இஞ்சி செடி, ஜிஞ்சிபிராசியயி குடும்பத்தை சார்ந்த, மஞ்சளைப் போன்று மருத்துவ அற்புதங்களைக் கொண்ட ஒரு தாவரம் ஆகும். அது, உலகம் முழுவதும் உள்ள எந்த ஒரு சமயலறையிலும் காணப்படுகின்ற, முக்கியமான மசாலாப் பொருட்களில் ஒன்றாக இருக்கிறது. சொல்லப் போனால், ஏராளமான பிரபல சமையல் தயாரிப்பு முறைகளில், அதன் காரமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சுவைக்காக, இஞ்சி ஒரு முக்கிய உட்பொருளாக இருக்கிறது. ஆனால், இந்த சுவையூட்டும் பொருளின் திறன் சமையலறையுடன் மட்டும் முடிந்து விடுவது இல்லை.
பல ஆயிரம் ஆண்டுகளாக இஞ்சி, ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவத்தில், ஒரு குணமளிக்கும் காரணியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது, குமட்டல், வாந்தி, வாயு, மற்றும் வயிற்றுப் பொருமல் ஆகியவற்றைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகைகளில் ஒன்றாக இருக்கிறது. இஞ்சி தேநீர், உடலில் ஏற்படுத்தும் அதன் வெப்பமூட்டும், மற்றும் கிளர்ச்சியூட்டும் விளைவுகளுக்காக, அநேகமாக இந்தியாவில் அருந்தப்படும் மிகவும் பொதுவான பானமாக இருக்கிறது. வீழ்ச்சிப் பருவத்தில், கிறிஸ்துமஸ் விழாவில் சுவைக்கப்படும் பெரும்பாலான இனிப்புகள், மற்றும் அலங்காரங்களுக்கு, இஞ்சி மிட்டாய்கள் மற்றும் அலங்காரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இஞ்சி என்ற பெயர், அநேகமாக இஞ்சி வேர்களின் அமைப்பைப் விளக்குகின்ற வகையில் "ஊதுகுழல் இசைக்கருவி வேர்" என்ற பொருள்படும்படியான ஸ்ரங்கவெரும் என்ற சம்ஸ்கிருத வார்த்தையில் இருந்து வந்ததாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
இஞ்சி விழுது எனப் பிரபலமாக அறியப்படும் இஞ்சி, உண்மையில் ஒரு வேர்த்தண்டு அல்லது ஒரு திருத்தப்பட்ட தண்டு ஆகும். 14 ஆம் நூற்றாண்டில் ஒரு பவுண்டு இஞ்சியின் மதிப்பு, ஒரு செம்மறி ஆட்டின் மதிப்புக்கு சமமாகக் கருதப்பட்டது என்பதை அறிந்தால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இன்றைய தேதியிலும், இஞ்சி அதன் மருத்துவ மற்றும் சமையல் பயன்களுக்களாக, ஒரு விலை உயர்ந்த பொருளாக நீடிக்கிறது.
இஞ்சியைப் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:
- தாவரவியல் பெயர்: ஜிஞ்சிஃபெர் ஆஃபிசினலே
- குடும்பம்: ஜிஞ்சிபிராசியயி
- பொதுவான பெயர்கள்: இஞ்சி, மெய் இஞ்சி, அட்ராக்
- சமஸ்கிருதப் பெயர்: அட்ராகா
- பயன்படும் பாகங்கள்: தண்டு
- சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்:
- இஞ்சி, ஆசியாவின் வெப்ப மண்டல பகுதிகளை சேர்ந்தது. அது, இந்தியா, ஆப்பிரிக்கா, மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
- ஆற்றலியல்: வெப்பமூட்டுதல்
- இஞ்சியின் ஊட்டச்சத்து விவரங்கள் - Ginger nutrition facts in Tamil
-
இஞ்சியின் ஆரோக்கியம் அளிக்கும் நன்மைகள் - Ginger health benefits in Tamil
- நீரிழிவுக்காக இஞ்சி - Ginger for diabetes in Tamil
- வயிற்றுக்கான இஞ்சியின் நன்மைகள் - Ginger benefits for stomach in Tamil
- இருமல் மற்றும் ஜலதோஷத்துக்காக இஞ்சி - Ginger for cough and cold in Tamil
- பெண்களுக்கான இஞ்சியின் நன்மைகள் - Ginger benefits for women in Tamil
- முடிகள் மற்றும் சருமத்துக்கான இஞ்சியின் நன்மைகள் - Ginger benefits for hair and skin in Tamil
- ஆண்களுக்கான இஞ்சியின் நன்மைகள் - Ginger benefits for men in Tamil
- உயர் இரத்த அழுத்தத்துக்காக இஞ்சி - Ginger for high blood pressure in Tamil
- கொழுப்பு அளவுக்காக இஞ்சி - Ginger for cholesterol in Tamil
- இஞ்சியின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் - Ginger antioxidant properties in Tamil
- எடைக் குறைப்புக்காக இஞ்சி - Ginger for weight loss in Tamil
- மூட்டழற்சிக்காக இஞ்சி - Ginger for arthritis in Tamil
- இரத்தம் கட்டியாவதை இஞ்சி குறைக்கிறது - Ginger reduces blood clotting in Tamil
- ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பியாக இஞ்சி - Ginger as an antimicrobial in Tamil
- கீமோதெரபியின் காரணமாக ஏற்படும் குமட்டலுக்காக இஞ்சி - Ginger for chemotherapy induced nausea in Tamil
- அறுவை சிகிச்சைக்குப் பிறகான குமட்டலுக்காக இஞ்சி - Ginger for post-operative nausea in Tamil
- பயண சுகவீனத்துக்காக இஞ்சி - Ginger for motion sickness in Tamil
- காலை நேர சுகவீனத்துக்காக இஞ்சி - Ginger for morning sickness in Tamil
- இஞ்சியை எவ்வாறு பயன்படுத்துவது - How to use ginger in Tamil
- ஒரு நாளுக்கு எவ்வளவு இஞ்சி எடுத்துக் கொள்ளலாம் - How much ginger can be taken per day in Tamil
- இஞ்சியின் பக்க விளைவுகள் - Ginger side effects in Tamil
இஞ்சியின் ஊட்டச்சத்து விவரங்கள் - Ginger nutrition facts in Tamil
100 கி இஞ்சியில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு விவரங்கள் பின்வருமாறு:
விவரங்கள் | அளவு |
தண்ணீர் | 78.9 கி |
கார்போஹைட்ரேட்கள் | 17.7 கி |
நார்ச்சத்து | 2 கி |
புரதச்சத்து | 1.8 கி |
கொழுப்புகள் | 0.75 கி |
கால்சியம் | 16 மி.கி |
மெக்னீஷியம் | 43 மி.கி |
பொட்டாசியம் | 415 மி.கி |
வைட்டமின் சி | 5 மி.கி |
ஆற்றல்: 80 கலோரிகள்
இஞ்சியின் ஆரோக்கியம் அளிக்கும் நன்மைகள் - Ginger health benefits in Tamil
இஞ்சி, கிட்டத்தட்ட உடலின் முக்கியமானஅனைத்து செயல்பாடுகளுக்குமான மருத்துவ குணம் கொண்ட, ஒரு உயர்ந்த உணவாக இருக்கிறது. இந்த ஆயுர்வேத அற்புதத்தின் அனைத்து மருத்துவ நன்மைகளையும், ஒரே நேரத்தில் கணக்கிடுவது மிகவும் கடினமானது ஆகும்.
இஞ்சி, ஒரு வாந்தி அடக்கி (குமட்டல் மற்றும் வாந்தியை நிறுத்துகிறது), இருமல் அடக்கி (இருமலைக் அடக்குகிறது), அழற்சி எதிர்ப்பான், நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் ஒரு அருமையான ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி ஆகும். மேலும், அதன் சர்க்கரைக்குறைப்பு (இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது), மற்றும் கொழுப்புக்குறைப்பு (கொழுப்பு அளவுகளைக் குறைக்கிறது) விளைவுகள், இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க மிகவும் நன்மை அளிக்கின்றதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் மிகவும் விரிவான விவரங்களுக்குள் போகாமல், இஞ்சி விழுதின் நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலான ஆரோக்கிய நன்மைகளை, நாம் காணலாம்.
- குமட்டலைக் குறைக்கிறது: இஞ்சி, குமட்டல் மற்றும் வாந்தியை நிறுத்துவதற்கான சிறந்த நிவாரணிகளில் ஒன்றாகும். அது, கர்ப்ப காலத்தில், மற்றும் பயண சுகவீனத்தினால் ஏற்படும் குமட்டலைக் குறைப்பது மட்டும் அல்லாமல், கூடவே அறுவை சிகிச்சைக்குப் பின்னர், மற்றும் கீமோதெரபியின் காரணமாக ஏற்படும் குமட்டலையும் குறைப்பதில், திறன்மிக்கதாக இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
- எடையைக் குறைக்க உதவுகிறது: இஞ்சி, உடல் எடையைக் குறைப்பதில் திறன்மிக்கதாகப் பாரம்பரியமாக அறியப்படுகிறது. இந்த மூலிகையானது, பசியுணர்வைக் கடிவாளமிட்டுக் கட்டுப்படுத்துவது, கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் குறுக்கிடுவது, மற்றும் உடல் வெப்பத்தை அதிகரிப்பது ஆகிய செயல்களின் மூலம், உடல் எடைக் குறைப்பை ஊக்குவிக்கிறது என இப்பொழுது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
- இருமல் மற்றும் ஜலதோஷத்துக்கு: இஞ்சி, காய்ச்சல் மற்றும் ஜலதோசத்தைக் குறைக்கக் காரணமாகுமாறு, உடலில் உள்ள பித்தத்தை அதிகரிக்கிறது. மேலும் அது, இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ள ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவையும், மற்றும் செயல்திறன் மிக்க தொகுதிகளையும் கொண்டிருக்கிறது.
- செரிமான சக்தியை அதிகரிக்கிறது: இஞ்சி, செரிமான சக்தியையும், மற்றும் குடல்களில் இருந்து உணவைக் கிரகிப்பதையும் அதிகரிப்பதாக அறியப்படுகிறது. மேலும் அது வயிறு வீங்குதல் மற்றும் வயிற்று வாயுவையும் குறைக்கிறது
- பெண்களுக்கான நன்மைகள்: இஞ்சி, மாதவிடாய் தசைப்பிடிப்புகளுக்கு நன்கு அறியப்பட்ட ஒரு நிவாரணி ஆகும். மருத்துவ ஆய்வுகள், மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பிருந்து, மாதவிடாயின் முதல் 2 நாட்கள் முடிய, இஞ்சியை உட்கொள்வது, மாதவிடாய் வலியில் இருந்து விடுபட உதவுகிறது எனத் தெரிவிக்கின்றன. மேலும் அது, மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கையும் குறைக்கிறது.
- இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது: ஆயுர்வேத மருத்துவத்தில் இஞ்சி, ஒரு அழுத்தக் குறைப்பானாக (இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது) பயன்படுத்தப்படுகிறது. அது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிற வகையில், இரத்தக் குழாய் சுவர்களுக்கு ஒரு ஓய்வளிக்கும் விளைவைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.
நீரிழிவுக்காக இஞ்சி - Ginger for diabetes in Tamil
நீரிழிவு நோய் என்பது, உடல், தனது சர்க்கரைகளை முறையாக வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்த முடியாமல் போகின்ற நிலையில் ஏற்படுகின்ற, ஒரு ஹார்மோன் கோளாறு ஆகும். அது, முக்கியமாக ஒரு நபரின் உடலில் உள்ள இன்சுலின் அளவுகள் குறைவாக இருக்கும் பொழுது, அல்லது அதனால் இரத்த ஓட்டத்தில் இருந்து சர்க்கரையை முறையாக எடுக்க இயலாமல் இருப்பதன் காரணமாக ஏற்படுகிறது. ஏறத்தாழ அனைத்து ஆய்வக அடிப்படையிலான, மற்றும் மருத்துவ ஆய்வுகளும், ஒரு நீரிழிவு எதிர்ப்பு பொருளாக இஞ்சியின் திறனைப் பற்றித் தெரிவிக்கின்றன.
இரண்டு மாறுபட்ட மருத்துவ ஆய்வில், நீரிழிவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 12 வார காலத்துக்கு, ஒரு நாளுக்கு 2 கிராம்கள் அளவுக்கு இஞ்சிப் பொடியும், மற்றும் 10 வார கால அளவுக்கு 2000 மில்லி கிராம்கள் இஞ்சி பிற்சேர்க்கை பொருட்களும் கொடுக்கப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட கால அளவின் முடிவில், இரண்டு ஆய்வுகளும், இஞ்சி எடுத்துக் கொள்வது, உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது, அதன் மூலம், இரத்த சர்க்கரை அளவு குறைவதற்கு காரணமாகிறது என்ற முடிவுக்கு வந்தன.
ஆகவே, நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் இஞ்சி பயன்படுத்தப்படலாம் என்று தயக்கமின்றி கூற முடியும். இருப்பினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக, ஒரு ஆரோக்கியமளிக்கும் பிற்சேர்க்கை பொருளாக இஞ்சியை எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது எப்போதுமே மிகவும் நல்லது ஆகும்.
(மேலும் படிக்க: நீரிழிவு சிகிச்சை)
வயிற்றுக்கான இஞ்சியின் நன்மைகள் - Ginger benefits for stomach in Tamil
நாம் அனைவரும் அறிந்தவாறு, பல்வேறு செரிமானக் கோளாறுகளைப் போக்குவதற்கு பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகைகளில் இஞ்சியும் ஒன்றாகும்.
சொல்லப் போனால், பல்வேறு ஆய்வுகள் இஞ்சியின் வாந்தி எதிர்ப்புத் திறனை உறுதி செய்கின்றன. இஞ்சியில் உள்ள வேதியியல் மூலக்கூறுகள், செரிமான செயல்பாட்டினையும், வயிற்றில் உணவு கிரகிக்கப்படுவதையும் தூண்டுகின்றன.
மேலும், ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பியாக இஞ்சி விழுது, வயிற்றில் வாயு ஏற்படுதல் மற்றும் வயிறு வீங்குதல் போன்ற பிரச்சினைகளுக்குக் காரணமாகக் கூடிய, இரைப்பையில் இருக்கின்ற தீங்கு விளைவிக்கின்ற நுண்ணுயிரிகளைக் கொல்கின்றது.
இருமல் மற்றும் ஜலதோஷத்துக்காக இஞ்சி - Ginger for cough and cold in Tamil
இஞ்சி அல்லது இஞ்சி தேநீர், மிகவும் வழக்கமான இருமல் மற்றும் ஜலதோஷம் நிவாரணிகள் ஆகும். ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி, இஞ்சி பித்த தோஷத்தை அதிகரிக்கிறது. அதாவது, இஞ்சியை உட்கொள்வது, உடலில் வெப்பத்தினை அதிகரிக்கின்ற ஒரு விளைவைக் கொண்டிருக்கும் என்பதாகும். அதன் மூலம் காய்ச்சல் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. அதற்கும் மேலாக, இஞ்சியில் இருக்கின்ற ஜிஞ்ஜெரால் போன்ற பல்வேறு வேதியியல் மூலக்கூறுகளும், காய்ச்சல், வலி மற்றும் இருமலைக் குறைக்க உதவிகரமாக இருப்பதோடு, கூடவே அவை உடலில் ஒரு அமைதிப்படுத்தும் விளைவைக் கொண்டிருக்கின்றன.
இறுதியாக, இஞ்சியின் நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடானது, ஏதேனும் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் உடலில் இருந்தால், அவற்றை அழிப்பதில் உதவக் கூடும். ஆக, அடுத்த முறை நீங்கள் ஜலதோஷத்தினால் பாதிக்கப்படும் பொழுது, எதைத் தேட வேண்டும் என உங்களுக்கே தெரியும்.
பெண்களுக்கான இஞ்சியின் நன்மைகள் - Ginger benefits for women in Tamil
மாதவிடாய் கால தசைப்பிடிப்புகள் (மாதவிலக்கு தசைப்பிடிப்புகள்) மற்றும் அதிகப்படியான இரத்தப்போக்கு ஆகிய இரண்டும், பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும், மிகவும் நிலையான காரணங்கள் ஆகும். பல்வேறு வித மாதவிடாய் பிரசினைகளைப் போக்குவதற்கு, மூலிகை அடிப்படையிலான பல்வேறு நிவாரணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இஞ்சியும் அவை போன்ற, தசைப்பிடிப்புகள் மற்றும் அதிகப்படியான இரத்தப்போக்கு போன்ற மாதவிடாய் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும், ஒரு வீட்டு நிவாரணி ஆகும்.
மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னர் இருந்து, மாதவிடாயின் முதல் 2 நாட்கள் வரை இஞ்சி எடுத்துக் கொள்வது, மாதவிடாய் கால தசைப்பிடிப்புகளைக் குறைக்க மிகவும் உதவிகரமாக இருக்கக் கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஈரானில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவப் பரிசோதனையில், மாதவிடாய் கால தசைப்பிடிப்புகள் உள்ள பெண்களுக்கு, மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பிலிருந்து 5 நாட்களுக்கு, தினமும் மூன்று முறை இஞ்சி மாத்திரைகள் (500 மி.கி) கொடுக்கப்பட்டன. அந்த ஆய்வு, இஞ்சி, மாதவிடாய் வலிகளைக் குறைப்பதில் மிகவும் திறன் வாய்ந்தது எனத் தெரிவித்தது.
இறுதியாக, ஒரு சமீபத்திய ஆய்வு, இஞ்சி மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது, மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கினை குறைக்கிறது என்று கூறுகிறது.
.மேலே கூறப்பட்ட ஆய்வுகள், பல்வேறு மாதவிடாய் அசௌகரியங்களுக்கு எதிராக இஞ்சி விழுதின் செயல்திறனை உறுதி செய்கின்றன.
முடிகள் மற்றும் சருமத்துக்கான இஞ்சியின் நன்மைகள் - Ginger benefits for hair and skin in Tamil
இஞ்சி, அதன் முடி வளர்ச்சியை அதிகரிக்கும், மற்றும் பல்வேறு முடி மற்றும் சருமம் தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்கும் நன்மைகளுக்காகப் பரவலாக அறியப்பட்ட ஒன்றாகும். முடிகள் மற்றும் சருமத்தின் மீதான விளைவுகளைப் பற்றிய அறிவியல்ரீதியான ஆய்வுகள் அதிகமாக இல்லாத வேளையில், இஞ்சி ஒரு மிகச் சிறந்த நுண்ணுயிர் எதிர்ப்பு, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புக் காரணி எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மூன்று பண்புகளும் சேர்ந்து, முடி உதிர்வைக் குறைப்பது, சரும நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தடுப்பது, செதில் செதிலான மற்றும் அரிப்பையுடைய உச்சந்தலை போன்ற பிரச்சினைகளைப் போக்குவது, ஆகியவற்றில் உதவிகரமாக இருக்கக் கூடும்.
அதனால், இஞ்சி உங்களுக்கு நீளமான முடிகளை வழங்குவது மட்டும் அல்லாமல், கூடவே அது, உங்களுக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தையும் வழங்கக் கூடியது ஆகும். அதற்கும் மேலாக, இஞ்சி, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற, முடி தண்டுகளுக்கு ஊட்டமளிக்கக் கூடிய, சில தாதுக்களைக் கொண்டிருக்கிறது. இருந்தாலும், ஒரு முடி உதிர்வு எதிர்ப்புத் தாவரமாக இஞ்சியின் பிரபலமான பயன்பாட்டுடன் முரண்படுகின்ற, ஒற்றை-ஆய்வக அடிப்படையிலான ஆதாரம் ஒன்று உள்ளது. இந்த ஆய்வின் படி, இஞ்சியில் உள்ள 6-ஜிஞ்ஜெரால், முடி வேர்க்கால்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இந்த முரண்பட்ட ஆதாரங்களின் காரணமாக, முடி அல்லது சருமத்தின் மீதான இஞ்சியின் விளைவுகளை பற்றி மேலும் அறிந்து கொள்ள, ஒரு மருத்துவரிடம் கலந்தாலோசனை செய்வது மிகவும் நல்லது ஆகும்.
ஆண்களுக்கான இஞ்சியின் நன்மைகள் - Ginger benefits for men in Tamil
ஆண்களின் கருவுறு தன்மைக்கான இஞ்சியின் நன்மைகள் என வரும் பொழுது, ஏராளமான முரண்பாடான ஆதாரங்கள் இருக்கின்றன. விவோ ஆய்வுகள், இஞ்சி உட்கொள்வது, விந்தணுக்களின் நகரும் தன்மையைத் தூண்டுகிறது, டெஸ்டோஸ்டெரோன் அளவுகள் மற்றும் விந்தணுக்களின் நகர்வை அதிகரிக்கிறது எனக் கூறும் அதே வேளையில், ஒரு விட்ரோ ஆய்வானது, ஆண்களின் இனப்பெருக்க அமைப்பின் செயல்பாட்டின் மீதான இஞ்சியின் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் விளைவுகளைக் குறிப்பிடுகிறது.
விந்தணுவில் உள்ள டி.என்.ஏ -க்கள் சிதைவுறுதல், ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மைக்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. அது, பெண்களின் பிரச்சினையான கருக்கலைவு மற்றும் கருத்தரித்தலில் சிக்கல்கள் போன்றவற்றோடு தொடர்புடையதாக இருந்திருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க மிகவும் திறன் வாய்ந்த முறையைக் கண்டறிய, ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதுவரை சரியான மருத்துவரீதியான சிகிச்சை கண்டறியப்படவில்லை. இஞ்சி ஒரு வலிமையான ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி ஆகும், இதன் அர்த்தம், இஞ்சி டி.என். ஏ அடிப்படையிலான சேதத்தைக் குறைக்க உதவிகரமாக இருக்கும் என்பதாகும்.
ஒரு சமீபத்திய மருத்துவ ஆய்வில், கருத்தரித்தல் தொடர்பான பிரச்சினைகளைக் கொண்ட 100 ஆண்களுக்கு, 3 மாத கால அளவுக்கு, ஒரு நாளுக்கு இரண்டு முறை, 250 கிராம் அளவு இஞ்சி கொடுக்கப்பட்டது. ஆய்வுக் கால முடிவில், இஞ்சி, டி.என்.ஏ சிதைவுறுதலின் மீது சில விளைவுகளைக் கொண்டிருப்பது கண்டறிப்பட்டது .
இருந்தாலும் நீங்கள், இஞ்சியை கருத்தரிப்புக்கான ஒரு பிற்சேர்க்கைப் பொருளாக எடுத்துக் கொள்ள விரும்பினால், முதலில் உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் பேசுவது மிகவும் நல்லது ஆகும்.
உயர் இரத்த அழுத்தத்துக்காக இஞ்சி - Ginger for high blood pressure in Tamil
இஞ்சி, உயர் இரத்த அழுத்தம் பிரச்சினைக்கான, நன்கு அறியப்பட்ட ஆயுர்வேத நிவாரணிகளில் ஒன்றாகும்.
ஒரு சமீபத்திய மருத்துவ ஆய்வில், உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்ட 60 நபர்களைக் கொண்ட ஒரு குழுவுக்கு, உடல் எடையின் கிலோவைப் பொறுத்து, ஒவ்வொருவருக்கும் 100 மி.கி மற்றும் 50 மி.கி அளவுகளில் இஞ்சி விழுது வழங்கப்பட்டது. அனைவரின் இரத்த அழுத்தமும் முறையான இடைவெளிகளில் பரிசோதிக்கப்பட்டன. அதில், இஞ்சி விழுது எடுத்துக் கொள்வது, 4 மணி நேரங்களுக்குப் பிறகு சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தில் ஒரு குறைவுக்கு வழிவகுக்கிறது எனக் கண்டறியப்பட்டது.
60 உயர் இரத்த அழுத்த நோயாளிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு அடுத்த கட்ட ஆய்வு, சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் இஞ்சியின் விளைவுகளை உறுதி செய்கிறது. ஒரு விவோ ஆய்வின் படி இஞ்சி, இரத்தக் குழாய் சுவர்களுக்கு ஒரு தளர்வைக் கொடுத்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்ற வகையில், நமது உடலில் உள்ள கால்சியம் பாதைகளில் செயல் புரிவதன் மூலம், இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
மேற்கண்ட ஆய்வுகளின் மூலம், இஞ்சி உயர் இரத்த அழுத்த எதிர்ப்புக்கான உணவு பிற்சேர்க்கை பொருளாக உதவிகரமாக இருக்கலாம் என்று உறுதி கூற முடியும்.
கொழுப்பு அளவுக்காக இஞ்சி - Ginger for cholesterol in Tamil
விவோ ஆய்வுகள், இஞ்சி, தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளின் அளவுகளைக் குறைப்பதன் மூலம், உடலில் உள்ள கொழுப்பு அளவுகளைப் பராமரிப்பதில் உதவிகரமாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கின்றன.
இரத்த உயர் கொழுப்பு பிரச்சினை(அதிகக் கொழுப்பு) உள்ள 40 நபர்களை உள்ளடக்கிய ஒரு மருத்துவ ஆய்வு, ஒரு நாளுக்கு மூன்று முறை 1கி அளவு இஞ்சி உட்கொள்வது, உடலில் உள்ள ட்ரைகிளிசரைட் கொழுப்புகள் மற்றும் குறை அடர்த்திக் (கெட்ட) கொழுப்புக்களின் அளவுகளைக் குறைக்க வழிவகுக்கிறது என அறிவித்தது.
அதற்கும் மேலாக, இஞ்சியின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள், உடலில் கொழுப்பு ஆக்சிஜனேற்றம் ஏற்படுவதைத் தடை செய்கிறது. அதன் மூலம் தமனித்தடிப்பு (இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிதல்) ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. இந்தப் பண்புகள் இணைந்து, இதய செயலிழப்பு மற்றும் மாரடைப்பு போன்ற இதய சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன.
(மேலும் படிக்க: உயர் கொழுப்பு தடுப்பு நடவடிக்கை)
இஞ்சியின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் - Ginger antioxidant properties in Tamil
இஞ்சியின் வேர்த்தண்டு (இஞ்சித் தண்டு) பல்வேறு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு மூலக்கூறுகளால் நிரம்பியிருக்கிறது என அறியப்படுகிறது. விலங்குகள் மீது நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள், இஞ்சி ஒரு மிகச் சிறந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு காரணி எனக் கூறுகிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, இஞ்சியில் உள்ள பாலிஃபெனோல்கள், வைட்டமின் சி, ஃபுளோவோனாய்டுகள், மற்றும் டானின்கள் ஆகியவை, அதன் ஆக்சிஜனேற்ற பண்புகளுக்கு முக்கியமான காரணமாக இருக்கின்றன எனத் தெரிவிக்கிறது. ஒரு தனிப்பட்ட ஆய்வு, இஞ்சியில் உள்ள 6-ஷோகயோல் மிகவும் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி எனக் கூறுகிறது.
43 புற்றுநோய் நோயாளிகளிடையே நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், இஞ்சி உட்கொள்வது, உடலில் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிப்பதுடன், கூடவே சி.ஐ.என்.வி -க்களையும் குறைக்கிறது எனக் கண்டறியப்பட்டது. இருந்தாலும், ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிக்களாக இஞ்சி பிற்சேர்க்கை பொருட்களை எடுத்துக் கொள்வதில் உள்ள பாதுகாப்பினை உறுதி செய்ய, மேலும் உறுதியான ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.
எடைக் குறைப்புக்காக இஞ்சி - Ginger for weight loss in Tamil
இஞ்சி மற்றும் இஞ்சித் தண்ணீர், உடல் எடைக் குறைப்புக்கான மிகவும் பொதுவான வீட்டு நிவாணிகளில் ஒன்று ஆகும். விவோ (விலங்குகள் அடிப்படையிலானது) ஆய்வுகள், இஞ்சியை வாய்வழி எடுத்துக் கொள்வது, உடல் எடையை, மற்றும் உடலில் உள்ள கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது எனத் தெரிவிக்கிறது.
ஒரு சமீபத்திய பைலட் ஆய்வு, இஞ்சி உட்கொள்வது உடலின் வெப்பத்தை அதிகரித்து, பசியுணர்வைக் குறைப்பதன் மூலம், ஒட்டுமொத்த உடல் எடையைக் குறைக்க வழிவகுக்கிறது என்று குறிப்பிடுகிறது.
உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மீதான திறனாய்வுகள் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, 14 ஆர்.சி.டி -க்கள், ஒரு எடைக் குறைப்பு காரணியாக இஞ்சியின் செயல்திறனை உறுதி செய்கின்றன. மெட்டா பகுப்பாய்வு, இஞ்சி உட்கொள்வது உடல் நிறையைக் குறைக்கக் காரணமாவது மட்டும் அல்லாமல், கூடவே இடுப்பு மற்றும் இடையின் சுற்றளவைக் குறைக்கவும் வழிவகுக்கின்றது எனத் தெரிவிக்கிறது.
உடல் பருமன் எதிர்ப்பு பற்றிய விரிவான ஆராய்ச்சி இருந்த போதிலும், இஞ்சியின் சரியான எடைக்குறைப்பு செயல்முறை கண்டறியப்படவில்லை. ஒரு சமீபத்திய ஆய்வு, இஞ்சி, கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் குறுக்கிடுதல், உடல் வெப்பத்தை அதிகரித்தல் அல்லது பசியுணர்வைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் எடையைக் குறைக்க உதவுகிறது என சுட்டிக் காட்டுகிறது.
(மேலும் படிக்க: உடல் பருமன் சிகிச்சை)
மூட்டழற்சிக்காக இஞ்சி - Ginger for arthritis in Tamil
நீண்ட காலமாக இஞ்சி, அழற்சிக்கான ஒரு பாரம்பரிய நிவாரணியாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆயுர்வேதத்தில், அது ஒரு பத்தியமாக (ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கின்ற உணவுசார் மூலிகைகள்) அறியப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவம், குறிப்பாக இஞ்சியின் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு செயல்களுக்காக, அதனைப் புகழ்கிறது. இஞ்சியின் பாரம்பரியமான பிரபலம், முடக்குவாத மூட்டழற்சி மற்றும் கீல்வாதம் போன்ற அழற்சி கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இஞ்சியின் செயல்படுமுறை, மற்றும் பயன்களை ஆராய்வதற்கான ஆய்வுகளின் ஒரு அணிவகுப்புக்கு வழிவகுத்து இருக்கிறது.
ஒரு சிறிய மருத்துவ ஆய்வு, இஞ்சி, உடலில் ஒரு அழற்சி விளைவை ஏற்படுத்துகின்ற பொறுப்பை உடைய இரண்டு இயற்கை நொதிகளான, சைக்குளூக்ஸ்ஜெனெஸ் மற்றும் 5-லிப்சாக்சிஜெனெஸ் ஆகியவற்றின் செயல்பாட்டைத் தடுக்கிறது எனத் தெரிவித்தது.
உணவுத் தொழில்நுட்பம் மற்றும் ஊட்டச்சத்து அறிவியலில் முன்னேற்றங்கள் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, இஞ்சி நமது உடலில் உள்ள அழற்சி எதிர்ப்பு மூலக்கூறுகளின் (சைட்டோகைன்கள் மற்றும் டி-எச்-2 செல்கள்) செயற்பாட்டைத் தூண்டவும் செய்கிறது. இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு விளைவானது, இண்டோமெதாஸின் (ஒரு ஸ்டெராய்டு இல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து) செயல்பாட்டை விட, மிக அதிகத் திறன்மிக்கது என்றும் அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதற்கும் மேல், இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு செயல்பாடுகள், ஜிஞ்ஜெரால் மற்றும் ஷோகயோல் போன்ற, பல்வேறு உயிரிவேதிப் பொருட்களோடு தொடர்புடையதாக இருக்கின்றன.
இருந்தாலும், இன்னமும் கூட, மனிதர்களுக்கு ஏற்படும் அழற்சி நோய்களுக்காக இஞ்சி எடுத்துக் கொள்ளும் அளவு, மற்றும் அதன் பாதுகாப்பினை உறுதி செய்ய, மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
(மேலும் படிக்க: மூட்டழற்சி சிகிச்சை)
இரத்தம் கட்டியாவதை இஞ்சி குறைக்கிறது - Ginger reduces blood clotting in Tamil
விட்ரோ மற்றும் விவோ (விலங்குகள் அடிப்படையிலானவை) ஆய்வுகள், இஞ்சி. புரோத்ரோம்பின் நேரத்தை (ஒரு இரத்த-உறைவுக் கட்டியை ஏற்படுத்த உடலினால் எடுத்துக் கொள்ளப்படும் நேரம்) அதிகரிப்பதன் மூலமாக, ஒரு திடமான இரத்த உறைவெதிர்ப்பு செயல்பாட்டை வழங்குகிறது என்று தெரிவிக்கின்றன. அடுத்த கட்ட ஆய்வுகள், இஞ்சி சாறுகள், காயம் பட்ட இடத்தில் இரத்தக் குழாய்களை சுருக்கி, இரத்த உறைவை ஆரம்பிக்க உதவுகின்ற ஒரு ஹார்மோனான த்ரோம்பாக்ஸேன் உருவாவதைத் தடுப்பதன் மூலம், கட்டி உருவாவதைத் தடுக்கின்றன என சுட்டுக்காட்டுகின்றன.
ஒரு சமீபத்திய ஆய்வு, இஞ்சியில் உள்ள, இந்தத் தாவரத்தின் உறைவெதிர்ப்பு செயல்களுக்குப் பொறுப்பான [6]- ஜின்ஜெரால் மற்றும் [6]-ஷோகயோல் ஆகியவை, உயிரியல் ரீதியில் துடிப்பான இரண்டு மூலக்கூறுகள் என சுட்டிக் காட்டுகிறது.
ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பியாக இஞ்சி - Ginger as an antimicrobial in Tamil
பல்வேறு நுண்ணுயிர் நோய்க்கிருமிகளுக்கு எதிரான இஞ்சி சாறு மற்றும் இஞ்சி பசையின் நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாட்டைப் பரிசோதிக்க, ஆய்வக-அடிப்படையிலான, விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அனைத்து விட்ரோ (ஆய்வக-அடிப்படையிலானவை) ஆய்வுகளும், ஒரு அருமையான நுண்ணுயிர் எதிர்ப்புக் காரணியாக இஞ்சியின் செயல்திறனை உறுதிப்படுத்துகின்றன. ஒரு சமீபத்திய ஆய்வு, இஞ்சியின் சாறு மற்றும் சோயா பீன்ஸ் எண்ணெய் இரண்டும் சேர்ந்து, எஸ்செரிச்சியா கோலி, விப்ரியோ சோலரி, சூடோமோனாஸ் அவுர்ஜீனோசா, மற்றும் ஸ்டாப்பிலோகாஸ் சப் போன்ற, வழக்கமான உணவில்-தோன்றும் நுண்ணுயிரிகளைக் கொள்வதில் பயன்மிக்கதாக இருக்கிறது எனத் தெரிவிக்கிறது.
மற்றொரு விட்ரோ ஆய்வு, இஞ்சியின் எத்தனால் சார்ந்த சாறுகள், பன்மருந்து-எதிர்ப்பு சக்தியைக் கொண்ட நுண்ணியிரியைக் கொல்வதில் மிகவும் திறன் வாய்ந்தவை எனத் தெரிவிக்கிறது. ஈகோலி ஓ.எச்57: எச்7 என்பது, மனிதர்களுக்கு இரத்த வயிற்றுப்போக்கு (இரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு) ஏற்படக் காரணமான ஒரு உணவில்-தோன்றும் நோய்க்கிருமி ஆகும். இது வரை, இந்த நோய்க்கிருமிக்கு எதிராகத் திறன்மிக்க சிகிச்சை எதுவுமில்லை.
இருப்பினும், ஒரு ஒப்பீட்டு ஆய்வு, புதிதான மற்றும் வியாபாரரீதியில் விற்பனை செய்யப்படும் இஞ்சி விழுது இரண்டுமே, ஈகோலி ஓ.எச்57: எச்7 கிருமியை அழிப்பதில் திறன்மிக்கதாக இருக்கின்றன என்று குறிப்பிடுகிறது. அதனால், வருங்காலத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சைகளில், இஞ்சி ஒரு நல்ல எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது.
கீமோதெரபியின் காரணமாக ஏற்படும் குமட்டலுக்காக இஞ்சி - Ginger for chemotherapy induced nausea in Tamil
குமட்டல் மற்றும் வாந்தி, அநேகமாக கீமோதெரபியின் மிகவும் வழக்கமான பக்கவிளைவுகளில் ஒன்றாக இருக்கின்றன. மருத்துவர்களின் கருத்துப் படி, கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் புற்றுநோய் பாதித்த நோயாளிகள், கடுமையான (கீமோதெரபியின் 2-3 மணி நேரத்துக்குள்), தாமதித்த (கீமோதெரபிக்குப் பிறகு மிகவும் தாமதமாக), மற்றும் எதிர்நோக்கும் (முன்பு கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்ட நோயாளிகளுக்கு) குமட்டல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்படுகின்றனர்.
கீமோதெரபி காரணமாக ஏற்படுகின்ற குமட்டல் மற்றும் வாந்திக்கு சசிகிச்சை அளிப்பதில் பயன்படுத்தப்படுகின்ற வாந்தி அடக்கும் மருந்துகள், மிகவும் வெற்றிகரமானதாகக் கண்டறியப்படவில்லை. தேவைப்படும் இந்த நேரத்தில், மருத்துவர்கள் மேலும் அதிக மூலிகை சார்ந்த வாந்தி அடக்கி மருந்துகளை நாடுகிறார்கள். 536 புற்றுநோய் நோயாளிகளிடையே நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய, மருத்துவ ஆய்வு, 0.5 முதல் 1 கிராம் வரை இஞ்சி விழுது எடுத்துக் கொள்வது, கீமோதெரபியின் காரணமாக ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியை (சி.ஐ.என்.வி) குறைக்க மிகவும் உதவிகரமாக இருக்கிறது என்று தெரிவிக்கிறது.
சி.ஐ.என்.வி மீதான இஞ்சி விழுதின் வாந்தி அடக்கி விளைவுகளை உறுதி செய்ய, பல்வேறு ஆர்.சி.டி -க்கள் (சீரற்ற மருத்துவப் பரிசோதனைகள்) மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அது போன்ற ஒரு ஆய்வு, சி.ஐ.என்.வி -யைத் தாமதப்படுத்துவதில் இஞ்சி, மெட்டோகுளோபிரமைட் (குமட்டல் மற்றும் வாந்திக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து) போன்று திறன்மிக்கதாக இருப்பதை வெளிப்படுத்தியது.
இருந்தாலும், கீமோதெரபி எடுத்துக் கொண்டிருக்கும் 36 நோயாளிகளிடையே நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய மருத்துவ ஆய்வு, இஞ்சி, சி.ஐ.என்.வி மீது எந்த விளைவையும் கொண்டிருக்கவில்லை என்று அறிவித்தது. முரண்பட்ட ஆதாரங்கள் இருப்பதன் காரணமாக, கீமோதெரபி எடுத்துக் கொண்டிருக்கும் நோயாளிகள், இஞ்சியை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகான குமட்டலுக்காக இஞ்சி - Ginger for post-operative nausea in Tamil
அறுவை சிகிச்சைக்குப் பிறகான குமட்டல் மற்றும் வாந்தி, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு ஏற்படும் பெரிய பிரச்சினைகளுள் ஒன்றாக நீடிக்கிறது. மயக்கவியல் நிபுணர்களின் கருத்துப் படி, அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தி, மயக்க மருந்தின் காரணமாக இருக்கக் கூடும், ஆனால் நோயாளியின் உடல் நிலையும் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.
குறைந்தபட்சம் மூன்று மாறுபட்ட மருத்துவ ஆய்வுகள், இஞ்சி விழுதுகளை உட்கொள்வது, அறுவை சிகிச்சைகளோடு இணைந்த குமட்டல் மற்றும் வாந்தியைக் குறைப்பதில் மிகவும் திறன்மிக்கது எனத தெரிவிக்கின்றன.
மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் மருத்துவத்துக்கான அமெரிக்க நாளேட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, 1 கிராம் அளவில் எடுத்துக் கொள்ளப்படும் இஞ்சி, அறுவை சிகிச்சைக்குப் பிறகான குமட்டலுக்கு மிகவும் திறன் வாய்ந்தது ஆகும். இருப்பினும், உங்களுக்கு சமீபத்தில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தால், எந்த ஒரு வடிவத்திலும் இஞ்சியை எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது ஆகும்.
பயண சுகவீனத்துக்காக இஞ்சி - Ginger for motion sickness in Tamil
பயண சுகவீனம் என்பது, எந்த ஒரு வகை பயணத்தின் (பஸ், ரயில், கார் அல்லது படகுகள்) காரணமாகவும் ஏற்படக் கூடிய குமட்டல், வாந்தி, மற்றும் குளிர் வியர்வை ஆகியவற்றைக் குறிக்கிறது. இஞ்சி, காலை நேர சுகவீனத்தோடு இணைந்த, குமட்டல் மற்றும் வாந்தியின் அறிகுறிகளில் இருந்து விடுபடப் பயன்படுத்தப்படும் முக்கிய நிவாரணிகளில் ஒன்றாகும்.
இஞ்சியின் வாந்தி அடக்கும் (குமட்டல் மற்றும் வாந்தியின் அறிகுறிகளைக் குறைத்தல்) விளைவுகள் பரவலாக ஆய்வு செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால், முரண்பாடுகள் இன்றி அந்த ஆய்வு முடிவுகள் இருந்தது கிடையாது. குமட்டல் மற்றும் வாந்தியைத் தவிர, மற்றபடி ஆரோக்கியமாக இருந்த 13 தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு மருத்துவ சோதனை, இஞ்சி, அவற்றைக் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது என்று தெரிவிக்கிறது. மற்றொரு மருத்துவ சோதனையில், இஞ்சி விழுது, தலைசுற்றலைக் குறைப்பதில் உதவிகரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இரண்டு பாலினத்திலும் 36 இளம் நபர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு முடிவில், இஞ்சி விழுது, டைமன்ஹைட்ரினேட்டை (குமட்டல் மற்றும் வாந்திக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வழக்கமான மருந்து) விட மிகவும் திறன்மிக்க ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு அடுத்தகட்ட ஆய்வு, இஞ்சி நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதில்லை, மற்றும் இஞ்சியின் வாந்தி அடக்கி விளைவுகள், இரைப்பை மீதான அதன் விளைவுகளோடு தொடர்புடையதாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கிறது.
இருந்தாலும், ஒரு சில ஆர்.சி.டி -க்கள் (சீரற்ற மருத்துவப் பரிசோதனைகள்), இஞ்சி, காலை நேர சுகவீனத்தின் எந்த ஒரு அறிகுறியின் மீதும், எந்த ஒரு விளைவையும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கிறது.
காலை நேர சுகவீனத்துக்காக இஞ்சி - Ginger for morning sickness in Tamil
காலை நேர சுகவீனம் என்பது, கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுகின்ற குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சினைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பதமாகும். காலை நேர சுகவீனத்தைக் குறைப்பதற்காக கிடைக்கின்ற வழக்கமான மருந்துகள், அவற்றின் சொந்தமான பக்க விளைவுகளின் இணைப்புகளோடு வருகின்றன. அதற்கும் மேல், பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள், கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சத்தில், எந்த வகை குமட்டல் எதிர்ப்பு மருந்துகளையும் எடுத்துக் கொள்வதில்லை.
மற்றொரு புறம் பார்க்கையில், அது போன்ற நிலைகளில் மூலிகை பொருட்கள் மிகவும் விரும்பத்தக்கவையாக இருக்கின்றன. அவை விரும்பி பயன்படுத்தப்படுவதற்கும், மற்றும் பரவலாக நன்கு அறியப்பட்டு இருப்பதற்கும் அவற்றின் செயல்திறன் மட்டும் அல்லாமல், கூடவே அவை, சில மருந்துகள் கொண்டிருக்கும் எந்த விதப் பக்கவிளைவுகளையும் கொண்டிருக்காததும் ஒரு காரணமாகும். இஞ்சி, குமட்டல் மற்றும் வாந்திக்கு நன்கு அறியப்பட்ட ஒரு நிவாரணி ஆகும்.
காலை நேர சுகவீனத்தின் அறிகுறிகளைக் குறைப்பதில் இஞ்சியின் திறனைப் பரிசோதிக்க, எண்ணற்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. வீட்டு மருத்துவத்துக்கான அமெரிக்க குழுவின் நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வுக்கு கட்டுரையின் படி, குறைந்தபட்சம் ஆறு மாறுபட்ட மருத்துவ ஆய்வுகள், கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் காலை நேர சுகவீன அறிகுறிகளின் கடுமையைக் குறைப்பதில் இஞ்சி உதவிகரமாக இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன. இருப்பினும், அது செயல்படும் சரியான செயல்பாட்டு முறை இதுவரை கண்டறியப்படவில்லை.
இஞ்சியை எவ்வாறு பயன்படுத்துவது - How to use ginger in Tamil
இஞ்சி மிகவும் பொதுவாக ஒரு மசாலாப் பொருளாக, மற்றும் ஒரு சுவையூட்டும் காரணியாகப் பல்வேறு ஆசிய உணவு தயாரிப்பு முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இஞ்சியின் நறுமணம் மிக்க சுவையானது, இஞ்சி மிட்டாய், மாவுப்பண்டங்கள், கேக்குகள், மற்றும் இஞ்சி சார்ந்த இனிப்பு வகைகளின் பிரத்யேக அடையாளமாக இருக்கிறது. மேலும் அது, இஞ்சி மதுவின் முதன்மையான நறுமண சுவையூட்டும் பொருளாகவும் இருக்கிறது. தோல் அழற்சி மற்றும் நோய்த்தொற்றுக்களை குறைப்பதற்கு, இஞ்சி எண்ணெய் மேற்பூச்சாகத் தடவப்படுகிறது.
கரம் மசாலா எனப்படும் பிரபலமான மசாலா கலவையின் முக்கிய உட்பொருட்களில் ஒன்றாக இஞ்சிப் பொடி இருக்கிறது. மேலும் அது, பானக்கம் (வெல்லம் மற்றும் உலர்ந்த இஞ்சியைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்திய பானம்) போன்ற பானங்கள், மற்றும் பல்வேறு உணவுகளில் ஒரு பிரத்யேகமான காரத்தை அளிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இஞ்சி மாத்திரைகள் மற்றும் குழாய் மாத்திரைகள் ஆகியவையும், பல்வேறு ஆரோக்கியம்-தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
எவ்வாறு இஞ்சித் தண்ணீர் தயாரிப்பது
இஞ்சித் தண்ணீர் அல்லது இஞ்சித் தேநீர், செரிமான அசௌகரியத்துக்கான வீட்டு நிவாரணியாக, மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒன்று ஆகும். இஞ்சி, எலுமிச்சை மற்றும் தேன் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், உடல் எடையைக் குறைக்கவும் கூட பயன்படுத்தப்படுகிறது. சொல்லப் போனால், ஏராளமான பிரபல நிறுவனங்கள், தங்கள் சொந்த தயாரிப்பாக தேன், இஞ்சி கலந்த தேநீர் அல்லது எலுமிச்சை, இஞ்சி மற்றும் தேன் கலந்த தேநீர் ஆகியவற்றை விற்பனை செய்கின்றன. ஒரு சமீபத்திய ஆய்வின் படி, இஞ்சி மற்றும் பசுமை தேநீர், அவை தனியாக வெளிப்படுத்தும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு செயல்பாட்டுடன் ஒப்பிடும் பொழுது, இரண்டும் சேர்ந்து மிகவும் வலிமையான செயல்பாட்டினை வெளிப்படுத்துகின்றன. இஞ்சித் தண்ணீர் தயாரிக்கும் ஒரு எளிய வழிமுறை இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது:
- ஒரு பாத்திரத்தில் இரண்டு கோப்பை அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.
- ஒரு சிறு துண்டு இஞ்சி விழுதினை கொதிக்கும் தண்ணீரில் போடவும்.
- அதை 5-6 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விடவும்.
- அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி, அந்தத் தண்ணீரை வடிகட்டி, பின்னர் வெதுவெதுப்பான சூட்டில் அருந்தவும்.
உங்கள் இஞ்சி தேநீரின் நுண்ணுயிர் எதிர்ப்பு, மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்க, மற்றும் அதன் சுவையை மேலும் அதிகரிக்க, உங்கள் இஞ்சி தண்ணீரில், நீங்கள் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறும் கூட கலந்து கொள்ளலாம்.
ஒரு நாளுக்கு எவ்வளவு இஞ்சி எடுத்துக் கொள்ளலாம் - How much ginger can be taken per day in Tamil
சில மருத்துவ ஆய்வுகளில், எந்த வித குறிப்பிடத்தகுந்த பக்க விளைவுகளும் இன்றி, ஒரு நாளுக்கு 1-3 கிராம் அளவு இஞ்சிப் பொடி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இஞ்சி எடுத்துக் கொள்ளும் பொருத்தமான அளவானது, தனிநபரின் உடல் அமைப்பு மற்றும் அறிகுறிகளைப் பொறுத்து இருக்கும்.
இஞ்சியின் பக்க விளைவுகள் - Ginger side effects in Tamil
- இஞ்சி, இயற்கையில் ஒரு வெப்பமூட்டும் மூலிகையாகும். அதனால், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு அல்லது பிற வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக் காரணமாகக் கூடும்.
- இஞ்சி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, நீங்கள் இயற்கையாகவே குறைந்த இரத்த அழுத்தத்தைக் கொண்டிருந்தால், அல்லது இரத்த அழுத்தக் குறைப்பு மாத்திரைகளை எடுத்துக் கொண்டு இருந்தால், இஞ்சியைத் தவிர்ப்பது மிகவும் நல்லது ஆகும்.
- ஒருவேளை நீங்கள் வேறு ஏதேனும் வகை மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால், எந்த ஒரு வடிவத்திலும் இஞ்சியை எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் நல்லது ஆகும்.
- இஞ்சி, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் காலை நேர சுகவீனத்தின் அறிகுறைகளைக் குறைக்க உதவிகரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், கர்ப்ப காலத்தின் போது இஞ்சி எடுத்துக் கொள்ளும் பொழுது, கண்டிப்பாக ஒரு மிதமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.
Medicines / Products that contain Ginger
- Myupchar Ayurveda Kanchnar Guggulu - ₹312
- Myupchar Ayurveda Chandraprabha Vati - ₹359
- Myupchar Ayurveda Ashokarishta - ₹359
- Myupchar Ayurveda Nimbadi Churna Tablet - ₹450
- Dhootapapeshwar Drakshovin Special Tonic - ₹195
- Kerala Ayurveda Nimbadi Kwath 200ml - ₹130
- Planet Ayurveda Yograj Guggul (120) - ₹550
- Planet Ayurveda Kanchnaar Guggul - ₹550
- Kofol Chewable Tablets Pack of 3 (60 Tablets Each) - ₹115
- Planet Ayurveda Kishore Guggul - ₹550
- Aimil Amycordial Tablet Pack of 3 (30 Tablet Each) - ₹461
- Baidyanath Vat Gajankush Ras Tablet - ₹92
- Dhootapapeshwar Kanchanar Guggul - ₹162
- Baidyanath Lavan Bhaskar Churna 60gm - ₹55
- Dhootapapeshwar Bhaskar Lavana Choorna 60gm - ₹82
- Baidyanath Shringarabhra Ras - ₹83
- Planet Ayurveda Agnitundi Vati - ₹550
- Baidyanath Badam Pak 100gm - ₹311
- Kofol Chewable Tablets Pack of 8 (60 Tablets Each) - ₹300
- Baidyanath Kasturi Bhairav Ras - ₹1190
- Dhootapapeshwar Shwasakuthar Rasa (60) - ₹122
- Kerala Ayurveda Amruthotharam Kashayam Tablet - ₹380
- Baidyanath Gokshuradi Guggulu - ₹179
- Baidyanath Kankayan Bati Gulm - ₹78
- Baidyanath Kafkuthar Ras (80) - ₹123
- Kofol Syrup 100ml - ₹82
- Baidyanath Badam Pak 50gm - ₹175
- Baidyanath Vatrina Tablet - ₹194
- Dhootapapeshwar Hingwashtak Choorna 60gm - ₹145
- Kerala Ayurveda Sahacharadi Kwath 200ml - ₹129
- Baidyanath Chopchinyadi Churna 60gm - ₹128
- Dhootapapeshwar Punarnava Mandoora (60) - ₹185
- Dhootapapeshwar Tapyadi Loha - ₹560
- Baidyanath Avipattikar Churna for Hyper Acidity - ₹191
- Baidyanath Medohar Vidangadi Loha - ₹89
- Planet Ayurveda Aamvatantak Churna - ₹380
- Baidyanath Lavan Bhaskar Churna 120gm - ₹71
- Baidyanath Laghusutshekhar Ras - ₹134
- Baidyanath Kafkuthar Ras (40) - ₹123
- Baidyanath Chyawan Fit Sugarfree - ₹404
- Baidyanath Punarnavadi Guggulu - ₹189
- Dabur Camne Vid Tablet - ₹574
- Baidyanath Shothari Lauh - ₹149
- Kerala Ayurveda Gandharvahasthadi Kwath - ₹100
- Dhootapapeshwar Tribhuvankeerti Rasa (50) - ₹180
- Kerala Ayurveda Vyoshadi Vatakam - ₹45
- Himalaya Bonnispaz Drops - ₹61
- Kerala Ayurveda Punarnavadi Kwath - ₹130
- Planet Ayurveda Sanjeevani Vati - ₹550
- Kerala Ayurveda Rasnerandadi Kwath Tablets - ₹645
மேற்கோள்கள்
- Bode AM, Dong Z. The Amazing and Mighty Ginger. In: Benzie IFF, Wachtel-Galor S, editors. Herbal Medicine: Biomolecular and Clinical Aspects. 2nd edition. Boca Raton (FL): CRC Press/Taylor & Francis; 2011. Chapter 7.
- United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 11216, Ginger root, raw. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
- Lacroix R, Eason E, Melzack R. Nausea and vomiting during pregnancy: A prospective study of its frequency, intensity, and patterns of change. Am J Obstet Gynecol. 2000 Apr;182(4):931-7. PMID: 10764476
- Pongrojpaw D, Somprasit C, Chanthasenanont A. A randomized comparison of ginger and dimenhydrinate in the treatment of nausea and vomiting in pregnancy. J Med Assoc Thai. 2007 Sep;90(9):1703-9. PMID: 17957907
- Ozgoli G, Goli M, Simbar M. Effects of ginger capsules on pregnancy, nausea, and vomiting. J Altern Complement Med. 2009 Mar;15(3):243-6. PMID: 19250006
- Thomson M, Corbin R, Leung L. Effects of ginger for nausea and vomiting in early pregnancy: a meta-analysis. J Am Board Fam Med. 2014 Jan-Feb;27(1):115-22. PMID: 24390893
- National Health Service [Internet]. UK; Motion sickness.
- Grøntved A, Hentzer E. Vertigo-reducing effect of ginger root. A controlled clinical study. ORL J Otorhinolaryngol Relat Spec. 1986;48(5):282-6. PMID: 3537898
- Holtmann S, Clarke AH, Scherer H, Höhn M. The anti-motion sickness mechanism of ginger. A comparative study with placebo and dimenhydrinate. Acta Otolaryngol. 1989 Sep-Oct;108(3-4):168-74. PMID: 2683568
- Stewart JJ, Wood MJ, Wood CD, Mims ME. Effects of ginger on motion sickness susceptibility and gastric function. Pharmacology. 1991;42(2):111-20. PMID: 2062873
- Martin R Tramèr. Treatment of postoperative nausea and vomiting. BMJ. 2003 Oct 4; 327(7418): 762–763. PMID: 14525850
- Jamal Seidi, Shahrokh Ebnerasooli,2 irous Shahsawari, Simin Nzarian. The Influence of Oral Ginger before Operation on Nausea and Vomiting after Cataract Surgery under General Anesthesia: A double-blind placebo-controlled randomized clinical trial. Electron Physician. 2017 Jan; 9(1): 3508–3514. PMID: 28243400
- Chaiyakunapruk N et al. The efficacy of ginger for the prevention of postoperative nausea and vomiting: a meta-analysis. Am J Obstet Gynecol. 2006 Jan;194(1):95-9. PMID: 16389016
- Bloechl-Daum B, Deuson RR, Mavros P, Hansen M, Herrstedt J. Delayed nausea and vomiting continue to reduce patients' quality of life after highly and moderately emetogenic chemotherapy despite antiemetic treatment.. J Clin Oncol. 2006 Sep 20;24(27):4472-8. PMID: 16983116
- Alizadeh-Navaei R et al. Investigation of the effect of ginger on the lipid levels. A double blind controlled clinical trial. Saudi Med J. 2008 Sep;29(9):1280-4. PMID: 18813412
- Ghayur MN, Gilani AH. Ginger lowers blood pressure through blockade of voltage-dependent calcium channels. J Cardiovasc Pharmacol. 2005 Jan;45(1):74-80. PMID: 15613983
- A. S. Rex, Aagaard, J. Fedder. DNA fragmentation in spermatozoa: a historical review. Andrology. 2017 Jul; 5(4): 622–630. PMID: 28718529
- Yong Miao et al. 6-Gingerol Inhibits Hair Shaft Growth in Cultured Human Hair Follicles and Modulates Hair Growth in Mice. PLoS One. 2013; 8(2): e57226. PMID: 23437345
- Parvin Rahnama. Effect of Zingiber officinale R. rhizomes (ginger) on pain relief in primary dysmenorrhea: a placebo randomized trial. BMC Complement Altern Med. 2012; 12: 92. PMID: 22781186
- KALRA M, KHATAK M, KHATAK S. Cold And Flu: Conventional vs Botanical & Nutritional Therapy. International Journal of Drug Development & Research | Jan-March 2011 | Vol. 3 | Issue 1