எலுமிச்சை ஒரு நன்கு அறியப்பட்ட ரூட்டாகாய் பழக்குடும்பம் ஆகும் . எலுமிச்சையின் சிட்ரஸ் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் புளிப்பு சுவை பற்றி அறியாத வீடு இருக்காது. உண்மையில், எலுமிச்சையின் சுவை பற்றி நாக்கின் சுவை மொட்டுகள் குறிப்பான மென்மையான சுவையை வெளிப்படுத்துகிறது. தவிர சமையல் பயன்பாடான தனிச் சுவை மற்றும் சிட்ரஸ்யின் நறுமணத்திற்கான அதன் பயன்பாடு தவிர , எலுமிட்சை ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருந்துகளில் பலவிதமான பயன்பாடுகளாக பயன்படுகிறது. எலுமிச்சை சாறு பாரம்பரியமாக உடல் எடை இழப்பு மற்றும் நட்சுதன்மை நிக்கும் நன்மைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மிகச்சிறந்த சத்துகளாக கருதப்படும் வைட்டமின் சி அதிகம் கொண்ட சிட்ரஸ் குடும்பத்தை சார்ந்தது , இது வயதான தோற்றத்திற்க்கு எதிராகவும் மற்றும் நோய் எதிர்ப்பு பண்பை ஒருங்கே கொண்டது.
எலுமிச்சை மரம் 6 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு பசுமையான மரமாகும். எலுமிச்சை கிளைகள் பரவளக அதன் கிளைகளை கொண்டது மெலும் சிறு முட்களைக் கொண்டுள்ளன. புதிய எலுமிச்சை இலைகள் பொதுவாக ஆரம்பத்தில் இளங்ச்சிவப்பு நிறத்தில் உள்ளன, அவை மாற்று பாணியில் எலுமிச்சை கிளைகளாக வளரும். முதிர்ச்சியுற்ற நிலையில், இதன் இலைகள் ஒரு பக்கத்தில் அடர் பச்சை நிறமாகவும், மறுபுறத்தில் இளம்பச்சை நிறமுமாக மாறும். எலுமிச்சை பூக்கள் வலுவான நறுமணத்துடன் வெள்ளை நிறத்தில் இருக்கும், அவை தனியாகவோ அல்லது எலுமிச்சை மரங்களின் கிளைகள் மீது கொத்தாகவோ வழருகின்றன. எலுமிச்சம் பழம் இளமையீல் அடர் பட்சை நிறமாகவும் முதிர்ச்சியடைந்த நிலையில் அடர் மஞ்சள் நிறமாகவும் மாறிவருகிறது.
உங்களுக்கு தெரியுமா?
எலுமிச்சை என்று, இன்று நாம் அறியப்படும் பழம், இது உண்மையில் மான்டரின் மற்றும் சிட்ரான் போன்ற காட்டு சிட்ரஸ் பாழங்களின் கலப்பினால் வந்தவை ஆகும். 1493 ஆம் ஆண்டில் தனது பயணத்தின்போது எலுமிச்சை விதைகள் எடுத்துக் கொண்ட கிறிஸ்டோபர் கொலம்பஸால் என்பவரால் இது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எலுமிச்சை பற்றி சில அடிப்படை உண்மைகள்
- தாவரவியல் பெயர்: சிட்ரஸ் லெமன் (எலுமிச்சை)
- குடும்பம்: ரூட்டாகாய் (Rutaceae)
- பொதுப் பெயர்கள்: எலுமிச்சை(லெமன்) நிம்பு
- சமஸ்கிருத பெயர்:நிம்புக
- பயன்படுத்தப்படும் பகுதிகள்: முழுப்பழம்
- பிறப்பிடம் மற்றும் புவியியல் விநியோக பயன்பாடு : எலுமிச்சை இந்தியாவின் பிறப்பிடமாக நம்பப்படுகிறது, ஆனால் இது மெக்ஸிகோ, மொராக்கோ, ஜப்பான், கிரீஸ், அல்ஜீரியா, ஆப்பிரிக்கா, எகிப்து போன்ற நாடுகளில் பரவலாக பயிரிடப்படுகிறது.
- ஆற்றலியல்:குளிர்ச்சி(கூலிங்)