இயற்கை அனைத்து வகையான மருத்துவ மற்றும் சமையல் பொருட்களை மனித குலத்துக்கு வழங்கி இருக்கிறது. நமது வீட்டின் கொல்லைப்புறத்தில் காணப்படும் ஏராளமான மூலிகைகள், உண்மையில் மருத்துவ குணமளிக்கும் அற்புதங்கள் என்று நீங்கள் அறிந்தால் ஆர்ச்சரியப்பட்டு விடுவீர்கள். மூக்கிரட்டை, அது போன்ற ஒரு மூலிகையாகும். அது, வருடத்தில் மழை பெய்யும் மாதங்களின் பொழுது, நமது வீட்டின் மிகவும் வெப்பமான கொல்லைப்புறங்களில், ஒரு சிலந்தி வலை போன்று பரவி வளர்கிறது. மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உட்பட இந்தியாவின் சில பகுதிகளில், மூக்கிரட்டை ஒரு சமையல் சார்ந்த மூலிகையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மூலிகை, ஒரு பிராந்தியத்தின் சமையலறையுடன் மட்டும் கட்டுப்பட்டு இருக்கக் கூடியது அல்ல. ஆயுர்வேத மருத்துவம், மூக்கிரட்டையை ஒரு மிகச் சிறந்த மன அழுத்த நீக்கியாக (மன அழுத்த-எதிர்ப்பு காரணி), ஒரு ரசாயனமாக (புத்துணர்ச்சி அளிப்பான்) மற்றும் ஒரு ஈரல் பாதுகாப்பானாக (கல்லீரலைப் பாதுகாக்கிறது) ஏற்றுக் கொள்கிறது. சொல்லப் போனால், மூக்கிரட்டை என்ற சொல்லுக்கான அர்த்தம் "மறுபடியும் எழுவதற்கு" என்பதாகும். இந்த அர்த்தமானது, மூக்கிரட்டையின் பலவித குணமளிக்கும் நன்மைகளின் காரணமாக வந்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. சிறுநீரகக் கற்கள்/, மஞ்சள் காமாலை, நீரிழிவு, மற்றும் புற்றுநோய் போன்ற, மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களைப் போக்குவதில் மூக்கிரட்டையின் குணமளிக்கும் திறனை உறுதி செய்வதற்கு, ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூக்கிரட்டை தண்டுகள் வழக்கமாக கருஞ்சிவப்பு நிறத்தில் வளர்கின்றன. அது கட்டை போன்று அல்லது சதைப்பற்று உள்ளதாக இருக்கக் கூடும். மேலும் அது, அதன் பரப்புகளில் முடி போன்ற வளர்ச்சியைக் கொண்டிருக்கின்றன. மூக்கிரட்டையின் முடிகளை உடைய இலைகள், ஒரு புறத்தில் பிரகாசமான பச்சை நிறத்தையும், மற்றொரு புறத்தில் வெள்ளை நிறத்தையும் கொண்டிருக்கின்றன. அவை, தண்டில் எதிர் எதிர் புறத்தில் அமைந்து இருக்கின்றன. மூக்கிரட்டை மலர்கள், வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு/சிவப்பு நிறத்தில் மற்றும் இந்தத் தாவரத்தை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்திக் காட்டக் கூடிய பெரிய காரணிகளில் ஒன்றாக இருக்கின்றன. மருந்தக, உயிரியல், மற்றும் வேதியியல் அறிவியலுக்கான ஆய்வுக் குறிப்பேட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, சிவப்பு/இளஞ்சிவப்பு மூக்கிரட்டைகள் பித்தத்தை சமன்படுத்துகிற அதே வேளையில், வெள்ளை வகை மூக்கிரட்டைகள் அனைத்து ஆயுர்வேத தோஷங்களுக்கும் நன்மை அளிப்பதாக அறியப்பட்டு இருக்கிறது.
மூக்கிரட்டை பற்றிய சில அடிப்படை விவரங்கள்:
- தாவரவியல் பெயர்: போயர்ஹாவ்வியா டிஃப்புசா எல்.
- குடும்பம்: நிக்ட்டாசினசியயி
- பொதுவான பெயர்கள்: மூக்கிரட்டை, பன்றி பூண்டு, பரவும் ஹாக் பூண்டு, ஹாக் பூண்டு, தார் திராட்சை
- சமஸ்கிருதப் பெயர்: ரக்தகண்டா, ஷோதாக்னி, வர்ஷபு
- பயன்படும் பாகங்கள்: இலைகள், வேர்கள், மற்றும் விதைகள்
- சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: மூக்கிரட்டை இந்தியா, அமெரிக்கா, மற்றும் ஆப்பிரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காடுகளில் வளர்கிறது.
- ஆற்றலியல்: குளுமைப்படுத்துதல்