டெஸ்டோஸ்டிரோன் ஒரு ஸ்டெராய்டு ஹார்மோன் ஆகும்.அது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, பாலுறவு செல்களை அமைப்பதற்கான பொறுப்பை உடைய பாலுறவு உறுப்புகளான பாலின சுரப்பிகள் மூலம், அதில் இருந்து உற்பத்தியாகி விடுவிக்கப்படுகிறது. ஆண்களுக்கு விரைகளும்(இனப்பெருக்கதுக்காக விந்து அணுக்களை உற்பத்தி செய்யும் உறுப்பு),பெண்களுக்கு கருப்பையும்(இனப்பெருக்க அமைப்பின் கரு முட்டை உற்பத்தி செய்யும் உறுப்பு), டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்யும் முக்கிய உறுப்புகள் ஆகும். இந்த உறுப்புகள், பிட்யூட்டரி ஹார்மோன்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.
டெஸ்டோஸ்டிரோன் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது, முகத்தில் முடி வளருதல், குறைந்த தொனியிலான குரல், அதிகரித்த தசை நிறை, இன்ன பிறவற்றை உள்ளடக்கிய ஆண்களின் பண்புத்தன்மைகள் பையன்களுக்கு ஏற்படுவதில், ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. பல்வேறு ஆய்வுகள் மற்றும் அவற்றின் மதிப்பீடுகளின் குறிப்புகள், அது, உடல் வலிமை, உடலில் நல்ல கொழுப்பு அளவுகளைப் பராமரித்தல், எலும்புகளின் வளர்ச்சி, மூளை-திறன்கள், வீரியத்தை அதிகரித்தல், விறைப்புத்தன்மை, கொழுப்பு படிமானத்தைக் குறைத்தல், உணர்ச்சியை அதிகரித்தல், மற்றும் இன்சுலின் ஹார்மோனுக்கான உடலின் உணர்திறனை அதிகரித்தல் போன்ற, உயிர் வாழ அவசியமான வளர்ச்சிகளுக்கும் கூட முக்கியமானது எனத் தெரிவிக்கின்றன.
டெஸ்டோஸ்டிரோன் அளவுகளில் ஒரு குறைவு ஏற்படுவது வழக்கமாக, ஆண்களுக்கு 40 வயதுக்கு மேலும் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்றலுக்குப் (பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிரந்தரமாக நின்று போதல்) பிறகும் காணப்படுகிறது. வேறு டெஸ்டோஸ்டிரோன் குறைவு பிரச்சினைகளில், விரைகளின் செயலிழப்பு, காயமடைந்த விரைகள், உடல்பருமன், மனஅழுத்தம், உடலில் அதிக கொழுப்பு, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, எச்.ஐ.வி-எய்ட்ஸ், பிட்யூட்டரி சுரப்பி கோளாறுகள், இன்ன பிறவும் அடங்கும். இது, முதுமை அடையும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையே கவலை அளிக்கக் கூடிய ஒரு ஆரோக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. ஏனென்றால் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறைவாக இருப்பது, ஏராளமான உடலியல் செயல்பாடுகளைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது.
குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகளுக்கு சிகிச்சை பெற, எப்போதும் நீங்கள் ஒரு மருத்துவரை ஆலோசிப்பது அவசியமானது என்றாலும், உங்கள் உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்க, பின்வரும் விஷயங்களில் சிலவற்றையும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். டெஸ்டோஸ்டிரோன் பெண்களுக்கு, பாலுறவு விருப்பம், எலும்பு ஆரோக்கியம், மனநிலை, மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது.