்பை மேம்படுத்துகிறது.

(மேலும் படிக்க: சைனஸ் பிரச்சினைக்கான சிகிச்சை)

தனிநபர்களின் சுவாசம் சார்ந்த ஆரோக்கியத்தின் மீது தியானத்தின் விளைவுகளை, மூச்சுப் பயிற்சிகளின் விளைவுகளோடு ஒப்பிட மற்றொரு ஆய்வு நடத்தப்பட்டது. இதைத் தீர்மானிக்க, இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. இரண்டு குழுக்களில் ஒரு குழுவினர் அனுலோம் விலோம் பயிற்சியை திறம்பட மேற்கொண்ட வேளையில், மற்றொரு குழுவினர் ஆழ்ந்த தியானப் பயிற்சி மேற்கொண்டனர். அதில், மூச்சுப் பயிற்சிகளை மேற்கொண்ட குழுவினருக்கு, இருமல், மூச்சிரைப்பு (மூச்சு விடும் பொழுது சீழ்க்கை சத்தங்கள் ஏற்படுதல்) மற்றும் மூச்சுத்திணறல் (மூச்சு விடுவதில் சிரமம்) ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. எனவே, இந்தப் பயிற்சி ஆஸ்துமா நோயாளிகளுக்கு அடிக்கடி பரிந்துரைக்கப்படுகிறது.

கர்ப்ப காலத்தின் பொழுது அனுலோம் விலோம் - Anulom Vilom during pregnancy in Tamil

ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக, மனநிலை குறைபாடுகள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை ஏற்படுவது கர்ப்ப காலத்தின் பொழுது மிகவும் பொதுவானவை ஆகும். மேலும் இது, பிரசவத்திற்குப் பிறகும் நீடிக்கக் கூடிய கர்ப்பகால மனச்சோர்வு ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இது போன்ற ஒரு முக்கியமான கட்டத்தில் மனச்சோர்வைத் தவிர்க்க, அதிலிருந்து நிவாரணம் அளிக்கின்ற அனுலோம் விலோம் போன்ற எளிமையான மூச்சுப் பயிற்சிகளை, தினசரி 5 நிமிடங்களுக்கு செய்து வருவது அறிவுறுத்தப்படுகிறது. இது தினசரி ஏற்படுகின்ற பதற்றத்தைக் குறைக்க உதவி செய்து, நாளடைவில் கர்ப்ப கால மனச்சோர்வை குணப்படுத்துகிறது. வழக்கமாக இந்த உத்தி, கர்ப்ப காலத்தின் பொழுது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால், ஒரு பயிற்சி பெற்ற பயிற்றுவிப்பாளரின் வழிகாட்டுதலின் படி பயிற்சியை மேற்கொள்வது அறிவுறுத்தத்தக்கது ஆகும்.

(மேலும் படிக்க: எவ்வாறு கருத்தரிப்பது)

அனுலோம் விலோம், பெண்களின் இனப்பெருக்க அமைப்பின் ஆரோக்கியத்துக்கான பிற நன்மைகளையும் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், அனுலோம் விலோம் பயிற்சி செய்வது, மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளை (மாதவிடாய்க்கு முன்பு ஏற்படும் எரிச்சல், சோர்வு மற்றும் வயிறு வீங்குதல்) குறைக்கிறது, மற்றும் ஒரு ஒட்டுமொத்த அமைதியளிக்கும் விளைவைக் கொண்டிருக்கிறது எனக் கண்டறியப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அனுலோம் விலோம் பயிற்சி மேற்கொள்வது, பெண்களின் ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

(மேலும் படிக்க: வைட்டமின் பி12 மனச்சோர்வைக் குறைக்கிறது)

எடைக் குறைப்புக்காக அனுலோம் விலோம் - Anulom Vilom for weight loss in Tamil

உடல் பருமன் மற்றும் உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகக் குறிப்பிடத்தகுந்த ஒரு அபாய காரணியாக மன அழுத்தம் இருக்கிறது. அது, இனிப்புகள் மற்றும் சாக்லேட்டுகள் போன்ற கொழுப்பு நிறைந்த 'வசதியான உணவுகளை' உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கின்ற, மன அழுத்த ஹர்மோனான கார்டிசோல் அளவுகளை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது, அதிக கலோரிகளை உண்பது மிகவும் பொதுவானது ஆகும். அனுலோம் விலோம், மனதை அமைதிப்படுத்தி மற்றும் சாந்தமாக்கி, இந்த வசதியான உணவுகளின் தேவையைக் குறைக்கிறது.

(மேலும் படிக்க: எடைக் குறைப்புக்காக சீரான உணவு )

அனுலோம் விலோமின் விளைவுகளைத் தீர்மானிக்க, இளம்பெண்களைக் கொண்ட ஒரு குழுவின் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சிறந்த நெகிழ்திறன் மற்றும் எடைக் குறைப்பு உட்பட, ஆரோக்கியம் தொடர்பான உடல்தகுதியை அது அதிகரிக்கிறது என்பதும் கண்டறியப்பட்டது. இருந்தாலும், மிகவும் குறிப்பிடத்தகுந்த அளவிலான பாதிப்புகள் கவனிக்கப்படவில்லை. இப்பொழுதும் கூடநீங்கள், உங்கள் மனதுக்கு அமைதியளிக்கவும், மற்றும் உங்கள் எடைக் குறைப்பு இலக்குகளை அதிகரிக்கக் கூடியதான,மன அழுத்தத்தினால் சாப்பிடுவதைக் குறைக்கவும், இந்த உத்தியைத் தேர்ந்தெடுக்க இயலும்.

(மேலும் படிக்க: எடைக் குறைப்புக்காக சீரான உணவு அட்டவணை)

ஒரு ஆரோக்கியமான நபர், 5 முதல் 10 நிமிடங்களுக்கு அனுலோம் விலோம் பயிற்சி செய்ய வேண்டும் என்று யோகிகள் தெரிவிக்கின்றனர். நாள்பட்ட வியாதிகள் மற்றும் கோளாறுகளைக் கொண்ட நபர்கள், காலையில் வெறும் வயிற்றில் இந்தப் பயிற்சியை 10 முதல் 15 நிமிடங்களுக்கு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஒருவேளை உங்களால் அனுலோம் விலோம் பயிற்சியைக் காலையில் செய்ய முடியவில்லை எனில், அதை நீங்கள் மாலையில் செய்யலாம். ஆனால், நீங்கள் இறுதியாக எடுத்துக் கொண்ட உணவில் இருந்து 5 மணி நேர இடைவெளி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இருந்தாலும், இந்தக் கூற்றினை உறுதி செய்யப் போதுமான ஆய்வுகள் இல்லை. எனவே, அனுலோம் விலோம் பயிற்சியை ஆரம்பிக்கும் முன்னர், குறிப்பாக நீங்கள் ஏதேனும் சுவாசம் சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்தால், உங்கள் மருத்துவர் அல்லது தொழில்முறை பயிற்றுவிப்பாளரிடம் ஆலோசனை செய்து கொள்வது அறிவுறுத்தத்தக்கது ஆகும். ஆஸ்துமால் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் நீண்ட நேரத்துக்கோ அல்லது உடல் சவுகரியத்தைத் தாண்டிய ஒரு நிலை வரையிலுமோ தங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருப்பது கூடாது.

(மேலும் படிக்க: நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கான சிகிச்சை)

Shilajit Resin
₹699  ₹1299  46% OFF
BUY NOW
  • அனுலோம் விலோம் ஒரு எளிமையான மூச்சுப் பயிற்சி உத்தியாகும், மற்றும் அது முறையாக செய்யப்படும் பொழுது முற்றிலும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
  • மேலே குறிப்பிடப்பட்டவாறு, நாள்பட்ட நோய்களைக் கொண்ட நபர்கள், ஒரு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, ஒரு பயிற்சி பெற்ற வல்லுனரின் மேற்பார்வையின் கீழ் பயிற்சியை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
  • கர்ப்பிணிப் பெண்களும், ஒரு வல்லுனரின் மேற்பார்வையின் கீழ், மிகவும் கவனமாக இந்தப் பயிற்சியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
  • ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், முதலில் ஒரு பயிற்சி பெற்ற வல்லுனரின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி செய்யுமாறும், மூச்சை உள்ளிழுத்தல் மற்றும் வெளியே விடுதலுக்கு இடையே சிறப்பான நேர வித்தியாசத்தைப் அடைய வேண்டும் என, ஆரம்ப கட்டத்தில் இலக்கு வைத்துக் கொள்ளாமலும் இருக்க வேண்டும்.
  • அனைத்து நேரங்களிலும், உங்கள் சவுகரியமான நிலையைத் தாண்டிச் செல்லும் வகையில் பயிற்சியை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
  • ஒருவேளை உங்கள் மார்பில் ஏதேனும் வலி அல்லது கஷ்டத்தை உணர்ந்தால், உடனடியாக ஒரு மருத்துவரைப் பார்ப்பது அறிவுறுத்தப்படுகிறது.
  • ஒருவேளை அதீதமான சோர்வு அல்லது களைப்பு ஏற்படும் நிலையில், இந்தப் பயிற்சியை மேற்கொள்வதை கைவிட்டு விட்டு, உங்கள் மருத்துவரை ஆலோசிக்குமாறு நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

மேற்கோள்கள்

  1. National Hindu Student's Forum. Pranayama: The power of breathing. U.K [Internet]
  2. Ministry of AYUSH, Govt. of India. Common Yoga Protocol. [Internet]
  3. Azadeh Nemati. The effect of pranayama on test anxiety and test performance. Int J Yoga. 2013 Jan-Jun; 6(1): 55–60. PMID: 23439436
  4. Ying Chen, John Lyga. Brain-Skin Connection: Stress, Inflammation and Skin Aging. Inflamm Allergy Drug Targets. 2014 Jun; 13(3): 177–190. PMID: 24853682
  5. Robert A. Linsenmeiera, Hao F. Zhang. Retinal Oxygen: from animals to humans. Prog Retin Eye Res. 2017 May; 58: 115–151. PMID: 28109737
  6. Atul Bhardwaj, Mahendra Kumar Sharma, Manoj Gupta. Endoscopic evaluation of therapeutic effects of “Anuloma-Viloma Pranayama” in Pratishyaya w.s.r. to mucociliary clearance mechanism and Bernoulli's principle. Ayu. 2013 Oct-Dec; 34(4): 361–367. PMID: 24696572
  7. Tarun Saxena, Manjari Saxena. The effect of various breathing exercises (pranayama) in patients with bronchial asthma of mild to moderate severity. Int J Yoga. 2009 Jan-Jun; 2(1): 22–25. PMID: 21234211
  8. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Depression During and After Pregnancy
  9. Sharma B, Misra R, Singh K, Sharma R, Archana. Comparative study of effect of anuloma-viloma (pranayam) and yogic asanas in premenstrual syndrome. Indian J Physiol Pharmacol. 2013 Oct-Dec;57(4):384-9. PMID: 24968577
  10. Harding JL. Psychosocial stress is positively associated with body mass index gain over 5 years: evidence from the longitudinal AusDiab study. Obesity (Silver Spring). 2014 Jan;22(1):277-86. PMID: 23512679
  11. A. Scott, Susan J. Melhorn, Randall R. Sakai. Effects of Chronic Social Stress on Obesity Karen. Curr Obes Rep. 2012 Mar; 1(1): 16–25. PMID: 22943039
  12. Hewagalamulage SD, Lee TK, Clarke IJ, Henry BA. Stress, cortisol, and obesity: a role for cortisol responsiveness in identifying individuals prone to obesity. Domest Anim Endocrinol. 2016 Jul;56 Suppl:S112-20. PMID: 27345309
  13. Rajita Sinha, Ania M. Jastreboff. Stress as a common risk factor for obesity and addiction. Biol Psychiatry. 2013 May 1; 73(9): 827–835. PMID: 23541000

தொடர்பான கட்டுரைகள்

Read on app